ஞாயிறு, 18 மார்ச், 2018

கடவுளின் பெயர் என்ன ?

கடவுளின் பெயர் என்ன ?

பொருமையாக படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்..

சமயங்களும் மதங்களும் கடவுளுக்கு பலப்பல  பெயர்கள் வைத்துள்ளார்கள்.
பெயர் வைத்தவர்கள் எல்லாம் ஆன்மீக அருளாளர்கள்.அவரவர்கள் அனுபவத்தில் கண்டதை யூகத்தின் அடிப்படையில் கடவுளுக்கு பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தியாவில் தோன்றிய அருளாளர்கள.பிரம்மா.விஷ்ணு.சங்கரன்.மகேஸ்வரன்.சதாசிவன்.என்ற ஐந்து கர்த்தாக்களின் பெயர்களை வைத்துள்ளார்கள்.அந்த ஐந்து கர்த்தாக்கள் என்பது நீர்.நிலம்.அக்கினி.காற்று.ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களை குறிப்பதாகும்..

அந்த பஞ்ச பூதங்களை சுருக்கி சிவாயநம.என்றும்.நமசிவாய என்றும் இரண்டு  பெயர்கள்  வைத்தார்கள்.

இந்தியாவில் சைவம்.வைணவம் என இரண்டு பிரிவான சமயங்கள் தோன்றி போட்டி போட தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.

அதற்கு மேல் வடநாட்டில் தோன்றிய வேத வியாசர் என்ற அருளாளர் மகாபாரதம் என்ற நூலை எழுதினார்.அதில் கிருஷ்ணர் என்ற கதாபாத்திரத்தை படைத்து கடவுளாக்கினார்.

அவருக்கு போட்டியாக வால்மீகி என்ற அருளாளர் வந்தார்.அவர் இராமாயணம் என்ற நூலை எழுதினார் அதில் இராமர் என்ற கதாபாத்திரத்தை படைத்து இராமரை கடவுளாக்கினார்.

பகாபாரத்த்தையும்  இராமாயணத்தையும்.எதிர்த்து தமிழ் நாட்டில் சித்தர்கள் தோன்றினார்கள்.அவர்கள் சகட்டுமேனிக்கு சமயங்களையும்.மதங்களையும் எதிர்த்து குரல் கொடுத்து மக்களையும்.உலகத்தையும் வெறுத்து தனிமையில் சென்று விட்டார்கள்.

தமிழ் நாட்டில் சேக்கிழார் என்ற அருளாளர் தோன்றி பெரிய புராணம் என்ற நூலை எழுதினார்..மற்றவர்கள் எழுதியது சிறிய புராணம் நான் எழுதுவது பெரியபுராணம் என்று பெயர் வைத்தார்..

பெரிய புராணத்தில்  அக்கினி கலைகள் கள் 64 என்பதாகும் அதில் 63.கதாபாத்திரங்களை படைத்தார்.கலைகள் 64 என்பதாகும். அதிலே 63 கலைகளையும் 63 நாயன்மார்களாக படைத்தார்.ஒருகலையை அதீத கலையாக சிவபெருமானை கடவுளாக படைத்து கடவுளாக்கினார்.

அதற்கு பின் ஆழ்வார்கள் தோன்றினார்கள்.  12 பேரை படைத்தார்கள். அவர்களுக்கு 12 ஆழ்வார்கள் என்று பெயர் வைத்தார்கள்.12 என்பது சந்திர கலை என்பதாகும்.சந்திர கலை 12 க்கும் 12 கதாபாத்திரங்களை படைத்தார்கள்..அவர்களின் கடவுள் விஷ்ணு என்று பெயர் வைத்தார்கள்.இப்படி பல பெரிய கதைகள் குட்டி கதைகளை இந்தியாவில் தோற்று வைத்து இறைவனுக்கு பலப்பல பெரிய தெய்வம் சிறிய தெய்வம் என்றெல்லாம் பெயர் வைத்து விட்டார்கள்.

அதன் பின்பு புத்தர் வந்து புத்த மதத்தை தோற்றுவித்தார்.புத்தரையே கடவுளாக வணங்கி வந்தார்கள்.அதற்கு புத்தம் சரணம் கச்சாமி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

   அடுத்து சமணமதம் தோன்றியது. சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.
     சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்1 என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

அதன் பின்பு கிருத்துவ மதம் தோன்றியது.அதற்குத் தலைவர் ஏசுபிரான் .அவர் பரலோகத்தில் இருக்கும் பரம்பிதா என்று பெயர் வைத்தார் .அவர் ஒளியாக உள்ளார் என்று சொல்லி வைத்தார்.

அதன் பின்பு நபிகள் நாயகம் வந்தார் அவர் குர்ஆன் என்ற நூலை எழுதி வைத்தார் அவர் எல்லோருக்கும் பொதுவான அல்லா ஒருவர் உண்டு என்றும் அவர் அளவற்ற அருளாளன் என்றும் அவர் ஒளியாக உள்ளார் என்றும் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவர் திருக்குறள் என்னும் பொது மறை என்னும் நூலை எழுதி வைத்தார் .அவர் ஆதிபகவன் என்று கடவுளுக்கு பெயர் வைத்துள்ளார்.

உண்மைக் கடவுள் !

மேலே கண்ட சமயங்கள் மதங்கள் அனைத்தும் உண்மையான கடவுளைப் பார்க்கவும் இல்லை உண்மைக் கடவுளின் உண்மையான பெயரை சொல்லவும் இல்லை. எல்லாப் பெயரும் உண்மைக்குப் புறம்பான சித்து விளையாட்டுக்கள் என்கிறார்..வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

பொருமையாக படியுங்கள்...

திருஅருட்பா அனுபவ மாலை பாடல்கள் !

 • மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம் 
  மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ 
  சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே 
  சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ 
  பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம் 
  பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய் 
  சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று 
  தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே. 

 • 87. எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே 
 • இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் 
  கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே 
  கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் 
  நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய் 
  ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் 
  செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 
  சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே. 
 • 88. பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் 
  பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய் 
  அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா 
  யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் 
  பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன் 
  பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் 
  துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் 
  சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
 • 89. சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் 
  சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
  பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் 
  பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ 
  அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் 
  அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே 
  சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
  திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி. 
 • 90. எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் 
  இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் 
  மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் 
  விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும் 
  இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் 
  இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ 
  பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் 
  பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே. 
 • 91. காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் 
  கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் 
  கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில் 
  குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் 
  நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி 
  நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே 
  மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன் 
  வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி. 
 • 92. சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த 
  சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே 
  ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே 
  அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் 
  ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம் 
  உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் 
  சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் 
  சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே. !

மேலே கண்ட பாடல்களில் சமய மதங்கள் காட்டிய கடவுள். கடவுளின் பெயர்கள் அனைத்தும் பொய்யான தத்துவங்களின் பெயர் என்கிறார்.

இறுதியாக திருஅருட்பா முழுவதும் இறைவன் ஆணைப்படி எழுதி நிறைவு செய்த பின்...சித்திவளாகம் என்னும் மேட்டுக்குப்பத்தில்.வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன் மக்களின் முன்னாடி சுத்த சன்மார்க்க கொடி ஏற்றி வைத்து பேருபதேசம் என்னும் அருள் உரை நிகழ்த்திய...அப்போது தான் உண்மைக் கடவுளின் முழு பெயரை வெளியிடுகிறார்.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம்இக்காலமே சன்மார்க்கக் காலம்.
 என்னும் உண்மையை மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்.

உலகத்திற்கும் அண்டகோடிகளுக்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஒருவரே என்ற உண்மையை உலக மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.

எனவே ஆன்மநேய அன்புள்ளங்களே இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் உண்மைக் கடவுளின் பெயரை உச்சிரித்து வணங்கி வாழ்வாங்கு வாழ்வோம்.

இறைவனால் எழுதப்பட்ட ஒரே உண்மை நூல் திருஅருட்பா மட்டுமே !

எனவே தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திருஅருள் வார்த்தை என்கிறார்.எனவே தான் உண்மை இருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எங்கும் ஓங்குக!

இன்னும் விரிக்கில் பெருகும்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு