செவ்வாய், 23 அக்டோபர், 2018

காமம் எல்லோருக்கும் பொதுவானது !

காமம்  எல்லோருக்கும்  பொதுவானது !

உணவு உண்பவர்கள் ஆண் பெண் யாராக இருந்தாலும் காம இச்சை உள்ளவர்கள்தான்.

காமத்தை அடக்கவும் வெளிப்படுத்தவும் ஒவ்வொருவராலும் முடியும்.

நேரம் காலம் சூழ்நிலைகள் வரும்போது விரும்பியவர்கள் காம இச்சசையை தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் விரும்பி ஒருவர் விரும்பாத போது பிரச்சினை கள் உருவாகின்றது.பிரச்சனைகள் வெளியே வருகின்றது.

இதுதான் இன்று எல்லாத் துறையை சார்ந்தவர்கள் மீதும் பிரச்சனை உருவாகின்றது..

ஒருபெண் ஒரு ஆணை பலாத்காரம் செய்தாலோ.அல்லது விரும்பினாலோ.அந்த ஆண் அந்த பெண்ணை விரும்பவில்லை என்றால்.அவன் புத்திமதி சொல்வான்.ஆனாலும் வெளியே சொல்லமாட்டான்.

ஒரு பெண்ணை ஒரு ஆண் விரும்பினால் ஏற்றுக் கொண்டால் கலந்து கொள்வாள்.விரும்பவில்லை என்றால்.புத்திமதி சொல்லித் தப்பித்துக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.

அதைவிடுத்து பெண்கள் மட்டும் கற்புக்கரசிகள் என்றும் ஆண்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று வெளிப்படுத்துவது மனித குலத்தை கேவலப் படுத்தும் செயல்களாகும்.

அன்பு. காதல்.கற்பு. காமம்.மோகம்  ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது.

அதை காப்பாற்றுவதும்.வெளிப்படுத்துவதும் அவரவர் உரிமை மனதைப் பொறுத்தது.

ஆண்கள் எல்லோரும் கெட்டவர்களும் இல்லை.நல்லவர்களும் உள்ளார்கள்.பெண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை.கெட்டவர்களும் உள்ளார்கள்..

இதை உணர்ந்து மனிதகுலம்.இந்திரியங்களை.கரணங்களை கட்டுப்படுத்தி நல் ஒழுக்கத்தோடு வாழ்வதே எல்லோருக்கும் நல்லது..சமுதாயத்திற்கும் நல்லது..

ஒருவரை ஒருவர் குறை கூறுவதால்  எந்த பயனும் அடைய போவதில்லை. அச்சம்.பயம்.துன்பம். சோகம்.விரக்தி.வந்து வாழ்க்கை சூன்யமாகிவிடும்.

ஆண்.பெண் எல்லாரும் நல் ஒழுக்கத்தோடு வாழுங்கள்.எச்சரிக்கையோடு வாழுங்கள்..கவனமாக வாழுங்கள்.இரக்கத்தோடு வாழுங்கள்..

நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  என்றும் துணையாக இருப்பார்.காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள்..

வாழ்க்கை என்பது துன்பம் இல்லாமல்  இன்பமுடன் வாழ்வதற்கே.

சிந்தித்து செயல்படுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு