திங்கள், 2 டிசம்பர், 2019

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்பது உண்மை அறிவு என்பதாகும் .

உண்மை அறிவு எங்கு இருக்கிறது ?

உண்மை அறிவு ஆன்மா என்னும் உள் ஒளியில் இருக்கின்றது .

அதை அறிந்து கொள்வது எப்படி !?

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும் சத்விசாரம் என்னும் மனத்தாலும் அறிய வேண்டும் .

ஜீவகாருண்யம் என்றால் என்ன ?

பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு  தயவு,கருணை, இரக்கம் கொண்டு ,நம்மால் முடிந்த அளவுக்கு உபகாரம் செய்வது ஜீவ காருண்யம் என்பதாகும்.

சத்விசாரம் என்றால் என்ன ?

நம்முடைய ஆன்மாவின் உள்ளே உண்மையான அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் உள்ளது ,அதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதை எப்படி அறிவது,?

நம்முடைய மனம் புத்தியைக் கொண்டு செயல்படுகின்றது .புத்தி என்பது மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், இவைகள் நான்கும் புறத்தில் உள்ள அழியும் பொருள்களையே தேடும் .ஆகவே தேடும் பொருள்களும் அழிந்து விடும் அதை தேடும் மனிதர்களும் அழிந்து விடுவார்கள் .

ஆன்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது அறிவு என்பதாகும்,அதுதான் உண்மை அறிவு என்பதாகும்.ஆன்ம அறிவை அறிந்து கொண்டவர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதாகும்.அறிவால் கிடைக்கும் பொருள் அருள் என்பதாகும் .

ஆன்மாவும் அழியாது,அதில் இருந்து தோன்றும் அறிவும் அழியாது, அறிவால் கிடைக்கும் அருள் என்னும் பொருளும் (திரவம் )அழியாது அழியாத பொருளைப் பெறுவதே ஞானம் என்பதாகும்.

ஆதலால் பொருளைத் தேடி வெளியே செல்லும் மனத்தை அடக்கி ஆன்மா இருக்கும் இடமான புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.

எப்படி செலுத்த வேண்டும் ?

அதற்கு ஞானம் என்று பெயர் ! ஞானம் என்பது நான்கு பிரிவுகளாக உள்ளன்,
.
அவைகள் '--*ஞானசரியை* *ஞான கிரியை* ஞான யோகம்* *ஞானத்தில் ஞானம்* என்பதாகும் .

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு முதல் சாதனம் ஜீவகாருண்யம்,இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் .

முதல் சாதனம் ஜீவகாருண்யம் ;--ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உண்டாகும் .பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை,போன்ற துன்பங்கள் வரும்போது நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவற்றைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும்.

இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது  *ஞான சரியை* என்பதாகும்.

ஞான சரியை என்பது ;--புறத்தில் செல்லும் மனத்தை வெளியில் செல்ல விடாமல் ஆன்மாவில் செலுத்த வேண்டும் ,இதுவே சுத்த சன்மார்க்க தியானம்...சாதனம்  என்பதாகும்.

அப்படி இடைவிடாது செய்து வந்தால் ஞான சரியையில் இருந்து ,*ஞானகிரியை,ஞானயோகம்,
ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து கொண்டே இருக்கும்*

இறுதியில் இருக்கும் ஞானத்தில் ஞானம் என்னும் கதவு திறந்தால் அருள் என்னும் அமுதம் பூரணமாக கிடைக்கும். அதற்கு அருள் பூரணம் என்று பெயர்

அந்த அருள் பூரணத்தை பெறுபவர்கள் எவரோ அவர்களே மரணத்தை வெல்ல முடியும்.இதுவே ஞானம் என்பதாகும் இதுவே ஞான அறிவு என்பதாகும்.இதுவே அருள் சித்தி என்பதாகும் .இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும் .அதுவே சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்

உலகில் தோன்றிய அருளாளர்கள் சத்விசாரம் செய்து முத்தி அடைந்தார்கள் *வள்ளல்பெருமான் மட்டுமே ஜீவகாருண்யத்தையும்,சத்விசாரத்தையும் முழுமையாக கடைபிடித்து முத்தி,சித்திகளைப் பெற்று ஞானம் என்னும்,என்றும் அழியாத நிலைப்பெற்ற  ஞானத் தேகத்தை பெற்றவராகும்*

நாமும் வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்ந்து ஞானம் என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்.

ஞானம் மூன்று வகைப்படும் !


அவை ;--*உபாய ஞானம் .உண்மை ஞானம் ...அனுபவ ஞானம்* 

இவற்றின் தாத்பரியம்;--

நட்சத்திரம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் !.

சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் அறிவே உண்மை ஞானம் !.

எல்லா வஸ்துக்களையும்  தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவ ஞானம் ! .

காட்சி ;--

ஒரு வஸ்துவை அதன் நாமம் ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் ! .

உருவமாக ( கூடமாக ) அறிதல் கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் !.

உருவம் இன்னதென்று அறிதல் தெரிதல் ஜீவக் காட்சி ஜீவ அறிவு என்பதாகும்!.

எதையும் தானாக அறிதல் ஆன்மக் காட்சி ஆன்ம அறிவு என்பதாகும் !.

இதற்குத் *தோன்றும் அறிவு .
*தோற்றுவிக்கும் அறிவு ...பதிஅறிவு என மூன்று அறிவு நமக்குள் இயங்கிக் கொண்டு உள்ளது !.

ஆதலால் ;--ஒரு வஸ்துவின் இடத்தில் பற்றுதல் வைப்பது அவா என்றும் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லப்படுவதாகும் .!.

அதை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது (எழுந்தது ) ஆசை என்று சொல்லப்படுவதாகும் !.

அந்த ஆசையை அதன் மயமாதல் காமம் என்று சொல்லப்படுவதாகும் !. .

அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம் என்று சொல்லப்படுவதாகும் !

எந்த வஸ்து இடத்திலும் மோகமாதி இன்றி அவா மயமாய் நிற்றல் வேண்டும்!

அதுவே அனுபவ ஞானம் என்பதாகும்.! .

அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற உரிமையை அறிதலே அருள் அறிவு என்பதாகும்.!

அருள் அறிவு விளங்கும் போது அனுபவ ஞானம் தோன்றும் !.

அனுபவ ஞானமே இறைவனை அடையும் துவாரமாகும் !.

ஞானத்தில் சிறந்தது,...உபாயத்தை அறிந்து,...உண்மையை அறிந்து  ..அனுபவ ஞானத்தை பெறுதலே மரணத்தை வெல்லும் வழியாகும் .

இதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

சிந்திப்போம் செயல்படுவோம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு