வெள்ளி, 11 மார்ச், 2016

எங்கள் ஒட்டு உங்களுக்கே !

எங்கள் ஒட்டு உங்களுக்கே !தமிழ் நாட்டில் மதுக்கடையும்,மாமிசக் கடையும் ஒழிக்கும் கட்சிக்கு எங்கள் ஒட்டு நிச்சயம் உண்டு.

குறிப்பாக;--

வள்ளல் பெருமான் பிறந்த மருதூர்,, மற்றும் அவர் சென்னையில் வாழ்ந்து,,பின்னர் வடலூர் வந்து,உலக மக்களுக்கு,கடவுளின் உண்மையைச் சொல்லியும்,ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை மக்களுக்கு போதித்த இடமான வடலூரில் அவர் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை உள்ளது.

இன்றுவரை தொடர்ந்து மக்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றது.மேலும் ஆதரவற்ற ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றது.

கடவுள் ஒளியாகத்தான் உள்ளார் என்பதை விளக்க,..மக்களின் உண்மையான வழிப்பாட்டுத் தளமாக  வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க ''சத்திய ஞான'' சபையும்'' வடலூரில் தான் உள்ளது.

உலக மக்கள் ஒழுக்கம் நிறைந்து,ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதற்காக,அவற்றை போதிக்க வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் வடலூரில் தோற்றுவித்து உள்ளார்..

மரணத்தை வென்று வாழமுடியும் என்பதை விளக்க தான், மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து சித்திப் பெற்ற  இடமான ''மேட்டுக் குப்பம்'' என்னும் ஊர் அங்குதான் உள்ளது. . மேலும் தண்ணீரில் விளக்கு எரித்து ''திருஅருட்பா'' என்னும் அருள் நூல் எழுதிய இடமான கருங்குழி ,என்னும் ஊர் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது.

வள்ளலார் பிறந்து வாழ்ந்து சித்திப் பெற்ற இடம் அனைத்தும் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது.

குறிப்பாக கடலூர் மாவட்டம் முழுவதும்,மதுக்கடையும் மாமிசக் கடையும் நீக்குகின்ற உறுதியை வெளிப்படுத்தும், திறமையும், தகுதியும், வாய்ந்த கட்சிக்கு வருகின்ற சட்டசபைத் தேர்தலில்,வள்ளலார் கொள்கையைப் பின்பற்றி வாழும் சன்மார்க்க குடும்ப ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக அளிக்கப்படும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம் ஈரோடு....
9865939896,...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு