புதன், 30 அக்டோபர், 2019

இறைவனை அறிவது எங்கனம் !

இறைவனை அறிவது எப்படி !

மனித அறிவால் இறைவனைக் காணமுடியாது.

எல்லாம் வல்ல பரம்பொருளான
அருட்பெருஞ் ஜோதியாய் விளங்கிக் கொண்டும் அருள் வழங்கிக் கொண்டும் இருக்கும் இடம்..

வள்ளலார்பாடல் !

 எல்லாந்தான்  எல்லாம் வல்லதுவாய்
எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்

சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த

வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்

செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.!

எல்லாம் வல்லதுவாய் என்றால் ?எவைக்கும் ஈடூ இணை இல்லாதது என்று பொருள்.

அதற்குமேல் ஒன்றும் இல்லை. என்றும் எக்காலத்தும் விளங்கிக் கொண்டும்.நிலையானதும். எல்லா அண்டங்களையும் பொருள்களையும் உயிர்களையும் படைத்து தன் அருள் வல்லபத்தால் இயங்கி இயக்கிக்  கொண்டு இருக்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே.

திருசிற்றம்பலம் என்னும் அருட்பெருவெளியில் தன்னைத்தானே இயங்கி அருள் வழங்கும் ஒரே கடவுளாகும்.ஒரே தெய்வமாகும்.

அதுவே
*இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்
இயற்கை இன்பம்*

*எல்லாமே இயற்கையாய் உள்ளதுவே அருட்பெருஞ்ஜோதி யாகும்*

அந்த ஒப்பற்ற உயர்ந்த கடவுளை சொல்லாலும் பொருளாலும் மனித அறிவுக்கு தோன்றிய அறிவாலும்.அவர்கள் கண்டுபிடித்த
அளக்கும் கருவிகளாலும்  அளக்கவோ.கணக்கிடவோ. பார்க்கவோ. அங்கு செல்லவோ முடியாது.

*அது அளக்க அளக்க விரிந்து கொண்டே இருக்கும் தன்மை உடையது*. நெருங்கவே முடியாது.

அந்த பரம்பொருள் எல்லா ஆன்மாக்களிலும் உள் ஒளியாக உள்நின்று இயங்கிக் கொண்டுள்ளது.

ஆன்மாவில் அருள் வெளிப்படும் போது மட்டுமே காணமுடியும்.அந்த அருள் ஐவகை சுவையோடு இருக்கும்.

*ஐந்தாவதாக உற்பத்தியாகும் அமுதம் மவுனா அமுமாகும்.இவை பக்குவ ஆனுபவ உணர்ச்சியால் கிடைக்கும் அமுதசுவையாகும்*.

அந்த அமுத்த்தை பெற்றவர் எவரோ அவரே எல்லா வல்லபமும் பெற்ற வல்லாளர்.

*வல்லாளர் அனுபவத்தே விளங்கும் என்கிறார் .அந்த வல்லாளர்  யார் ?*

எத்துனையும் பேதம் இல்லாது எல்லா உயிர்களையும் ஒன்றாகவே நினைந்து வாழ்பவர் எவரோ அவரே அனைத்தும் தெரிந்த வல்லபம் பெற்ற வல்லாளர் என்பவராகும்.

அந்த வல்லபம் பெற்றவரால் மட்டுமே அருளைப் பெற முடியும்.மரணத்தை வெல்லமுடியும்.அவருக்கு மட்டுமே அருள் அனுபவம் கிடைக்கும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகித் தன்னை மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த அருள் அனுபவம் பெற்ற ஆன்மாக்கள். அருட்பேரொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போல் சொல்லாத இடங்களுக்கும் செல்லும் ஆற்றல் பெறும் தகுதியைப் பெறமுடியும் என்கிறார் வள்ளலார்.

சன்மார்க்கிகளாய் இருக்கும் நாம் வெளி வேடம் போடாமல்.குற்றம் குறைகள் செய்யாமல்.பிறர் பொருளைத் தொடாமல்.உலகப்பற்று எதிலும் பற்று வைக்காமல் .வள்ளலார் நமக்கு போதித்த .உண்மை ஒழுக்க நெறியை கடைபிடித்து .எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு.

சத்விசாரம் பர உபகாரம் இடைவிடாது செய்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார். நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களிக்கலாம்.

வள்ளலார் கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் என்பார்.

நாமும் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று கடவுளைக் கண்டு பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

கடவுளைக் காணலாம் களிக்கலாம் கலந்து கொள்ளலாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு