வியாழன், 28 நவம்பர், 2019

ஆன்மீகம் எவ்வாறு உள்ளன ?

ஆன்மீகம் எவ்வாறு உள்ளன ?

இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கம் அல்லை !

ஆன்மீகம் என்பது நம்மை இயக்கும் ஆன்மாவை அறிந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து பேரின்ப சித்திப்பொருவாழ்வு வாழ்வதே ஆன்மீகம் என்பதாகும்.

ஆனால் இன்று உலகம் முழுவதும் பொருள் (பணம்) சம்பாதிக்கும் வழியிலேயே ஆன்மீகம் சென்று. கொண்டுள்ளது.

*பொருள் இருக்கும் இடத்தில் இருள் சூழ்ந்து கொள்ளும்*  என்பதை உணர்ந்து சிந்திக்க தெரிந்து கொள்ளாமல்  பண்ணாத தீமைகள் எல்லாம் பண்ணிக் கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் பாடல் !


நம்மைப்படைத்து இரவும் பகலும் இடைவிடாது இயக்கிக் கொண்டு இருக்கும் உண்மையானக் கடவுள் ஆன்மாவிலே அமர்ந்து இருக்க.புறத்திலே பண்ணாத தீமைகளான வழிபாடு.சரியை.கிரியை.யோகம்.போன்ற பூசைகள் பண்ணி.உடம்பை வருத்தி.உயிரை அழித்து.ஆன்மலாபம் பெற்றுக்கொள்ளாத செயல்கள் எல்லாம் செய்து. காடு மேடு எல்லாம் அலைந்து வீண்போது போக்கிக் கொண்டுள்ளீர்கள்..

உண்மையான இறைவன் யார் என்று தெரியாமல்.தெரிந்து கொள்ளாமல் மனம்போனபடி சென்று இறுதியில் துன்பம்.துயரம்.அச்சம்.பயம் வந்து.நரை திரை.பிணி.மூப்பு.மரணம் வரும்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார் வள்ளலார்.

*பித்துலகீரே என்கிறார் அதன் அர்த்தம் பைத்தியக்கார்ர்கள் என்கிறார்*

வள்ளலாருக்கு முன்னாடி பல்லாயிரம் ஆன்மீக சிந்தனையாளர்கள் அறிவுசார்ந்த அருளார்கள். மற்றும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அளவுகடந்த சமயங்களும் மதங்களும்.மற்றும் ஆலயங்கள் (கோவில்கள்).சர்ச்சுகள்.மசூதிகள்.
பிரமீடுகள் போன்றவை உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

அதனால் மக்களுக்கு என்ன பயன் அடைந்துள்ளோம் என்பது தெரியாமலே அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

உலகத்தை திருத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

மேலும் வள்ளலார் சொல்லுகிறார் ! 



இதுவரையில் ஆன்மீக பற்று உள்ளவர்கள் ஒருவரும் தேர்ந்தபாடில்லை. ஆன்மாவை கண்டவர்கள் இல்லை.ஆன்மாக்களைப் படைத்த ஆண்டவரை தொடர்பு கொள்ளவும் இல்லை.பூரண அருளைப்பெறவும் இல்லை எல்லாருமே இறுதியில் மாண்டு போகின்றார்கள்.

ஒருசில அருளாளர்கள் பக்தியில் யோகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு முக்தி பெற்று சொர்க்கம்.வைகுண்டம்.கைலாயம் பரலோகம் போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டதாக சொல்லுகிறார்கள்.மக்கள் அவற்றை நம்பிக்கொண்டும் உள்ளார்கள். எல்லாமே நம் உடம்பிலே உள்ளன.

அவர்கள் ஆன்மாவை தொடர்பு கொள்ளாமல் ஜீவனைத் தொடர்பு கொண்டு உயிரை அடக்கி உடம்பை அழிக்காமல் சித்தி வல்லபத்தால் கொஞ்சகாலம். நீண்டகாலம் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் சித்தாடல் புரிகின்றார்கள்.அதனால் தான் அவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர்.

சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள்.ஜீவனை  அறிந்து அடக்கத் தெரிந்தவர்கள் முத்தர்கள்.

ஆன்மாவை அறிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்புகொண்டு முழு அருளைப்பெற்று மரணத்தை வென்றவர்கள் ஞான சித்தர்கள்.

*அதனால் தான் ஞானசபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே என்று அழுத்தமாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார்*.

மேலும் மாணிக்கவாசர்.திருமூலர் போகர்.அகத்தியர்.அருணகிரியார்.
கொங்கணர்.தாயுமானவர் பதஞ்சலியார் போன்ற எண்ணற்ற சித்தர்கள் மற்றும் பதினென் சித்தர்கள். ஞானிகள் தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து உள்ளார்கள்.

 தங்கள் உடம்பை ஆகாயமாக.காற்றாக.அக்கினியாக.
நீராக.மண்ணாக மாற்றி ஐந்து பூதங்களிலே கலந்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்து மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து அருளை பூரணமாகப் முழுமையாகப் பெற்றுதான் ஆண்டவருடன் கலக்க முடியும்.

பஞ்ச பூதங்களில் கலந்தவர்களைப்  பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !


மேலே கண்ட பாடலில் தெளிவாக புரியும்படி விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார். ஐந்து பூதங்களில் கலந்து கொண்டு வாழ்பவர்களின் வாழ்க்கையும் நிரந்தர பூரண பேரின்ப சித்தி பெருவாழ்வு அல்ல.அழியாத வாழ்க்கை அல்ல.

அவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து மரணத்தை வென்று பேரின்ப சித்திப்பெருவாழ்வே வாழ வருவார்கள் என்பதை வள்ளலார்.வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

எனவே நாம் உண்மைக்கடவுளைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளலார் ! 


  • எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
  • இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
  • கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
  • கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
  • நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
  • ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
  • செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே


  • சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.!

  • எனவே நாம் மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்ப
  •  கொள்ள வேண்டும். 

    நாம் அடைவது பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் .அதாவது இறைவன் குடிக்கொண்டு இருக்கும் இந்த உடம்பை அழிக்காமல் ஆன்மதேகமாக மாற்றி சுத்ததேகம்.பிரணவதேகம் ஞானதேகமாக மாற்றி அழியாமல் வாழ்வதற்கே  உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது.

    இதற்கு ஓரேவழி ஆன்மாவைத் தொடர்பு கொள்வதேயாகும்.

    *தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்.*

    தன்னை அறியும் தந்திரம் என்றால் என்ன ! 

    வள்ளலார் பாடல் ! 

    இரண்டாம் திருமுறையிலே தெளிவாக சொல்லி உள்ளார் ஊன்றி படிக்கவும்.!


    • தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
      தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
    • 2. நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
      நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 3. சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
      தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 4. இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
      இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
    • 5. தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
      சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
    • 6. போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
      போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 7. ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
      ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    • 8. அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
      ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
    • 9. வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
      வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    • 10. குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
      குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
    • 11. ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
      ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
    • 12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
      விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
    • 13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
      மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
    • 14. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
      ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    • 15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
      நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
    • 16. வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
      வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
    • 17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
    • 18. ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
      ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
    • 19. அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    • 20. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
      ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
    • 21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
      ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
    • 22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
      ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
    • 23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
      ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே

    அம்பரத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இம்பரமான ஆன்மாவிலே அமர்ந்து எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டுள்ளார். இதுவே தன்னை அறிதல் என்பதாகும்.

    மனித தேகம் பெற்றவர்கள் ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே சிறந்த தந்திரமாகும்.

    அந்த தந்திரம் எதனால் பெறக்கூடும் எனில் ஜீவகாருண்யத்தால் மட்டுமே பெறமுடியும் என்கிறார்.ஜீவகாருயத்தால் சத்விசாரம் என்னும் 
    ஆன்ம தொடர்பு உண்டாகும்.அதற்கு தடையாக உள்ள அனைத்தையும் அறிவைக் கொண்டு அகற்றவேண்டும்.

    வள்ளலார் பாடல் ! 



    மேலே கண்ட பாடலில் அகற்ற வேண்டியதை அகற்றி சிற்சபையில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

    *அகத்தில் உள்ள சிற்சபையில் விளங்கும் ஆன்ம புறக்காட்சியே வடலூரில் தோற்றுவித்துள்ள சத்திய ஞானசபையாகும்*.

    *எனவே ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே ஆன்மீகம் என்பதாகும்*.

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 
    கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

    அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 
    9865939896.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

    << முகப்பு