திங்கள், 9 பிப்ரவரி, 2015

உண்மைப் பத்திரிகை !
உண்மைப் பத்திரிகை !

வள்ளல்பெருமான் சித்திப் பெறுவதற்கு முன் உலக மக்களுக்கு உண்மை பத்திரிக்கை என்னும் தலைப்பில் வெளிப்படுத்தி உள்ளது !

சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும்,சாத்திர பேதங்களும்,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.அது  கடவுள் சம்மதம்.இது இருபத்தி ஒன்பது (29--வருஷத்திற்கு மேல் ) கலியுகம் 5000 ,--க்கு மேல் .

இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள் ,மூர்த்திகள் ,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும்,எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும்,தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்ப் பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி ..

இது உண்மையாயின்,அந்த பதியின் அருளை நான் பெறுவேன் ! பெறுகின்றேன் !! பெற்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை. பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! அஞ்ச வேண்டாம் ..

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்.
பிரஜோத்பத்தி வருடம்
சித்திரை மாதம் ஒன்றாம் தேதி
சித்திவளாகம்
1874 .  

மேலே கண்ட கட்டுரையை வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

இதுவரை வழிபாடு செய்துவந்த,புராணங்களில் சொல்லப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள் முதலான ,கடவுள்.தேவர் ,அடியார் ,யோகி,ஞானி போன்றவர்களை   நினைந்து வழிபாடு செய்யாமல் உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதியை நாம் உண்மை அன்பு, உண்மை இரக்கம்,கொண்டு வழிபாடு செய்தால்,எந்த தடைகளும் இல்லாமல் நமக்கு கொடுக்க வேண்டிய அருளை கொடுத்து ,மேல்நிலைக்கு கொண்டு செல்வார் என்பதை தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்கள்.

ஆதலால் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து வளம் பெறுவோம்..

ஆன்மநேய அன்புடன் ஈரோடு கதிர்வேல்.    

2 கருத்துகள்:

13 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:45 க்கு, Blogger Baskaran Sharmila கூறியது…

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

 
13 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:45 க்கு, Blogger Baskaran Sharmila கூறியது…

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு