வெள்ளி, 29 டிசம்பர், 2017

சாதனம் ஒன்றும் வேண்டாம் !

சுத்த சன்மார்க்க சாதனம்!. வள்ளலார் சொல்லும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு வெளியில் உள்ள எந்த சாதனமும் வேண்டாம் என்கிறார்... சாதனம் எவை என்றால்.! சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"* என்கிறார் சன்மார்க்க சாதனம் சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.(அதாவது அற்ப சித்துக்கள்.) அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான். சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.என்கிறார்.. வள்ளலார் பாடல் ! பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட் சோதி யளித்து என் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.* என்பதே என் பிரார்த்தனை யாகும் என்கிறார்.... இந்த குணத்தைப் பெறுவதற்கு ஒழுக்கம் வேண்டும் என்கிறார் . அது என்ன ஒழுக்கம் ? அதற்குப் பெயர் தான் *"பெரு நெறி ஒழுக்கம்* என்று பெயர்... அவைதான்.. இந்திரிய ஒழுக்கம். கரண ஒழுக்கம். ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் . என்று நான்கு ஒழுங்க்கங்களை சொல்லி உள்ளார். நாம் கடைபிடிக்க வேண்டியது இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம் என்பதாகும்... இந்த இரண்டு ஒழுக்கங்கள் எவை என்பதை திருஅருட்பாவில் தெளிவாக பதிவு செய்துள்ளார்... அவற்றை முழுமையாக பின்பற்றினால்.பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு