புதன், 21 மார்ச், 2018

மதம் என்பது பேய் பிடித்த குரங்கு !

மதம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது !

உலகில் உள்ள எல்லா மதங்களையும் சாடுகின்றார் வள்ளலார்.


மத்த்திலே பற்று உள்ளவனும் சமயத்தில் பற்று உள்ளவனும் .சாதியில் பற்று உள்ளவனுக்கும் மனித நேயமும் .ஆன்ம நேயமும் .தனிமனித ஒழுக்க நெறியும் எக்காலத்திலும் தோன்றாது. விளங்காது.

அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் விளங்காது.

எனவே தான் சாதி சமய மதங்களான குப்பைகளை குழிவெட்டி மண்ணைப்போட்டு மறைத்து விடுங்கள் என்கிறார் வள்ளலார்..

சாதி சமயத்தை விட மதம் மிகவும் கொடூரமான புற்று நோய் என்கிறார்.அது உங்களை அழித்துவிட்டுத்தான் வெளியே போகும் என்கிறார்.

சாதி.சமய.மத சழக்கை விட்டேன் அருடஜோதியைக் கண்டேன் என்கிறார் வள்ளலார் ..

மத்த்தைப் பற்றி சாடும் பின்வரும் பாடல்களைப்  படித்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..


மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்

இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்

குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்

சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.

#6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்கமாலை

மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்

பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த

விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கேவெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே

சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

#6-042 ஆறாம் திருமுறை /

கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
சீரண
மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியைவயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்

துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை

விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியைவிண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்

கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#6-059 ஆறாம் திருமுறை / இனித்த வாழ்வருள் எனல்

மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்

பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே

நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்

சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.

#6-063 ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி

மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டுவந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்

கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலேகலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்

பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டேபாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்

இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதிஎன்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.

#6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு

மதத்திலே சமய வழக்கிலே மாயைமருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுதுகழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்

பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்பரிந்தெனை அழிவிலா நல்ல

பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்பண்ணிய தவம்பலித் ததுவே.

#6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்

கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

#6-093 ஆறாம் திருமுறை / சிவயோக நிலை

மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டேபதிமண்ட லத்தரசு பண்ண - நிதியநவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்சிவனே கதவைத் திற.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்

மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்

விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்

கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ

துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்

மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று

பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ

விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே

பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.

#6-117 ஆறாம் திருமுறை / ஞான மருந்து

மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்துகதிதரும் இன்ப மருந்து - அருட்கண்ணால்என் றன்னைக் கலந்த ஞான மருந்து.

#6-121 ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்

மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்ததுவருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்ததுகொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல தருனம் .இது நல்ல தருனம்

#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை

மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ

சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரேசாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ

பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்

சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்றுதோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.!

சாதியும் மதமும் சமயமும் பொய் என்கிறார் ..நாம் பொய்யான சாதி.சமயம்.மதங்களைபிடித்துக் கொண்டு சன்மார்க்கத்தைப் பின்பற்றினால் .உண்மையான ஆன்மலாபம் என்றும் கிடைக்காது.

ஆன்ம லாபம் கிடைத்தால்தான் அருள் லாபம் கிடைக்கும் .அருள் லாபம் கிடைத்தால் தான்.மரணம் இல்லாமல் வாழும் பேரின்ப லாபம் கிடைக்கும்...

லாபம் அடைவதும்.நட்டம் அடைவதும் உங்கள் வாழ்க்கையின் தரத்தில் தான் உள்ளது..

முயற்சி செய்யுங்கள்.முடிவு எடுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன ஈரோடு கதிர்வேல்.

என்னும் பாடல்கள் வாயிலாக மதங்களை சாடுங்கின்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு