வியாழன், 3 ஜூலை, 2014

சூரியகலை,! சந்திரகலை ! ஆன்ம கலை !

சூரியகலை,! சந்திரகலை ! ஆன்ம கலை !

சாதாரண மனிதர்கள் (ஜீவர்கள் )சந்திர கலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை !

பக்குவர்கள் சூரிய கலையில் பிறப்பதும்,இறப்பதும் இயற்கை, !

சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம் ,

தினமும் சூரிய கலையில் மனதை செலுத்த வேண்டும் !

கண்கள் திறந்து ஒளியை பார்த்து தியானித்தால் சூரிய கலையில் தானே சுவாசம் செல்லும். !

சூரிய கலையில் தியானம் செபவர்களுக்கு உண்மை அனுபவம் தானே தோன்றும். !

சூரியனை வணங்க வேண்டும் என்பது சூரியகலையில் மனதை செலுத்த வேண்டும் என்பதற்கு சொல்லியதாகும்.

சூரிய கலையும்,சந்திர கலையும்,என்பது வலது பக்க மூக்கில்,சுவாசிப்பது.இடது பக்க மூக்கில் சுவாசிபதாகும் .!

சுழுமுனை கலை என்பது (ஆன்மா)உச்சியின் வழியாக காற்றை சுவாசிப்பதாகும் !

இவையே இடைகலை .பிங்கலை,சுழுமுனை என்பதாகும் !

முச்சை அடக்கவும் வேண்டாம் நிறுத்தவும் வேண்டாம் .அவை நம் நற் செய்கையின் வழியாக தானே மாறும் !

ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவாக உள்ளவர்களுக்கு மூக்கில் சுவாசம் செல்லாமல் உச்சியின் வழியாக அமுதக் காற்று ஆன்மாவுக்கு சென்று உடம்பு முழுவதும் செல்லும்.அதுதான் சுழுமுனைக் காற்று என்பதாகும் !

வள்ளல் பெருமான் சுவாசித்தது,சுழுமுனை வழியாக செல்வது அமுதக் காற்றாகும் !

அமுதக் காற்றை சுவாசிப் பவர்களுக்கு மரணம் வராது !

மரணத்தை வென்றவர் நம்முடைய வள்ளல்பெருமான் ஒருவரே !

நாமும் வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் வாழ்ந்தால் நாமும் மரணத்தை வெல்லலாம் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு