வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்பது .உலகில் உள்ள உயிர் இனங்களை அனைத்தையும் ஆனம நேயத்துடன் நேசிப்பது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதை.புதிய மார்க்கமாகும்.

இந்த உண்மையை முழுதும் உணர்ந்தவர்கள் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும் தகுதி உடையவர்கள்..

சுத்த சன்மார்க்கம் என்பது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டது.

சுத்த சன்மார்க்கம் என்று பேசிக்கொண்டு சுயநலத்திற்காகவும்.பொருள் ஈட்டுவதற்காகவும். வாழ்பவர்களை சுத்த சன்மார்க்கத்தில் போலி வேஷம் போடுபவர்கள்.

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்.மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அறக் கைவிட்டவர்களும்.
காம்க் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் .கொலை புலை தவிர்த்தவர்களும்.

ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சாதி.சமய.மதம் போன்ற கொள்கைகளை. முழுவதும் கைவிட்டவர்களும்.கடவுள் ஒருவரே! என்ற உண்மை அறிந்தவர்கள் .சுத்த சன்மார்க்கம் சொல்லும் உண்மை ஒழுக்க நெறிகளை முழுவதும் கடைபிடிப்பவர்கள் மட்டுமே..மரணம்.பிணி.மூப்பு.பயம்.துன்பம் ...
இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.

அதாவை ...்செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது சுத்த சன்மார்க்கத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று வேஷம் போடுபவர்கள் மரணத்தை தவிர்த்து கொள்ள மாட்டார்கள்.

சுத்த சன்மார்த்தில் அருள் விளங்கும் காலத்தில்.அவரவர்கள் பரிபாகத்திற்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும்.

பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெறமாட்டார்கள்...

இவற்றை முழுதும் உணர்ந்தவர்கள் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் தகுதி உடையவர்கள்.

வள்ளலார் சொல்லுவது !

சாகாதவனே சன்மார்க்கி என்றும்...சன்மார்க்கத்தின் முடிவு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே யன்றி வேறில்லை.சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்ல ..என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்துள்ளார்..

உலக வாழ்க்கையில் பற்று வைத்துக் கொண்டு பொருள் ஈட்டுவதை விட்டுவிட்டு. அருள் ஈட்டும் வழியாகிய.அன்பு.தயவு. இரக்கம்.
கருணை முதலியவைகளைக் கடைபிடித்து.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையாகும்..

அழிந்து போகும் அற்ப ஆசைகளுக்கு ஆசைப்படாமல்.ஆன்ம லாபத்திற்கும்.ஆன்ம இன்பத்திற்கும் ஆசைப்பட்டால் அருள் இன்பம் நம்மைத் தேடிவரும்.நம் அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மை விட்டு பிரியாமல் அருள் பாலித்து கொண்டே  இருப்பார்.

நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் .அறியாமை என்னும் திரைகளை நீக்கி அதாவது ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் கதவையும் பூட்டையும் திறந்து உடைத்து .உள் இருக்கும் அருளைத் திறந்து விடுவார் .அருள் உடல் முழுதும் நிரம்பி பொங்கி தழும்பி கொதித்து.வேதித்து ஊன உடம்பை பொன் உடம்பாக்க மாற்றம் செய்வார்.அதன்பின்பு தான் உடம்பு மாற்றுக் குறையாத பசும் பொன்னாக மாற்றம் அடையும்..அதன்பின் தான் ஏன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றம் செய்வார் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்....

வள்ளலார் பாடல் !

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ

உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தேகங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசேசித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

இதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையாகும்.

இந்த பிறவி போனால் வேறு எந்த பிறப்பு கிடைக்கும் என்பது தெரியாது .இந்த பிறப்பையே  நிந்திய மெய் பிற்ப்பாக மாற்றிக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய மார்க்கமாகும்...

சாகாக்கல்வி !

சாகாத கல்வியே கல்வி
ஒன்றே சிவம்தான்என அறிந்தஅறிவே தகும் அறிவு

மலம்ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த
பூரணவல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்

இந் நான்கையும் ஒருங்கேவியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறைவான
வர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்மரபென் றுரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்தேற்றி அருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளேதெய்வநட ராஜபதியே.!

என்னும் பாடல் வாயிலாக நடராஜபதி என்னும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்வதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மைக் கடவுள் என்கிறார் வள்ளலார்.

சுத்த சன்மார்க்கம் காட்டும் புதிய பாதையைப் பின்பற்றி மரணத்தை வென்று நித்திய பேரின்ப வாழ்வு வாழ்ந்திடலாம் வாரீர் வாரீர் என வள்ளலார் உலக மக்களை அன்புடன் ஆன்ம நேயத்துடன் அழைக்கிறார்கள்...

உண்மை உணர்ந்து உயிர் நலம் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்திடாம் கண்டீர்.

புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் நீவீர் எல்லாம் புனிதம் உறும் பொருட்டே என்கிறார் வள்ளலார்....

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து புனித குலம் பெறுவோம்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு