வெள்ளி, 29 டிசம்பர், 2017

உபாசனை நான்கு. வகையாக உள்ளன !

உபாசனை நான்கு. வகையாக உள்ளன ! அதாவது கடவுளை...தொடர்பு கொள்வதற்கு... விக்கிரகத்தை. கடவுளாக உபாசிப்பவர்கள்.. பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள்... அக்கினியை கடவுளாக உபசாரிப்பவர்கள். கர்ம காண்டிகள்... கடவுளை இருதயத்தில் உபாசிப்பவர்கள் யோகிகள்... கடவுளை எங்கும் உபாசிப்பவர்கள் ஞானிகள்.... இந்த நான் வகையான வழிபாட்டில் சிறந்த்து.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் காட்டும் ஞான வழிபாடாகும்.அதாவது ஒளி வழிபாடாகும். ஞானம் என்பது சுத்த அறிவாகும்.. ஞானம் என்பது. சாதி.சமயம்.மதம்.ஆசிரம்ம்.சூத்திரம்.கோத்திரம்.குலம்.சாஸ்திர சம்பந்தம்.தேச மார்க்கம்.உயர்ந்தோர்.தாழ்ந்தோர். என்னும் பேதம் நீங்கி எல்லவரும் நம்மவர்களாக சம்மாக கொள்ளுதலாகும்... இந்த குணம் உள்ளவன் எவனோ அவனே கடவுளைக் காண முடியும்.அருளைப் பூரணமாகப் பெற முடியும்...மரணத்தை வெல்ல முடியும்...கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆக முடியும். அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு