வியாழன், 21 மார்ச், 2019

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

வள்ளலார் கொடுத்த சவுக்கடி !

கடவுள் பல உண்டு என்பவருக்கும்.கடவுள் இல்லை எனபவருக்கும் சரியான பாடலால்  சவுக்கடி கொடுத்தவர் வள்ளலார்..

கடவுளின் உண்மைத் தெரியாமல் தத்துவங்களை கடவுள்களாக பாவித்து படைத்து ஆலய வழிபாட்டை உறுவாக்கினார்கள்..

ஆலயங்களைக் கட்டியவர்கள் அக்கால மன்னர்கள்...

மன்னர்களை.
அவர்களின் ஆட்சியை புகழ்ந்து  பாடி பேசி ஏமாற்றி அவர்களை நம்ப வைத்து  ஆலயங்களை எழுப்ப வைத்தது ஒரு கும்பல்..

தங்களுடைய சுய நலத்திற்காக வேதம் ஆகமம்.புராணம்.இதிகாசங்கள் போன்ற பொய்யான காவியங்களை கற்பனைகளாகப் படைத்து மக்களையும் .
மன்னர்களையும். கடவுளின் பெயரால்  நம்ப வைத்து ஏமாற்றி பிழைத்து கொண்டு வந்துள்ளார்கள்..
அவர்களுக்கு உயர்ந்த சாதி என்றும் உயர்ந்த பதவி என்றும் மன்னர்கள் கொடுத்து வந்தார்கள்.

கடவுள் பெயரால்.சாதி.சமய.
மதங்களைத் தனித்தனியே பிரித்து மக்களை.உயர்ந்த சாதி.தாழ்ந்த சாதி எனப்பிரித்து மக்களை அடிமைப் படுத்தி அலைய விட்டார்கள்..

ஒவ்வொரு சாதிக்கும்.சமயத்திற்கும்.மதத்திற்கும் தகுந்தாற்போல் கடவுளையும் பிரித்து வைத்து விட்டார்கள்...

அதிலே சைவக்கடவுள்.அசைவக்கடவுள் என பிரித்து வைத்து விட்டார்கள்.அதாவது உயிர்களை பலிவாங்கும் தெய்வங்கள்.
பலிவாங்காத தெய்வங்கள் என பிரித்து .ஒவ்வொரு தெய்வத்திற்கும் வெவ்வேறு பெயர்களை வைத்து நம்ப வைத்து விட்டார்கள்.

சுமார் ஐந்து ஆயிரம் ஆண்டுகளாக கடவுளின் உண்மைத் தெரியாமல்  இந்த மோசடி செயல்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன..

வள்ளலார் சகட்டுமேனிக்கு எல்லாத் தெய்வங்களையும் சிறு தெய்வங்கள் என்றும்.சிறு தெய்வ வழிபாடு வேண்டாம் என்றும் ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற வள்ளலார் வந்து வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று.கடவுளின் உண்மையை உலகிற்கு பறை சாற்றுகிறார்..

தெய்வங்கள் பலப்பல உண்டு என்பவர்களுக்கும் அவற்றைப் படைத்தவர்களுக்கும் .வழிபடுபவர்களுக்கும்.அறிவு தெளிவு இல்லை என்று வெளிப்படையாக  பாடலிலே பதிவு செய்கிறார்..

வள்ளலார் பாடல். !

 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கு அறிவு அருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

மேலே கண்ட பாடலிலே .அறிவு இல்லாமல் பல தெய்வங்களை வழிபாடு செய்து வணங்கி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மை அறிந்து கொள்ள அறிவை கொடுங்கள் என்று... உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யிடம் மக்களுக்காக வேண்டுகின்றார்.

மேலும் வேதம் ஆகமம் புராணம் இதிகாசங்கள் யாவும் பொய் அவற்றை நம்பாதீர்கள் என்பதை பாடலிலே பதிவு செய்கிறார்...

வள்ளலார் பாடல் !

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.?

என்னும் பாடலில்.

மக்களுக்கு உண்மையை சொல்லாமல் பொய்யானவற்றை சொல்லி மக்களை ஏமாற்றுவதால் என்ன பயன் அடையப் போகிறார்கள்.போகிறீர்கள் என்பதை தெளிவாக பறை சாற்றுகிறார்..

மேலும் பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்ற பாடலில் ...
எல்லா உலகத்திற்கும் *ஒரே கடவுள் தான் உண்டு அவரே அருட்பெருஞ்ஜோதி* யாக எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டு உள்ள அருள் ஆற்றல் படைத்த இயற்கை உண்மை என்னும் அருள் ஒளிதான் தனிப்பெரும் தலைமை கடவுள் என்பதை அறிந்திடாத.உணர்ந்திடாத .சமய மதவாதிகள்  பொய்யான சாத்திரங்களையும் அதற்குண்டான கடவுள்களையும் படைத்து எமது தெய்வம் .எமது தெய்வம் என்று பங்குபோட்டு வணங்கி வழிபாடு செய்து.. அவர்களும் அழிந்து.மக்களையும் அழிய வைத்து விட்டார்கள் ...

கடவுளின் உண்மையை தெரிவித்த வள்ளலார் மீது..சமய மதவாதிகள்  கடுமையான கண்டனம் தெரிவித்து.அவர் எழுதிய திருஅருட்பாவை மருட்பா என்று வாதம் செய்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தோல்வி அடைந்தார்கள்...

எனவே கலையை உரைக்க  வந்த கற்பனைக் கதைகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று..இருட்டில்  தவித்த  மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வள்ளலார்..

வள்ளலார் பாடல் !

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே

உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே

சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

மேலே கண்ட பாடலிலே கலை உரைத்த கற்பனையை நிலையானது என்றும் உண்மை என்றும் கண்மூடித்தனமாக மக்களை நம்ப வைத்த கற்பனைக் கதைகள் அனைத்தையும் மண்ணில் போட்டு புதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்...

இப்படி எவரும் சொல்லாத சொல்லமுடியாத உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்து உரைத்து.உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து...மக்கள் நல்வாழ்வு  வாழ்வதற்கு நல்வழிக் காட்டியவர் தான் வள்ளலார்...

கடவுள் இல்லை என்பவர்கள் !

சில பகுத்தறிவாளர்கள்.
மற்றும் நாத்தீகம் பேசுபவர்கள் கடவுள் இல்லை.இல்லவே இல்லை என்பவர்களுக்கு  வள்ளலார் சரியான பதிலடி கொடுக்கின்றார்...

வள்ளலார் பாடல் !

 கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.

2. சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

3. ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

4. ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.

5. மேருமலை உச்சியில்வி ளங்குகம்ப நீட்சி
மேவும்அதன் மேல்உலகில் வீறுமர சாட்சி
சேரும்அதில் கண்டபல காட்சிகள்கண் காட்சி
செப்பல்அரி தாம்இதற்கென் அப்பன்அருள் சாட்சி.

6. துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.

7. சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.

8. சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
இற்பகரும் இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.

9. வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.

10. அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.

11. **நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு**

மேலே கண்ட பாடலில்  இறைவனைப் பற்றியும் நம் உடம்பில் இறைவன் எவ்வாறு இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும் அனுபவித்து சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் ...

*நாத்திகம் சொல்கின்றவர் தம்நாக்கு முடைநாக்கு என்றும் அவர்கள் நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்கிறார்...*

*நாக்கு முடை நாக்கு என்றால் ஊமையன் என்பதாகும் ..*

*நாரிய பிண்ணாக்கு என்றால் மலம் என்பதாகும் .*.

*கடவுள் இல்லை என்பவன் ஊமையன் என்றும் அவன் நாக்கு ருசிக் கொள்வது மலம் தின்பதற்கு சமமானது  என்கிறார்..*

இதைவிட கீழ்த்தரமான வார்த்தைகளே கிடையாது...

*எனவே பல கடவுள் உண்டு என்று வழிபடுபவன் பைத்தியக்காரன் என்றும்..*

*கடவுள் இல்லை என்பவன் தன்னையே ஏமாற்றிக் கொள்பவன் என்றும்.*

*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ! ஆண்டவர் என்று அறிந்தவன் உண்மையான அறிவுள்ளவன் என்றும் புரிந்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*.

எப்படி இருப்பினும் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களையும் நம்மவர்களாக்கி கொள்வதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உரிமையாகும்.....
மனித நேயமாகும்.

உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும் உயிர்களும்.  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்டது  என்பதுவே உண்மையாகும்

சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்.

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு