செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

கொலை செய்வது புலால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம் !கொலை செய்வது புலால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம் !

ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய வள்ளல்பெருமான் மனிதர்களை இரண்டு இனமாக பிரித்தார் .

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் ஒரு இனமாகவும் .உயிர்க்கொலை செய்யாதவர்களும்,புலால் உண்ணாதவர்களையும் ஒரு இனமாகவும் பிரித்தார்கள் .
கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்கும் உரிமை எவருக்கும் இறைவன் கொடுக்கவில்லை.

உயிர்களைப் படைக்கும் தகுதி இல்லாதவர்களுக்கு அழிக்கும் தகுதி கிடையாது.எனவே அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அவர்களுக்கே தெரியாமல் இயற்கையால் வழங்கப்படுகின்றது

அவை என்ன தண்டனை என்றால் ?

துன்மார்க்க பிறவிகள் என்னும்
புலி,கரடி,சிங்கம்,யாளி,யானை,கடமை ,கடா,பன்றி, நாய், பூனை,முதலிய தேகங்களும்,மேலும் அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பாம்பு,தேள்,முதலிய விஷ ஜந்துக்களாகவும்,.முதலை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,காக்கை,கழகு முதலிய பட்சி ஜந்துக்களாகவும், எட்டி,கள்ளி,முதலிய அசுத்த தாவரங்களாகவும்.பிறப்பு கொடுக்கப்படுகின்றது.

மேலே கண்ட தண்டனை இயற்கை என்னும் இறைவனால் கொடுக்கப்படுகின்றது.

இந்த உலகில் எவ்வளவு பெரிய புகழ்மிக்க,ஆற்றல் மிக்க,அறிவு மிக்க,ஆராய்ச்சி மிக்க, ஆளாக இருந்தாலும்,அருள் மிக்க ஆன்மீக சிந்தனையாளராக இருந்தாலும்,செத்தவனை எழுப்புகின்ற ஞானியாக இருந்தாலும்,ஏன் நீங்கள் வணங்கும் கடவுளாக இருந்தாலும்,

அவன் கொலை செயபவனும் புலால் உண்பவனாக இருந்தால் அவன் மனித குலத்தில் இருந்து இறைவன் ஒதுக்கி வைத்து விடுகின்றார் அவனுக்கு மன்னிப்பே கிடையாது.

இதுவரையில் அறியாமை யாலும்,அஜாக்கிரதை யாலும், நாக்கு
ருசியாலும் உண்மை தெரியாமலும் புலால் உண்பவர்கள் ,தவறு என்பதை உணர்ந்து விட்டுவிட்டால் இயற்கை என்னும் இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்வார் .இல்லை எனில் தப்பிக்கவே முடியாது.

தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உயிர்க் கொலை செய்யாமலும்,புலால் உண்ணாமலும் இருந்தால்தான் அடுத்த பிறவி மனிதப் பிறவி கொடுக்கப்படும்.இல்லை என்றால் மேலே கண்ட தண்டனைத் தேகங்கள் கிடைக்கும் என்பது சத்தியமான உண்மை .

இது திரு அருட்பிரகாச வள்ளல்பெருமானின் அருள் வாக்காகும்..இயற்கை இறைவனின் வாக்காகும்.

இதுவரையில் இருந்தது போல் இல்லாமல், உண்மை உணர்ந்து,தெளிவு பெற்று விட்டுவிடுங்கள்.மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு