வெள்ளி, 29 டிசம்பர், 2017

சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம்.!

சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய.கற்றுக் கொள்ள வேண்டிய புருஷார்த்தம் ! நாம் அவசியம் பெறும் புருஷார்த்தம் நான்கு. அவையாவன: 1.சாகாக்கல்வி. 2.தத்துவநிக்கிரகம் செய்தல் 3.ஏம சித்தி. 4.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இவை நான்கையும் பெறுவதற்குத்தான் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கின்றார் வள்ளலார்... ஒழுக்கம் என்றால் என்ன ? இவை பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்: நான்கு வகைப்படும். 1. இந்திரிய ஒழுக்கம். 2. கரண ஒழுக்கம். 3. ஜீவ ஒழுக்கம். 4. ஆன்ம ஒழுக்கம். 1. இந்திரிய ஒழுக்கம்... சாகாக் கல்வியை கற்றுக்கொள்வது. 2.கரண ஒழுக்கம்...தத்துவங்களை தன் வசமாக மாற்றுவதாகும். 3.ஜீவ ஒழுக்கம்.... ஏமசித்தி பெறுவதாகும். 4.ஆன்ம ஒழுக்கம்.... கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்..இவை நான்கும் மரணத்தை வெல்லும் ஒழுக்கங்களாகும்.. இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது. இந்திரிய ஒழுக்கம் என்பது கண்.காது.மூக்கு.வாய்.உடம்பு என்னும் புறக்கருவிகள். ஞானேந்திரியம் ஒழுக்கம் என்பது.புறக்கருவிகளை இயக்கும் உட் கருவிகளாகும். வள்ளலார் சொல்லிய இந்திரிய ஒழுக்கம் ! கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; ருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவ இம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்; நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிரம அதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும்.இறை சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசம் தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம். 2. கரண ஒழுக்கம் ! கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபையின் கண் இடைவிடாது நிற்கச் செய்தல். பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்னை மதியாதிருத்தல். இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.கரண ஒழுக்கமாகும். 3. ஜீவ ஒழுக்கம் ! ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது...ஜீவ ஒழுக்கமாகும். 4. ஆன்ம ஒழுக்கம் ! ஆன்ம ஒழுக்கமாவது: எண்பத்து நான்கு கோடி லட்சம் யோனிபேதங்களிலும் உள்ள.அதாவது யானை முதல் எறும்பு வரை தோன்றிய ஜீவன்களின் ஆன்மாவே திருச்சபையாகவும். அதன் உள் ஒளியே பதியாய் அறிந்து நிற்பது. அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் வைத்து.எல்லாம் தாமாகவே கண்டு பேதமற்று பூரணமாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம். இவ்வண்ணமாக ஒழக்கங்களை.கடைபிடித்து நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தங்கள் கைகூடும். ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதர ஜீவன்களுக்கு. இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்க வேண்டும்.. வள்ளலார் இந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை தருமச்சாலை ஆரம்பிக்கும் காலத்தில் வெளியிட்டார் .அதன் பின் விரிவாக நான்கு புருஷார்த்தங்களை வெளியிட்டார். மேலே கண்ட ஒழுக்கங்களை முழுவதும் கடைபிடித்தால் மட்டுமே.மரணம் இல்லாப் பெருவாழ்வு யாகிய .சாகாக்கல்வி. தத்துவ நிக்கிரகம் செய்தல்..ஏமசித்தி..கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.போன்ற அரும் புருஷார்த்தங்கள் கைகூடும்... முயற்சி செய்வோம் முடியாத்து ஒன்றும் இல்லை... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளலாம். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.. 9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு