சனி, 5 மே, 2018

அண்டம் பிண்டம் !

அண்டம் பிண்டம் !

அண்டம் என்பது பஞ்ச பூதங்கள் அடங்கிய உலகம்..

அண்டம் அருள் என்னும் கதிர் வீச்சால் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளது.

சூரியன் பூமியைச் சுற்றுவதும் இல்லை.பூமி சூரியனை சுற்றுவதும் இல்லை..

இந்த உலகத்தில் மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம். அதில் அடங்கிய சூரியன்.சந்திரன்.நட்சதிரங்கள்.மேலும் கிரகங்கள் அனைத்தும் அதனதன் வேலைகளை முறையாக.சரியாக காலம் நேரத்திற்குத் தகுந்தாற் போல் செயல் பட்டுக் கொண்டு உள்ளன...

மனிதன் உடம்பும் அதேபோல் செயல் பட்டுக்கொண்டு உள்ளது...

இயற்கைக்கு மாற்றாக செயல் படும்போது தான் மரணம் வருகின்றது.

அண்டம் அழியாத்து போல் நமது பிண்டம் என்னும் உடம்பும்.உயிரும்.ஆன்மாவும் பிரியாமல்.மறையாமல் நிரந்தரமாக வாழும் வழியைக் கண்டுபிடித்தவர்தான் வள்ளலார்.

அருள் ஆற்றலினால் அண்டம் அழியாத்து போல் பிண்டம் என்னும் உடம்பும் அருளைப் பெற்று அதன் ஆற்றலினால் அழியாமல்..மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் என்பதை வள்ளலார் அறிந்து அம்மயமாகி வாழ்ந்து கொண்டு உள்ளார்..

உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் மட்டுமே அந்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்...மனிதன் இப்படித்தான் வாழ்க்கை முறையை கடைபிடித்து வாழ வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

நாமும் வள்ளலார் போல் வாழ்வோம் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு