வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஆடாதீர் சற்றும் அசையாதீர் !

வள்ளலார் பாடல் !

பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்

இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே

அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்

நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.!

மேலே கண்ட பாடலின் விளக்கம் புரிகிறதா ? அன்பர்களே...

பித்துலகர் மெச்ச பிதற்றி நின்ற பேதையனேன்.
என்கிறார் ..

இந்த மக்கள் உண்மை அறியாமல் .பொய்யை மெய்யாக நினைத்துக்கொண்டு.
அறியாமையால் பைத்தியக்காரத் தனமாக வாழ்த்து கொண்டு உள்ளார்கள்..அவர்கள் மெச்சும்படி பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளேன்.அவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு என்பின் தொடர்வார்கள் என்ற பேராசையில் எவ்வளவோ உண்மைகளை வரிசைப்படுத்தி சொன்னேன் ..

ஒருவரும் கேட்கவில்லை. உண்மை உணரவில்லை..
மூடமாகவே இருக்கிறார்கள்...

சாதி.சமய.மதம் போன்ற கொள்கையைவிட்டு வெளியே வரமுடியவில்லை...

என்னுடைய இச்சையெல்லாம் அறிந்துகொண்ட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..என்விருப்பபடி அருளை வாரிவழங்கி என்னைத் தன்னுடைய செல்லபிள்ளையாக ஏற்றுக்கொண்டார்..

அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன்..

எனக்கு இப்போது இந்த உலகத்தில்  அச்சம் எனபது எதுவுமே இல்லை..அருள் அமுதம் உண்டு மரணத்தை வென்றுவிட்டேன்..

இனிமேலாவது தங்களை காப்பாற்றிக் கொள்வார்களா ? உயர்ந்த மனித தேகத்தை அழித்துக் கொண்டே  உள்ளார்களே ! இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த தேகம் போனால் மீண்டும் இந்த தேகம் கிடைக்கும் என்பது உறுதி அல்ல... இவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாகவும்.வேதனையாகவும்.வருத்தமாகவும் இருக்கின்றது...

நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேன்..

இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுடன் இணைந்து கொண்டார்.என்
உடம்பில் கலந்து கொண்டார்..

என்னுடைய பேரானாந்த்திற்கு அளவே இல்லை ..அன்பு.அருள் ஆனந்தம் என்ற மகிழ்ச்சி யில் பொங்கி வழிகின்றேன்  என்கிறார் வள்ளலார்...

மக்கள் வள்ளலார் காலத்திலும்.வள்ளலார் உடன் இருந்தவர்களும் . அருள் பெற்று மரணத்தை வெல்லும் உண்மையை அறிந்து கொள்ளவில்லை..
இப்போது உள்ளவர்களும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்..

சன்மார்க்க என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு உள்ளவர்களும்...
புதியதாக சன்மார்க்கத்திற்கு வரும் மக்களையும் .சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதே தெரியாமல் தானும் குழம்பி வருபவர்களையும் குழப்பி விடுகின்றார்கள்..

எனவே இப்போது இந்த தருணம் புதியதாக வருபவர்கள் அறிவு தேடல் அதிகமாக உள்ளவர்களே வருகிறார்கள் ..
அவர்களுக்குச் சொல்ல விரும்பவது..நீங்கள் யார் பேச்சையும் கேட்காதீர்கள்.

வள்ளலார் எழுதிய திருஅருட்பா முழுவதும் படியுங்கள் ..உரைநடைப்பகுதி முழுவதும் படியுங்கள்.. வள்ளலார் எந்த எந்த காலகட்டத்தில். என்ன என்னவாறு சொல்லி உள்ளார்..அவர் எவற்றை எல்லாம் பின்பற்றச் சொன்னார்.எவற்றை எல்லாம்  விடச்சொன்னார்.
என்பதை நீங்களே தேர்வு செய்து பின்பற்றுங்கள்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீதுமட்டும் இடைவிடாது நம்பிக்கை கொண்டு ..
மூடநம்பிக்கை யை அகற்றிவிட்டு தேடுங்கள்.
உண்மையான விடை கிடைக்கும்.தேர்வில் வெற்றி பெறுவீர்கள்..

அதன்பின் ஆண்டவர் உங்களுக்கு நேர்வழியைக் காட்டி அழைத்து செல்வார்...

நிச்சயம் அருள் உங்களைத் தேடிவரும்.
உங்களுக்கும். வள்ளலார் போல் பேரானந்த நித்திரை நிச்சயம் கிடைக்கும்.

 சுமார் 40 ஆண்டுகளாக .எந்த சன்மார்க்கிகளின் பேச்சை கேட்டு நான் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றவில்லை.... வள்ளலார் சொல்லியதை மட்டும் கேட்டேன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொண்டேன்..
தெளிவாக பின்பற்றி வாழ்க்கையை அமைத்து கொண்டேன்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன்...

எண்ணம் சொல் செயல்.ஒழுக்கம் நான்கும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்

வள்ளலார் பாடல் !

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.!

மேலே கண்ட பாடல் நமக்காகவே வள்ளலார் பதிவு செய்துள்ளார்...

ஆடாதீர் சற்றும் அசையாதீர் பொய் உலக வார்த்தைகளை நம்பாதீர் என்று மிக அழுத்தமாக சொல்லியுள்ளார்.

வள்ளலார் வார்த்தை.
மனித வார்த்தை அல்ல..எல்லாம் அருள் வார்த்தை .
உண்மைத்தவிர பொய்க்கு இடமே இல்லை.சிந்தியுங்கள் செயல்படுங்கள்...
எல்லாம் நன்மைக்கே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

1 கருத்துகள்:

7 ஜூலை, 2021 அன்று 5:44 AM க்கு, Blogger Jegatheesan கூறியது…

அருமையான பதிவு ஐயா. உங்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் முழுமையாக கிடைக்கும்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு