செவ்வாய், 6 மார்ச், 2018

குழந்தை சிரித்தது !

குழந்தை சிரித்தது !

உலக அதிசயங்களில் ஒன்று !

வள்ளலார் பிறந்த்து ஒரு பவுர்ணமி நாள்.!அவர் முதன் முதலில் சிதம்பர தரிசனம் செய்த்து ஒரு பவுர்ணமி நாள்! அவர் அருட்பெருஞ்ஜோதியை  முதன் முதலில் தரிசனம் செய்த்து ஒரு பவுர்ணமி நாள்! ஞான சபையைத் தொடங்கியது ஒரு பவுர்ணமி நாள.! அவர் சித்திவளாகத் திருமாளிகையில் சித்திப் பெற்றது ஒரு பவுர்ணமி நாள் ! 

வள்ளலாருக்கும் பவுர்ணமி நாளுக்கும் இயற்கையாகவே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு உள்ளார்.பவுர்ணமி என்றால் முழுமை என்று பெயர்.எல்லாம் வல்லான் உடைய  முழுமை ஆற்றலையும் முழுமையான அருளையும் பெற்றக் கொண்டவர்.உலக வரலாற்றில் வள்ளலார் ஒருவரே என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பே இல்லை...

வள்ளலார் சிதம்பரம் செல்லுதல் !

வள்ளலார் பிறந்து  ஐந்து மாதக் குழைந்தை.

1824 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24.ஆம் நாள்.தைமாதம் பூசத்தன்று .தந்தை ராமய்யா.தாய் சின்னம்மையார் சகோதர சகோதரிகள் என குடும்பத்துடன் சிதம்பர தரிசனத்திற்கு சென்றுள்ளார்கள்..
தாயின் அரவணைப்பில்.அவர் கரங்களிலே ராமலிங்கம் என்னும் வள்ளலார் தவழ்ந்து கொண்டு உள்ளார்.

அங்கே உள்ள பக்தர்கள் கல்லையும் கல்லால் கட்டப்பட்ட கூரையும் பார்த்தும் அங்கு நடைபெறும் உருவ வழிபாட்டையும் வணங்கி வழிப்பட்டார்கள்.

வழிபாடுகள் நடந்து கொண்டே இருந்த்து .இறுதி யாக சிதம்பர ரகசியம் என்னும் இடத்தில் உள்ள சுவற்றில் மறைக்கப்பட்ட திரையை.அப்பய்ய தீட்சதர் விலக்குகின்றார்..
சின்னம்மை கரங்களில் இருந்த இராமலிங்கம் அவற்றை மட்டும் பார்த்து கணீர் என்ற வெங்கலக் குரலில் சிறிது நேரம் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

அங்குள்ளவர்கள் அனைவரும்.தரிசனத்தை பார்க்காமல் அந்த குழந்தையின் சிரிப்பு ஒலியையே கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.அப்பய்ய தீட்சதரும் வழிப்பாட்டை விட்டு அந்த அதிசய குழந்தையின் சிரிப்பொலியையே கவனித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருந்தார். இது நடந்த்து வள்ளலார் ஐந்து மாதக் குழந்தை யாக இருந்தபோது...நடந்த்து.

திரை தூக்க தாம் கண்ட வெட்ட வெளி அனுபவத்தை .தமது 49.ஆம் வயதில்.ஆறாம் திருமுறையில். அருள் விளக்கமாலை தலைப்பில் பாடலாக பதிவு செய்துள்ளார்

பாடல் !

தாய் முதலோடு சிறிய பருவமதில் தில்லைத் தடத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது

வேய்வகை மேல் காட்டாதே என்றெனக்கே எல்லாம் வெளியாக்க் காட்டிய என் மெய் உறவாம் பொருளே!

காய்வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனும் பிரியாக் களிப்பே !

தூய்வகை யோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்து அருளே !

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.. ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது நடந்த காட்சியை வள்ளலாருக்கு யார் ? சொன்னார்  என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்....தாய் இல்லை.தந்தை இல்லை.உற்றார் உறவினர்கள் எவரும் இல்லை..யார் சொல்லி இருக்க முடியும்...

ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போதே கடவுள் யார் ? என்பதை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.வெட்ட வெளியாக்க் காட்டி வள்ளலாரை ஆட்கொண்டு விட்டார் என்பதை உலக மக்கள் தெளிவாக  தெரிந்து கொள்ள வேண்டும்....

ஏன் என்றால் ...உலக மக்களை திருத்துவதற்காக இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார்.அவரே சொல்லுகின்றார்..

பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

உலக மக்கள் அனைவரும் அகம் கருத்து புறம் வெளுத்து. கலை உரைத்த கற்பனைக் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களான .உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கடவுள்களை வணங்கி வழிபாடு செய்து .எந்தவிதமான ஆன்ம லாபமும் அருள் வல்லபமும் பெற முடியாமல் .மாண்டு போகின்றார்கள்.

மனிதபிறப்பு எவ்வளவு உயர்ந்த பிறப்பு என்பதே தெரியாமல் பிறந்து பிறந்து .இறந்து இறந்து வீண் போய் கொண்டுள்ளார்கள் இவர்களுக்கு சொன்னால் புரியாது.என்பதை உணர்ந்து.மனிதப் பிறப்பு எடுத்தவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகின்றார்..

வள்ளலார் வாழ்ந்த வரலாறுகளை நம் தந்தையாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே வள்ளலார் உடம்பில்.உயிரில்.ஆன்மாவில் கலந்து வெளிப்படுத்துகின்றார்.

அதனால் தான் வள்ளலார் சொல்லுகின்றார்!

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தைநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

என்னும் பாடலில் நான் உரைப்பது எல்லாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி நாயகன் தன் வார்த்தை என்கிறார்.

மனித வாழ்க்கை என்பது முக்தி பெறுவது அல்ல ! கைலாயம். வைகுண்டம்.சொர்க்கம்.நரகம். பரமண்டலம்.செல்லும் வாழ்க்கை அல்ல ! 

மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழும் பேரின்ப வாழ்க்கையாகும். அதற்கு பூரண அருள் சித்தி பெருதல் வேண்டும்.அந்த வாழ்க்கைக்கு பேரின்ப சித்திப் பெருவாழ்வு  என்பதாகும்.

மனித வாழ்க்கை என்பது.அச்சம்.பயம் துன்பம்.மரணம் இல்லாமல்   சிரித்து.மகிழ்ந்து வாழ வேண்டும்..மற்றவர் பார்த்து சிரித்தோ.அழுதோ வாழக்கூடாது.

வள்ளலார் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே இறைவனைப் பார்த்து அன்பு.தயவு.கருணைக் கொண்டு ஆனந்தமாக  சிரித்தார்.இறைவன் மேல் அளவில்லாக் காதல் கொண்டார்.கண்டு கொண்டேன்.கனிந்து கொண்டேன். கலந்து கொண்டேன் என்று பேரானந்தம் அடைகின்றார்..

நோவாது நோன்பு கொண்டவர் வள்ளலார்.!

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் -

தேவாநின்பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்யார்உளர்நீ சற்றே அறை.!

இந்த உலகத்தில் இறைவன் மேல் தீராத அன்பும் காதலும். அருளும் பெற்றவர்கள் யாராவது உண்டா ? அப்படி யாராவது இருந்தால் அருளாளர் சபையில் கொண்டு வந்து நிறுத்தி காட்டு என்று சவால் விடுகின்றார்...

வள்ளலார் பெற்ற அன்பு அருள் தயவு கருணை கொண்ட  ஆனந்த பேரின்ப சித்தி பெரு வாழ்வு நாமும் பெற்று வாழ்ந்திடலாம் என அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அன்புடன் அழைக்கின்றார்.

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று அழைக்கின்றார்.

பாடல் !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்

அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்

பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே

வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!

என் உயிரினும் மேலான ஆன்மநேய உடன் பிறப்புகளே ! இந்த தேகம் போனால் மறுபடியும் இந்த மனித தேகம் கிடைப்பது உறுதி அல்ல ...இந்த பிறப்பிலே பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.முயற்சி இருந்தால் நிச்சயம் நன்மை உண்டாகும்.நாம் தொடர்பு கொள்ள வேண்டியது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே.

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!

நமது சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் தான் அருட்பெருஞ் ஜோதி தெய்வமாகும்..என்பதைஅவசியம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு
எளிய தமிழில் எழுதி வைத்து உள்ளார்.படித்து தெரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடிப்போம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு