சனி, 23 ஜூன், 2018

நான் எந்த நூலும் படிப்பதில்லை !

நான் எந்த நூலும் படிப்பதில்லை !

நான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா தவிர வேறு எந்த நூல்களும் படிப்பதில்லை..

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைக்கு வரும் முன் நிறைய நூல்களைப் படித்துள்ளேன்...

வள்ளலார் உலகியலில் உள்ள நூல்கள்  அனைத்தும் பொய். நூல்கள் என்கிறார்..பெய்ப்பொருளைப் பற்றி எந்த நூல்களும் சொல்லவில்லை... அதனால் எவற்றையும் படிக்க வேண்டாம் என்று அழுத்தமாக சொல்லுகின்றார்..

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக சொல்லி உள்ளார்...

எல்லா நூல்களும்..உலகியலில் வாழ்வதற்கும் பணம்.பட்டம்.பதவி.புகழ்  சம்பாதிக்கவும்.சாவதற்கும் வழிக் காட்டுகின்றது .மரணத்தை வெல்லும் வழியைக் காட்டவும்.பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழும் வழியையும் காட்டவில்லை...

திருஅருட்பா ஒன்றுதான் இறைவனால் கொடுக்கப்பட்ட. மெய் நூலாகும்.பெய்பொருளைக் காட்டும் நூலாகும்.எனவே திருஅருட்பாவை மட்டுமே படித்து வருகிறேன்....

மேலும் வள்ளலார் பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை

பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

வள்ளலாரே சிற்றம்பலக் கல்வியைக் கற்று உலகிற்கு வழங்கி உள்ளார்..

எனவே நாமும் உண்மையான மெய்நூலான திருஅருட்பாவை கற்று.உயிர்க் கருணையைப் பெற்று.
.கருணையினால் திருஅருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

1 கருத்துகள்:

26 ஜூலை, 2018 அன்று AM 8:31 க்கு, Blogger Unknown கூறியது…

unmai ayya

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு