செவ்வாய், 12 மார்ச், 2019

ஆணும் பெண்ணும் தவறு செய்யக் காரணம் ?

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தவறு செய்ய முக்கிய காரணம்..

நம் உடம்பிற்கு உள்ளே செல்லும் ஒரே வழி வாய்தான்...

வாயின் வழியே தான் எந்த உணவாக இருந்தாலும் அனுப்ப முடியும்.

வாயைக் கட்டாதவன் வழி தவறி செல்வான் !

ஒவ்வொருவரும் உண்ணும் விகார உணவுதான் உணர்ச்சியை தூண்ட காரண காரியமாக  இருக்கின்றது.

அதிலும் மாமிச உண்பவர்கள் தவறு செய்ய தயங்கவே மாட்டார்கள்..

தாமச உணவு சாத்வீக உணவு என இரண்டு வகை உள்ளது...

சாத்வீக உணவான காய்கறிகள் கீரைவகைகள் உண்பவர்கள் உணர்ச்சியை கட்டுபடுத்துவார்கள்..

இப்போது உள்ள உணவு வகைகளான.மசால் சம்பந்தப்பட்ட மாமிசம்.கிழங்குவகைகள்.மாவு வகைகள்  சம்பந்தபட்ட எந்த வகை உணவாக இருந்தாலும் உண்பவர்கள் ..

தெரிந்தும் தெரியாமலும் தவறு செய்து கொண்டே தான் இருப்பார்கள்..

இப்போது டிவி சேனல்களில் கண்ட கண்ட உணவு முறைகளை செய்து காட்டி மக்களை படுகுழியில் தள்ளிக் கொண்டு உள்ளார்கள்...

அவர்கள் பணம் சம்பாதிக்க மக்களை தவறான உணவு முறைகளுக்கு கொண்டு செல்கிறார்கள்...

நாக்கை தேவை இல்லாத ருசிக்கு பழக்கி விட்டோம்..

நாக்கு ருசி கொள்வது நாரிய பிண்ணாக்கு என்பார் வள்ளலார்.

(நாரிய பிண்ணாக்கு என்பது மலத்தை குறிப்பதாகும்)

அதனால் பலவகைப்பட்ட ருசியை பழகிவிட்டோம்.அந்த ருசி கண்ட உணவுமுறைகளால் கேள்விப்படாத நோய்கள் வந்து மக்கள் அவதிப்பட்டு அழிந்து போகிறார்கள்..

இறுதியில் எதையும் சாப்பிட முடியாமல் கஞ்சி குடிக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள்..

உணவே மருந்து.மருந்தே உணவு என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.மறக்க வைத்துவிட்டார்கள்.

விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி...

ஒவ்வொரு மனிதர்களின் உண்ணும் உணவுக்கு தகுந்தாற்போல் உடம்பில் உண்டாகும்  இரத்தம் வேறுபடும்..சுக்கிலம் வேறுபடும் அதாவது விந்து வேறுபடும்..வீரியமுள்ள சுக்கிலத்தினால். ஆண் பெண் இருபாலரும் தவறு செய்ய தயங்கமாட்டார்கள்..

வீரியமுள்ள சுக்கிலத்தின் தன்மையானது  தவறு செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும்..

ஒழுக்கத்தைப் பற்றி மேடையில் பேசுபவர்களே அதிகம் பேர்  தவறு செய்பவர்களாகவே இருப்பார்கள்..

எனவே அவை  அவர்கள் குற்றம் அல்ல.அவர்கள் உண்ணும் உணவே எல்லாவற்றுக்கும் காரண காரியமாக இருக்கின்றுது..

எனவே வள்ளலார் தெளிவாக  சொல்லுவார்.

சோற்றாசையோடு காம சேற்றாசைப் படுவாரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்பார்.

காமத்தின் வேட்கையிலே இருப்பாரை கூற்றுவன் என்னும் எமன் சீக்கிரம் வந்து கொண்டுபோய் விடுவான் என்கிறார்...

நோய் வருவதற்கு காரணம் துன்பம் வருவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவேயாகும்..உணவினால்  உண்டாகும் இரத்தம்.அதில் இருந்து உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்துவே தவறு செய்வதற்கு காரண காரியமாகின்றது.

எனவேதான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் மேலோர்..

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார். !

காரமும் மிகுப்புளி சாரமும் கைப்போடே உப்போட கசப்போடு கூட்டி ஊரமுது உண்டு நீ ஒழியாதே என்பார்...

காரம் உப்பு புளிப்பு கசப்பு அதிகமாக உணவிலே சேர்த்துக் கொள்கிறோம்.

துவர்ப்பு இனிப்பு இரண்டையும் உணவில் சேர்க்க விட்டு விடுகின்றோம்..

மேலே கண்ட ஆறுசுவைகளில் சரி சமமாக உண்டால் நோய் வராது.துன்பம் வராது...

நமக்கும் கீழ் உள்ள மிருகங்கள் தாவரம் வகை உணவை உட்கொள்ளும்.யானை.குரை.ஆடு.மாடு.எருமை.ஒட்டகம் போன்றவைகள் ரொம்ப பலசாலியாகவும் மனிதர்களுடன் சேர்ந்து  பழகும் வகை சார்ந்த்தாகவும் இருக்கும்..

மாமிசம் உண்ணும் பழக்கம் உடைய.கரடி.புலி.சிங்கம் போன்ற மிருகங்கள் கரடுமுரடான காட்டில் வாழ்கின்றன..எந்த உயிரையும் அடித்து கடித்து கொன்று உண்ணும் பழக்க முடையதாக இருக்கின்றது...மனிதர்களோடு சேர்ந்து வாழாது...

இதில் இருந்து நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்...

உலகில் உள்ள எல்லா தவறுகள் நடப்பதற்கும் மற்ற எல்லாவற்றுக்கும் அடைப்படைக் காரணம் நாம் உண்ணும் உணவே காரணம் ...

காரணம் இல்லாமல் காரியம் நடக்காது...

உயர்ந்த அறிவுள்ள மனிதன் காரம்.உப்பு.புளிப்பு மற்றும் மசாலா கலந்த மசாலா உணவை உட்கொள்கின்றவன்  தாழ்ந்த அறிவுள்ள வனாக மாறிவிடுகிறான்..

அதனால் கொலை.கொல்லை.கற்பழிப்பு.
குடிபழக்கம்.தீவிரவாதம்.பயங்கரவாதம்.பொய் சூது.பொறாமை.ஏமாற்றுதல். .நாடுகடத்தல் .பணம் கடத்தல் . லஞ்சம்.லாவண்யும்.அரசியல் சூதாட்டம்.அதிகார அக்கரமகங்கள்..போன்ற எல்லாமே நடக்கும் நடந்து கொண்டே இருக்கும்...

உண்மை.நேர்மை.ஒழுக்கம்.சத்தியம். தர்மம்.பகுத்தறிவு .ஒற்றுமை.ஜீவகாருண்யம். மற்றும் ஆன்மநேய ஒருமைப்போடு போன்ற ஒழுக்க நெறிகளை பின்பற்ற வேண்டுமானால் சாத்வீக உணவை உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டால ..

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உயர்ந்தவர்களே !உயர்ந்த அறிவு பெற்றவர்களே !

நம்மைப் படைத்த இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அன்போடு ஆசையோடு ஏற்றுக்கொண்டு துன்பம் தராமல் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பார்.

மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே ! இறைவன் படைத்துள்ளார்.

உயர்ந்த அறிவுள்ள மனிதன் தாழ்ந்த நிலைக்கு செல்வதால் தானும் அழிந்து மற்றவர்களையும் அழித்து விடுகிறான்..

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு