வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தின வாழ்த்துக்கள் !

மகளிர் தின வாழ்த்துக்கள் !

மகளிர் ஒரு உடம்பை உருவாக்கும் கலைக்கூடம்.உடம்பை சுமக்கும் சுமை தாங்கி.மகளிரைப் படைக்காமல் இருந்து இருந்தால் மனிதர்கள் இல்லை. மகளிரைப் படைத்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது பாராட்டுவது.

என்னை சுமந்து பெற்று எடுத்தவளும் மகளிரான தாய்தான். தாய் இல்லை என்றால் இன்று நான் இல்லை. தாயில் சிறந்த்தோர் கோயில் இல்லை. கண்கண்ட தெய்வங்கள் தான் மகளிர்.

மேலும் மகளிர் இன்பம் தரும் இன்ப சுரங்கம்.மகளிர் ஒவ்வொரு குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்ந்துவருபவள் மகளிர்தான். மகளிர் தினத்தில். எல்லா தாய்மார்களுக்கும் ஆன்மநேய உரிமையோடு உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு