செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

கொல்லாமை புலால் உண்ணாமை !

கொல்லாமை புலால் உண்ணாமை !


ஆன்மநேய அன்புடைய சகோதரர்களே அனைவருக்கும் வணக்கம் இந்த உலகம் துன்பமும், துயரமும்,அச்சமும்,பயமும் மரணமும்  அடைவதற்கு முக்கிய காரணம் ஒரு உயிரைக் கொன்று தினபது தான் என்பது உண்மையாகும், தினமும் தின்னால் சீக்கிரம் அழிந்திடுவான்.

ஒரு உயிரை உண்டாக்குவதற்கோ ,படைப்பதற்கோ  முடியாததை அழிக்கவும்  யாருக்கும்,எவருக்கும்  உரிமை இல்லை எனபதே இயற்கையின் கட்டளையாகும் ,அதாவது கடவுளின் சட்டமாகும்

எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள்,புகழ் இருந்தாலும்.அவனுக்கும் தம் உயிர்மேல் அளவுகடந்த ஆசை வருகிறது.உயிருக்கு ஆபத்து என்று வந்துவிட்டால்,அவன் உயிரைக் காப்பாற்ற எவை எவை இருந்தாலும்,என்ன என்ன இருந்தாலும்,மேலும் மனைவி ,மக்கள்,அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,
உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அவன் வணங்கும் கடவுள்  அத்தனையும் இழக்க தயாராகிறான்.அந்த உயிரின் பெருமையும்,ஆற்றலும்,அதன் மகத்துவத்தையும் எப்படி வார்த்தையால் சொல்லமுடியும்.சொல்லவே முடியாது அவ்வளவு உயர்ந்த தகுதி உடையதாகும்.

உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய அரசனாக இருந்தாலும்,அருள் பெற்றவனாக இருந்தாலும்,பட்டம் பதவிகளில் உயர்ந்தவனாக இருந்தாலும்,ஒரு நாட்டை அழித்து,வென்று, தன்வசமாக கொண்டுவந்து ஆட்சி செய்யும் வல்லவனாக இருந்தாலும்,இறந்தவரை எழுப்புகின்ற ஆற்றல் படைத்த அருளாளராக இருந்தாலும்,கடவுளை நேரிலே கண்டவனாக இருந்தாலும்,அவன் இறந்தால் அவன்  உடலுக்கு பிணம என்று பெயராகும் .

அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் அப்போ மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,

தாவர உணவு !

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால்.தாவர உணவுகள் தான் சிறந்ததாகும்.தாவர உணவு மனித உயிரை சீக்கிரம் அழிக்காது.தாவர உணவு உண்பவர்கள் அறிவு தெளிவாக இருக்கும்,காமம்,கோபம்,மோகம்,மாச்சரியம் அகங்காரம்,பொய்,களவு,சூது ,போன்ற தீய குணங்கள் வராது.

தாவர உணவு உண்பவர்களுக்கு நரை,திரை,பிணி,மூப்பு .பயம்,துன்பம் மரணம் போன்ற ஆபத்துக்கள் வராது.அஜாக்கிரதையால் வரும் வியாதிகளுக்கு தாவர உணவே வியாதியை குணப்படுத்தும் வைத்திய நாத மருந்தாக,ஞான மருந்தாக,அருள் மருந்தாக   மாறி நோயை குணப்படுத்தி விடும். 

இன்று உலகம் முழுவதும் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கும் தீவிரவாதம்.நக்சல் பார்ட்டிகள்,பயங்கர வாதம், கொலை,கொல்லைகள் .மேலும் இலங்கை படுகொலை.களவு,கற்பழிப்பு,போனற,கொடுரமான செயல்களை செய்பவர்கள் யார் என்பதை சிந்தித்து பாருங்கள்,அனைவரும் மிருகத்தின் புலாலை உணவாக  உணபவர்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்,

வாய் பேச தெரியாத,வாய் பேச முடியாத,தனக்கு துன்பம் வந்தால்,தன்னுடைய உயிருக்கு ஆபத்து வந்தால்,அதை தடுத்து நிறுத்த தெரியாத ஆடு மாடு,கோழி,பன்றி,மீன் போன்ற உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை தின்பது எவ்வளவு பாவச்செயல் என்பது தெரியாமல் போனது ஏன் ? 

மிருக குணம் ! 

 மிருகத்தை தின்பவர்கள் அறிவு மிருக (அறிவு) குணமாகத்தான் இருக்கும் என்பது ஆன்மீக நல்ல சிந்தனை உடையவர்களின் கருத்தும், அறிவியல்,விஞ்ஞான  வல்லுனர்களின் கருத்தாகும் .
.
ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தி யுள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து, புரிந்து,தெரிந்து  கொள்ளாமல் மனம் போனபடி மிருக உயிர்களை அழித்து அதன் புலாலை உணவாக உண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

அதிலும் பெரிய கொடுமை என்னவென்றால் கடவுளின் பெயரால் வாய் பேசாத உயிர்களை கடவுளுக்கு காணிக்கை என்ற வேண்டுதலை வைத்து துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்று அதன் புலாலை சாமிக்குப் படைத்து பின் சமைத்து உண்கின்றார்கள் .என்ன கொடுமை இந்த பழக்க வழக்கங்கள்....இந்த பழக்கங்களை மக்களுக்கு போதித்தவன் யார் ?

உயிரின் தன்மையும், உடம்பின் தன்மையும் அவற்றை படைத்த கடவுளின் ஆற்றலையும் அறிந்து புரிந்து இருந்தால் இப்படி கொடுரமான செயல்களை செய்வார்களா ? என்பதை சிந்திக்கவேண்டும் .

வாய் பேச தெரியாத உயிர்களைக் கொன்று பலிக் கொடுத்தால் அருளையும் பொருளையும் கொடுக்கும் அந்த சாமிக்கு.... .வாய் பேசும் தன்னுடைய மனைவியோ மக்களையோ அம்மாவையோ,அப்பாவையோ உறவினர்களையோ,நண்பர்களையோ பலி கொடுத்தால் இன்னும் அதிகமான பொருளும் அருளும் கிடைக்கும் அல்லவா ? 

கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வதை நினைந்து வள்ளல்பெருமான் படும் வேதனை சொல்ல மாளாது .உயிர்க்கொலை செய்வதைப் பார்த்து .இப்படி உயிர்க்கொலை செய்வதால் செய்பவர்களுக்கு என்ன என்ன துன்பங்கள் வரப்போகின்றதோ என்று எண்ணி வேதனைப்படுகின்றார் .  

வள்ளலார் பாடல் வருமாறு '-

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .

இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்

தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான்
எங்கணும் ஆளும் அருள் .

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .

என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?
உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .

நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போது அந்த ஜீவன் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணராமல் அதை வெட்டி கூறு போட்டு தின்கிறோமே,இவை எந்த விதத்தில் ஞாயம் .

மனிதனை மனிதன் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்கிறது உலகியல் சட்டம்.வாயில்லாத உயிர்களை கொலை செய்தால் அதற்கு உங்கள் சட்டத்தில் என்ன தண்டனை? அனைவரும் சேர்ந்து உண்பதுதான் உங்கள் சட்டத்தின் தீர்ப்பா ? .ஆண்டவன் தீர்ப்பு எண்ண தெரியுமா ? நீங்கள் பல பிறவிகள் சண்டாளப் தேகம் என்னும் பாம்பு,கரடி,புலி, சிங்கம்,நாய்,போன்ற தேகங்கள் எடுத்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.உங்கள் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி என்பது இறுதிவரைக் கிடையாது .

மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம், கிடைத்ததின் நோக்கம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அடைவதாகும் .அதாவது மரணமில்லா பெருவாழ்வு என்பதாகும்.நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்லவேண்டும்.வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது! வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ? என்று கண்ணதாசன் பாடல் வரிகள் சொல்லுகின்றன.

அப்படி என்றால் மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார் .அவர் வாழ்ந்து வந்த பாதையை கடைபிடித்தால் மரணத்தை வென்று கடவுள் மயமாகலாம்.அவர் எழுதி வைத்த திரு அருட்பாவில் அனைத்து உண்மைகளும் மிகவும் தெளிவாக இருக்கிறது .அதை வாங்கி படித்து மனிதர்கன் மனிதர்களாக வாழுங்கள் .
நீங்கள் அப்படி வாழ்கிறீர்களா ? என்று கேள்வி கேட்கலாம்.நான் சத்தியமாக அப்படித்தான் வாழ்கிறேன் .

இந்த உலகத்தில் எனக்கு என்று எதுவும் இல்லை.மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எதுவுமில்லை.

பணம் சொத்து வீடு என்று எதுவும் இல்லை.நான் யாரிடத்திலும் எதுவும் வாங்குவதில்லை .ஆனால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
எனக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தருகிறார்.என்னை ஆண்டவர் வழி நடத்துகிறார்.அவர் வழியில் நான் செல்கிறேன் இதுதான் உண்மையாகும் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி !

எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி

என்பார் வள்ளலார் ;-சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதமில்லாமல்,அனைவரும் அனைத்துயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்ற உண்மை தெரிந்து விட்டால்.நாம் கடவுள்கள்தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மை தெரிந்து விட்டால் எந்த தவறும் செய்யமாட்டோம்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !அவரால்தான் இந்த உலகமும் உலக உயிர்களும் படைக்கப்ட்டுள்ளன என்ற உண்மை உணரவேண்டும்.அவர் உருவமாக இல்லை ஒளியாக உள்ளார்,அருள் அணுவாகஉள்ளார் ! அதற்கு மேல் எந்த சக்திகளும் இல்லை என்பதை அறிவால் உணர்ந்தால் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும்

மனிதன் படைத்த உருவங்கள் எல்லாம் கடவுள் இல்லை,கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கடவுள்கள் இல்லை, கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்களிடத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.அந்த உயிர் ஒளிதான் கடவுளின் ஏக தேசங்கள் என்பதை ,உண்மையுடன் உணர்ந்தால் எந்த உயிர்களையும்  கொலை செய்யமாட்டோம்.

நமக்கு வழி காட்டிய பெரியவர்கள் உண்மைக்கு புறம்பாக சொல்லியும் எழுதியும் வைத்து விட்டார்கள் அதையே உண்மை என்று நம்பி அறியாமையால் வாழ்ந்து வருகிறோம்.நம்மீது குற்றமில்லை நமக்கு வழி காட்டியவர்கள் தான் குற்றவாளிகலாகும்.அவர்கள் காட்டிய வழியில் கண்ணை
மூடிக்கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் தெளிவு படுத்தியுள்ளார் இந்த உலகத்திற்கு உண்மையை சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவர்தான் ஒருவர்தான் !

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம உயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்து உரிமை உடையவராய் யுவக்கின்றார் யாவர அவர் உலந்தான் சுத்த
சித்துருவா எம்பெருமான் நடம புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிகேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்தாலோ !

எல்லா உயிர்களையும் ஒன்று என்று யார் நினைக்கின்றார்களோ அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன் அவர்கள் இட்ட பணியை என்னுடைய சிரமேற் கொண்டு செயல்பட என்னுடைய அறிவு தயாராக இருக்கிறது என்கிறார். வள்ளலார்.
உண்மையை உணர்ந்து உறுதியுடன் வாழ்வோம் 

ஆதலால் எக்காரணம் கொண்டும் உயிர்க்கொலை செய்யாமலும்,புலால் உண்ணாமலும் வாழ்பவனே மனித ஜாதி,அப்படி செய்யத் தவறினால் அவனை மிருக ஜாதியில் இறைவன் சேர்த்து விடுவார் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். .

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
. .
அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

1 கருத்துகள்:

28 நவம்பர், 2025 அன்று 2:35 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

Is there anyway to stop milk industry which is nothing but beef industry. The cows and calves are tortured and killed. No leader tries to stop this atrocity?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு