ஞாயிறு, 1 டிசம்பர், 2019

கொலை மூன்று வகைப்படும் !

வள்ளலார் உயிர்க்கொலையை பற்றி கடுமையாக சாடுகின்றார்.

உயிர்க்கொலை  மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றது !

1. கோபத்தால் செய்யப்படும் கொலை.

2. உணவுக்காக செய்யப்படும் கொலை

3 மூடபக்தியால் செய்யப்படும் கொலை ..

கோபத்தால் செய்யப்படும் மனிதக் கொலையைக் கண்டிப்பதற்கு
சட்டங்கள் இருக்கின்றன.
காவல்துறை இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கின்றன. அரசின் சட்டதிட்டங்கள் இருக்கிறது.

அனால் உணவுக்காகச் செய்யப்படும் கொலைகளையும், மூட்பக்தியினால் செய்யப்படும் கொலைகளையும் கேட்பதற்கு தடுப்பதற்கும் சட்டமும் இல்லை. காவல்துறையும் இல்லை.நீதி மன்றபமும் இல்லை.அரசாங்க சட்டதிட்டங்களும்.வேறு திட்டமும் எதுவும் இல்லை.

கேள்விகள் கேட்பார் இல்லாத இக்கொலைகளுக்கு வாயில்லாப் பிராணிகளே பலியாகின்றன.

மனிதன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறான்.

கொடிய விலங்குகள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்கின்றன.

ஆனால் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாத சாதுவான விலங்குகள், பறவைகள்.கடல்வாழ் உயிர்இனங்கள் யாவும் உணவுக்காகவும்  மூட பக்தியாலும் பலியாகின்றன.கொலைசெய்யப்படுகின்றது.

எனவே அனைத்து வகையான உயிர்வதை செய்வதையும் தடை செய்வதற்கும், தமிழக அரசும் ,மத்திய அரசும் சட்டதிட்டங்களும் கொண்டு வரவேண்டும்.

 தாவர உணவின் உயர்வையும் முக்கியத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வாயில்லாத உயிர்களை தடுப்பது நடைமுறை சாத்தியம்தான்.பெரிய சிரமம் ஒன்றும் இல்லை.

இவற்றை அரசும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் உயிர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கலாம்

ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ஆன்மீகவாதிகளும் முதலில் உயிர்க்கொலை செய்வதையும்.புலால் உண்ணாமலும்  கடைபிடிக்க வேண்டும்.

உண்மையை உணர்ந்து
மூட நம்பிக்கையை கைவிட வேண்டும்.அவர்களே தவறு செய்யும்போது மக்கள் எப்படி திருந்துவார்கள்.

வள்ளலார் பாடல் !


இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை மனிதன் பல கருவிகளைக் கொண்டு கொலை செய்தும் பல கருவிகளை வைத்து பிடித்தும் உணவிற்காக படுகொலை செய்து வாழ்கிறான்.

இதைவிடக்கொடுமை கடவுள் பெயரால் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதாக கூறி அறியாமையால் ஆடு.மாடு.கோழி போன்ற உயிர்இனங்களை கொடூர கொலை செய்து உணவாக உட்கொள்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்து வள்ளலார் மிகவும் வேதனைப்படுகின்றார்.

வள்ளலார் பாடல் ! 

நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.! 

இவற்றை தடுத்து நிறுத்தாத அரசை கண்டித்து வள்ளலார் பல பாடல்களில் பதிவு செய்துள்ளார்.

இதைத்தான் வள்ளல்பெருமான் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்றார்.

மேலும்

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய். ! 

உயிர்கள்மேல் கருணை இல்லாது ஆட்சி செய்யும் எந்த ஆட்சியாக இருந்தாலும் .அவை அழிந்துபோய் விட வேண்டும் என்கின்றார்.

அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மக்களும் உயிர்க்கொலை செய்வதை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்பதே வள்ளல்பெருமானின் அழுத்தமான சன்மார்க்க கருணைக் கொள்கையாகும்..

எல்லா உயிர்களையும் படைத்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

வள்ளலார் பாடல் !



உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும்.தெய்வ குற்றம் என்றும்.பாவம் என்றும்.பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் மக்களுக்கு போதிக்க வேண்டும்.

உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும் மனிதனின் மரணத்திற்கு காரணம் என்று வெளிப்படையாக சொன்னவர் வள்ளலார்.

உலக உயிர்களை காப்பாற்றினால் உங்கள் உயிர் பாதுகாக்கப்படும் என்று வள்ளுவரும் வள்ளலாரும் இரண்டு மாபெரும் அருளாளர்கள் மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்கவேண்டும் என்பது வள்ளலாரின் அருள் வாக்காகும்.

இயற்கை உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை.இயற்கை சட்டத்திலும் இடமில்லை.

  • உலக மக்களின் துன்பம் துயரம் அச்சம் பயம் நோய் இறுதியில் மரணத்திற்கு காரணமே உயிர்கொலையும் மாமிசம் உண்ணும் பழக்கமுமே முக்கிய காரணமாகும்.என்பதை மக்கள் அறிவால் அறிந்து கொண்டு வாழ்வதே நற்பண்பாகும்.

வள்ளல்பெருமானின் அருள்வாக்கை உலக மக்களும் உலக ஆட்சியாளாளர்களும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.வாயில்ல்லாத வாய்பேசமுடியாத உலக உயிர்கள் காப்பாற்றப்படவேண்டும்  .இதுவே இந்த காலக்கட்டத்தில் ஆட்சியாளர்கள் செய்யும் அரும்பணியாகும்.அறப்பணியாகும்.

எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் பண்பு வளரவேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு