புதன், 21 பிப்ரவரி, 2018

உலக தந்தை மொழி தமிழ் !

உலக தந்தை மொழி தமிழ் !

உலக மொழிகள் யாவும் பெண் தன்மை சார்ந்த மொழிகளாகும்.

ஒவ்வொரு மொழிகளும் அவரவர்களுக்கு தாய்மொழி என்று சொல்லப்படுகின்றது

ஏன்என்றால் ? மனிதர்களால் தோற்றுவித்த மொழிகள் யாவும் தாய் மொழி என்று சொல்லப்படுகின்றது.

அதனால் ஆன்மா என்னும் பெண் தன்மை சார்ந்த மொழி.என்பதாகும்.

ஆன்மாக்கள் யாவும் பெண் தன்மை சார்ந்த்து.

தமிழ்மொழி ஆன்மாக்களால் அதாவது மனிதர்களால் எழுதியது. தோற்றுவிக்கப்பட்டது. அல்ல.என்பதை அறிவு சார்ந்தவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..

தமிழ் ஆராய்ச்சியாளர்கள்.தமிழ் சான்றோர்கள். என்ன ஆராய்ச்சி செய்கிறார்கள் என்பது இன்றுவரைத் தெரிந்து கொள்ள முடியவில்லை..

வள்ளலார் !

வள்ளலாரை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும்.உண்மைக்கடவுளால்  அனுப்பி வைக்கப்பட்டவர்..

வள்ளலாருக்கு முன்னாடி மனிதவாழ்க்கைக்கு
உண்மை பொது வழி காட்டியவர் திருவள்ளுவர்.. அவரைப்பற்றிய உண்மைகளை  உலக மக்களுக்கு கொண்டு செல்ல ஒருவரும் முன் வரவில்லை.

வள்ளலார் வந்து தான் முதன்முதலில் வடலூரில் திருக்குறள் வகுப்பு வைத்து நடத்தியவர்.அதற்கு பின்தான் திருக்குறள் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே போன்றுதான் தமிழ் தாய்மொழி என்றும் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் சொல்லிக்கொண்டு இருந்த தமிழர்களுக்கு .தமிழின் உண்மைத் தனமையை வெளிப்படுத்தினார் வள்ளலார்...

தமிழ்..

இடம்பத்தையும்.ஆரவாரத்தையும்.பிரயாசத்தையும்.பெருமறைப்பையும்.போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் (மொழிகளில்) எனக்கு ஆசை செல்ல வொட்டாது செய்வித்து அருளீனீர் என்று அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இடத்தில் விண்ணப்பம் செய்கின்றார்..

மேலும்...படிப்பதற்கும்
பயிலுதற்கும்.
அறிதற்கும்.மிகவும் லேசுடையதாய்.பாடுதற்கும்.துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய் .சாகாக்கல்வி யை இலேசிலே அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து.அத் தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்து அருளினீர் என்று போற்றி புகழ்கின்றார்.. வள்ளலார்..

தமிழை திருவருள் மொழி என்கிறார்.திருவருள் மொழி என்றால் .அருளால் எழுதப்பட்ட மொழி என்பதாகும்.அருள் என்றால் என்ன ? இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இயற்கை விளக்கமான அருளால் எழுதப்பட்ட மொழி தான் தமிழ்மொழி என்பதாகும்.அதனால் தமிழுக்கு இறைமொழி என்னும் பெயர் வழங்கப்பட்டது.

இறைவன் உள்ளவரை.இறைவனால் படைக்கப்பட்ட உலகம் உள்ளவரை.உயிர்கள் உள்ளவரை இறைவனால் படைக்கப்பட்ட தமிழ்மொழி நிலைத்து நிற்கும்..தமிழை எவரும் வளர்க்க முடியாது.வாழ்த்ததான் முடியும்.பின்பற்றத்தான் முடியும்.

தமிழ் இயற்கை உண்மையதாய்.இயற்கை விளக்கமதாய்.இயற்கை இன்பமுமாய் என்றும் நிலைத்து ஓங்கி தானே வளர்ந்து கொண்டு இருக்கும் மொழியாகும்.

உலகம் எல்லாம் போற்ற ஒளி வடிவமாய் விளங்கும் மொழி தமிழ் மொழியாகும்...

எனவே உலகத்திற்கு எல்லாம் தந்தை மொழியாக விளங்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே மொழி தமிழ்மொழி யாகும்...

வள்ளலார் எழுதிய திருஅருட்பா !

வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்னும் நூல். வள்ளலார் எழுதியது அல்ல ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் எழுதப்பட்டது என்பதை மக்கள் அறிந்து.புரிந்து.தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் தான் அதற்கு திருஅருட்பா என்று பெயர் சூட்டப்பட்டது..

வள்ளலார் எந்த பள்ளியிலும் படிக்கவில்லை.எந்த ஆசிரியர் இடத்தும் படிப்பு.பாடம் கேட்கவில்லை கல்வி கற்கவில்லை..ஓதாமல் உணர்ந்தவர் வள்ளலார்.உணரத்தியவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! வள்ளலாருக்கு ஆசிரியராய் இருந்து பயிற்றுவித்து ஆற்றியுள்ளார். 

வள்ளலார் பாடல் !

கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறிஉற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

என்னும் பாடல்வாயிலாக சிற்றம்பலக் கல்வி கற்றேன் என்கிறார்.அதுதான் செந்தமிழ் மொழி என்பதாகும்.

சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்கின்றாய் என்பார் வள்ளலார்...மேலும்.

ஓதும் இன்மொழியால் பாடவே பணித்தாய் என்று போற்றி புகழ்கின்றார்.. மேலும்..

ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக்கேட்க.எனைத்தான்  ஓதாமல் உணர்த்திய என் மெய் உணர்வாம் பொருளே என்றும் போற்றுகின்றார்.

மேலும்.
சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மேசிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மேஎன்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மேஎல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வமே.

எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ !

என்று சொல்லுவதின் நோக்கம் என்ன ?  தமிழ்மொழியின் உண்மையும் அதன் தன்மையும் உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்கிறார் வள்ளலார்.

தமிழையும்.சாகாக்கல்வியும் தெரிந்து கொள்ளாமல் மக்கள் அகம் கருத்து புறம் வெளுத்து வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அவர்களை திருத்தவே என்னை இறைவனால் வருவிக்க உற்றேன்  என்கிறார் வள்ளலார்...

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்கிறார்.. எனவே தான் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் நாயகன் வார்த்தை என்கிறார் வள்ளலார்...

நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தைநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

என்கிறார்...நான் உரைப்பது எல்லாம் இறைவன் உரைப்பதால்  தான் உண்மை வெளிப்படுகின்றன
எனபதனை பாடலில் தெரியப்படுத்துகின்றார்.
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!

என்னும் திருஅருட்பா பாடலின் வாயிலாக மனிதகுலம் தெரிந்து கொள்ள வேண்டும்...

தமிழ்மொழியின் உண்மையும் அதன் தன்மையும் தெரிந்து கொள்ளாமல் தமிழ்மொழியைப் படிப்பதால் எந்த நன்மையும்.பயனும்.லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

வள்ளலார் எழுதிய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து தமிழ்மொழியை பயின்றால்.மற்றவர்களுக்கு பயிற்றுவித்தால்  மட்டுமே தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்ல முடியும்...

தமிழ் தான் சாகாக்கல்வி கற்றுத்தரும் சாகா மொழியாகும்.

உலகுக்கு எல்லாம் தமிழ் தந்தை மொழியாகும் .பிற மொழிகள் தான் தாய்மொழி என்பதாகும்.

தந்தை மொழியாகிய தமிழ்மொழிக் கற்றால் அருளும் கிடைக்கும் பொருளும் கிடைக்கும்...

பிறமொழிகளாகிய தாய் மொழி கற்றால் பொருள் மட்டும் தான் கிடைக்கும்.

எந்த மொழியை தேர்வு செய்து கற்க வேண்டும் என்பதை மனிதர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்னும் விரித்தால் பெருகும்...

தமிழைக் கற்போம்.அருளும் பொருளும் பெறுவோம். தமிழை உலகம் எல்லாம்  கொண்டு செல்வோம்.

சிறுகுறிப்பு !

இராமலிங்க வள்ளல் பெருமான் சென்னையில் இருந்தபோது அவரைச் சந்திக்க சங்கராச்சாரியார் (பெரியவாள்) விரும்பியதை அடுத்து இருவரும் சந்தித்தபோது சமஸ்கிருதம் "மாத்ரு பாஷை" அதாவது தாய் மொழி என்று சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வள்ளலார் அப்படி என்றால் தமிழ் "பித்ரு பாஷை" அதாவது முன்னோர்கள் மொழி என்று கூறியதுடன் தமிழின் பெருமை பற்றி சங்கராச்சாரியாருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

வள்ளல் பெருமான் சங்கராச்சாரியாருக்குக் கொடுத்த அந்த விளக்கம் "உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை" என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் "தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது" என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் - தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் "தமிழ் - இராமலிங்க சுவாமி யெழுதியது" என அச்சிடப் பெற்றது. பின்னர், திருவருட்பாப் பதிப்பிலும் சேர்க்கப்பட்டது.

அதில், வள்ளலார் தமிழ் பற்றி ஆய்வுக் குறிப்பை வெளியிடுகிறார்.

அதில்....

"தமிழ்" என்னும்
சொல்லுக்கிட்ட உரை

திருச்சிற்றம்பலம்

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை

அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.

இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:

த் ஏழாவது மெய்;

ம் பத்தாவதாகும்;

ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.

ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-

த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.

ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.

இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.

ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.

உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:-

மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.

இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்.

திருச்சிற்றம்பலம்"

-இவ்வாறு வள்ளலார் தமிழ் மொழி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்கிருதத்தை தேவ பாஷை, கடவுள் பாஷை என்றெல்லாம் கதையளந்து கொண்டிருந்தவர்கள், கொண்டிருப்பவர்களுக்கு இதுவே பதில்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.

1 கருத்துகள்:

25 மார்ச், 2022 அன்று AM 11:19 க்கு, Blogger தாசெ கூறியது…

அன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு