செவ்வாய், 13 மார்ச், 2018

கண்களின. கண்ணீர் !

கண்களின் கண்ணீர் !

பிறக்கும் போதும் கண்ணீர் !

பால்குடிக்கும் போதும் கண்ணீர் !

புசிக்கும் போதும் கண்ணீர் !

வளரும் போதும் கண்ணீர் !

படிக்கும் போதும் கண்ணீர் !

துன்பம் வந்தால் கண்ணீர் !

இன்பம் வந்தால் கண்ணீர் !

காதல் வந்தால் கண்ணீர் !

மோதல் வந்தால் கண்ணீர் !

வேண்டியது நடந்தால் கண்ணீர் !

வேண்டியது நடக்காவிட்டால் கண்ணீர் !

விரும்பிய பெண் கிடைக்கா விட்டால் கண்ணீர் !

விரும்பிய ஆண் கிடைக்கா விட்டால் கண்ணீர் !

சேர்ந்தால் கண்ணீர் !

பிரிந்தால் கண்ணீர் !

மகிழ்ந்தால் கண்ணீர் !

அன்பு அதிகம் வந்தால் கண்ணீர் !

அன்பு குறைந்தால் கண்ணீர் !

பணம் வந்தாலும் கண்ணீர்!

பணம் வராவிட்டாலும் கண்ணீர் !

வெற்றிப் பெற்றால் கண்ணீர் !

தோல்வி அடைந்தால் கண்ணீர் !

பெண்களால் கண்ணீர் !

ஆண்களால் கண்ணீர் !

குழந்தை பிறந்தாலும் கண்ணீர் !

குழந்தை இறந்தாலும் கண்ணீர் !

குழந்தை வளர்ந்தாலும் கண்ணீர் !

நோய் வந்தால் கண்ணீர் !

உடல் மெலிர்ந்தால் கண்ணீர் !

ஏமாற்றம் வந்தால் கண்ணீர் !

அம்மாவால் கண்ணீர் !

அப்பாவால் கண்ணீர் !

மனைவியால் கண்ணீர் !

கணவனால் கண்ணீர் !

சுற்றத்தால் கண்ணீர் !

நட்பால் கண்ணீர் !

முதிர்ச்சி யால் கண்ணணீர் !

மரண வேதனையால் கண்ணீர் !

எல்லாவற்றையும் விட்டுவிட்டு போகும் போதும் கண்ணீர் !

இறக்கும் போதும் கண்ணீர் !

இப்படி பலவழிகளில் நம்முடைய கண்களில் கண்ணீர் வந்து கொண்டே உள்ளது

ஒவ்வொரு செயலுக்கும் கண்களில் வரும் தண்ணீரின் சுவை வித்தியாசமாக இருக்கும்.

இந்த கண்ணீர் கண்களில் எவ்வாறு சுரக்கிறது.

இந்த கண்ணீரின் சுவைகள் நம்முடைய உடம்பில் கண்களில் எவ்வாறு மாற்றம் அடைந்து வருகின்றது என்பதை நினைத்தாலே இறைவனுடைய பெருமையை எப்படி எவ்வாறு போற்றுவது என்பது தெரியவில்லை. என்னவென்று தெரிந்து கொள்ளவும் முடியாது.

கண்களுக்கு எவ்வாறு எங்கு இருந்து கண்ணீர் வருகின்றது என்பதை அறிவியலோ விஞ்ஞானமோ,பகுத்தறிவோ ,ஆண்மீகமோ பதில் சொல்ல முடியுமா !

வள்ளல் பெருமான் பதில் சொல்லுகின்றார்,அவர் எழுதிய திரு அருட்பாவில் ""ஞானசரியை'" என்ற தலைப்பில் முதல் பாடல்  படித்து தெரிந்து கொள்ளுங்கள் !

 நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந்து

ஊற்றெழுங்கண்ணீரதனால் உடம்புநனைந்துநனைந் தருளமுதே

நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

பனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

எல்லா அழுகையை விட இறைவனிடம் அருளை நினைந்து விடும் கண்ணீர் ஆனது உடல் முழுவதும் நனைந்து நனைந்து அந்த கண்ணீரானது என்றும் அழியாத நன் நிதியாக மாற்றம் அடைகின்றது.அந்த நன் நிதிதான் அருள் அமுதம் எனபதாகும்..  .

மனிதர்கள் வீணுக்கு வினைக்கு அழாமல் அருளுக்காக அழுது கண்ணீர் விட்டால் அந்த கண்ணீரானது அருள் அமுதமாக மாற்றம் அடைந்து ஊன  உடம்பு ஒளி உடம்பாக வேதியல் மாற்றம். செய்து மரணத்தை வெல்லலாம்.

அதைத்தான் தான் மரணம் இல்லாப் பெருவாழ்வில்  வாழ்ந்திடலாம் கண்டீர் என் மனித குலத்தை வள்ளலார் அழைக்கின்றார்..

நாம் எதற்காக அழுது கண்ணீர் விட வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு