ஞாயிறு, 24 மார்ச், 2019

அரசியல் எல்லோருக்கும் வேண்டும் !

அரசியல் எல்லோருக்கும் வேண்டும் !

நாம் எல்லோரும் அரசியல் சார்ந்துதான்  வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

அரசியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை..ஆன்மீகம் இல்லாமல் அரசியல் இல்லை..

உயிர் இல்லாமல் உடம்பு இல்லை .உடம்பு இல்லாமல் உயிர் இல்லை என்பது போல்..

சுத்த சன்மார்க்கிகளாகிய நமக்கும் நாட்டைக் காப்பாற்றும்  பொறுப்பு அதிகம் உள்ளது...

ஆன்மீகம் என்பதும் தூய்மையான அரசியல் என்பதும் மக்களுக்கு நன்மை செய்யும் பொறுப்பக்கள் கொண்டது...

சாதி சமய மதங்களின் கொள்கையால் தான் உலகம் முழுவதும் ஆட்சி அதிகாரங்களை சமய மதங்கள பிடித்ததுள்ளன.

அவர்களின் மூடநம்பிக்கை கொள்கையால் தான் நாடும். நாட்டு மக்களும் அழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கியுள்ளார்.

வள்ளலார் பாடல் !

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

*பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்*

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

*போருற் றிறந்துவீண் போயினார்* இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

*ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ*

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்..

மேலும் மக்களைக் காப்பாற்ற புனிதமுறு சுத்த சன்மாக்க நெறியைக் காட்டி அதன் கொள்கைகளை வகுத்து மக்களுக்குப் புரியும்படி விளக்கி.

மெய்ப்பொருளை விளக்கி.எல்லோரும் சுகநிலையுடன் வாழவேண்டும் என்பதற்காக

என்னுடைய  நல்லப்பிள்ளை செல்லைப்பிள்ளை என்பதால் இந்த பணியை.. உயர்ந்த பொறுப்பை ஏற்று செயல்படுவதற்காகவே   இவ்வளவு பெரிய மகத்தான வேலையை..

அதாவது உலக அருள் ஆட்சி பொறுப்பை உன்னிடம் ஒப்படைத்து உள்ளேன் என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்....

எனவே சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...

மக்களை நல்வழிப்படுத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளால் மட்டுமே முடியும்..

சாதி சமய மதமற்ற பொது சேவையால்  எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்றால் சுத்த சன்மார்க்கத்தால் மட்டுமே முடியும்..

 *நாம் உண்மையை எடுத்துச் சொல்ல பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.*..

ஏன் என்றால்

1874 -1-30 ஆம் நாள் வள்ளலார் சித்தி பெற்ற நாள்.

அந்த நாள் உலகிற்கு ஈடு இணையற்ற ஒரு பொன்னான சிறந்த நாள் ..

அன்றுதான் உலக அருள் ஆட்சி பொறுப்பை வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்குகிறார்...

வள்ளலார் சொல்லுகின்றார் !

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

 மேலே கண்ட பாடலில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் பறை சாற்றுகிறார்.

எனவே அண்டகோடிகளில் எல்லாம் வள்ளலார் தலைமையில் அருள் ஆட்சி நடந்து கொண்டுள்ளது..

இனிமேல் சமய மதங்களின் ஆட்சி அதிகாரங்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படும் என்கிறார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

*தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.!*

மேலும்


*பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே*

*சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்

தெல்லா உலகும் இசைந்தனவே* எம்பெருமான்

*கொல்லா நெறிஅருளைக் கொண்டு.!*

மேலும் பதிவு செய்கின்றார் !

*முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன*

*மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது*

பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.!

இப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் தெரிவிக்கின்றார்..

மேலும் !

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக சொல்லியுள்ளார்

*உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளாலே ...எனக்கு தனிப்பட்ட முறையில் அவரின் அருள் செங்கோல் வழங்கப்பட்டு உள்ளன என்கிறார்.*

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள சுத்த சன்மார்க்க அன்பர்கள் அரசியலிலும் ஆன்மீகத்திலும் தொடர்பு கொள்வது எந்த வித்த்திலும் தவறு இல்லை...

நல்லவர்கள் ஒதுங்கி இருப்பதால் தீயவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து நாட்டையே அழித்துக் கொண்டுள்ளார்கள்..

*நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது சுத்த சன்மார்க்கிகளால் மட்டுமே முடியும்..*

அந்த பொறுப்பை வள்ளலார் நம்மிடம் தந்து உள்ளார்.

கருணை இல்லாத ஆட்சியை அகற்றி கருணை உள்ள ஆட்சியை கொண்டு வருவதற்கு சுத்த சன்மார்க்கிகள் அயராது உழைக்க வேண்டும்..

*அதே நேரத்தில் அருளைப் பெறுவதற்கு சுத்த சன்மார்க்க கொள்கைகளை.தடம் மாறாமல் இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.*.

*நாம் சொல்வதை மக்கள் கேட்கும் அளவிற்கு அகமும் புறமும்  ஒழுக்கம் நிறைந்து அன்பும் தயவும் நிறைந்த வடிவமாக வாழ்ந்து காட்டி போதிக்க வேண்டும்...*

வள்ளலார் பாடல் !

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

*அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -* தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

*தெல்லோரும் வாழ்க இசைந்து.!*

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு