புதன், 28 மே, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை !

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

வள்ளல் பெருமான் இறைவனால் வருவிக்க உற்றவர் ,ஏன் ? இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகின்றார் .

அகத்தே கருத்துப்  புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திடவும் அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

என்று ஆறாம் திருமுறை அருட்பாவில்,வேண்டுகோள் பதிகத்தில் ஒன்பாதாவது பாடலில் பதிவு செய்து உள்ளார் .

இந்த உலத்தில் உள்ள மக்கள் அனைவரும்,கடவுள் யார் என்று தெரியாமலும,உயர்ந்த அறிவு படைத்த மனித வாழ்க்கையில்,மனிதன் என்பவன்  எப்படி வாழ வேண்டும் என்பது தெரியாமலும்  உண்மையை அறியாமலும்  அகம் கருத்தும் புறம் வெளுத்தும் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

மனிதர்களின் அறிவுக்கும் கருத்துக்கும், கண்களுக்கும்,அறிவியலுக்கும்,புலப்படாமல், தெரியாமல்,இருக்கும்   சொர்க்கம் ,நரகம்,வைகுண்டம்,கைலாயம்,போன்ற கற்பனைக் கதைகளை கற்பித்து மனிதர்களை நம்ப வைத்து மனிதர்களை அழித்து கொண்டு இருப்பதே ,அகம் கருத்து ,புறம் வெளுத்து இருபதாகும்.

மனித குலத்தை திருத்தவும்,மனிதன் மனிதனாக வாழ்ந்து,இந்த இகம் என்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டே,பரத்தில் உள்ள இறைவனின் அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப வாழ்வு வாழ்ந்து ,மற்றம் உள்ள மனிதர்களும்  மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்பற்காகவே என்னை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதை,வள்ளல் பெருமான்  மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்.

மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டுமானால் அதற்கு உண்மையான மார்க்கம் (வழி ) வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' எனற ஒரு தனி அமைப்பை  தோற்று விக்கின்றார் ...அதாவது எதையும் சாராத புதிய தனி மார்க்கத்தை 18--7--1872,ஆம் ஆண்டு வடலூரில் தொடங்கி வைக்கின்றார் .

மேலும் இறைவனால் வருவிக்க உற்றேன் என்பதை ஆறாம் திருமுறை அருட்பாவில் ''நடராஜபதி மாலை ''என்ற தலைப்பில் 27,வது பாடலில் வள்ளல் பெருமான் பதிவு செய்துள்ளார் .

பேருற்ற உலகில் உற சமயமத நெறி எலாம்
பேய்ப் பிடிப்பு உற்ற பிச்சுப
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் முற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினர் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனித முறும் சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுகநிலை அடைந்திடப் புரித நீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க வென்ற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிக்குணாந்த பர நாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே ,

என்னும் பாடல் வாயிலாக தான் என்ன ? என்ன ? பணிகளை செய்ய வேண்டும் என்பதை இறைவன் சொல்லி ,அந்த செயல்களை எல்லாம் செம்மையாக செயல்படுத்த இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர் தான் வள்ளல்பெருமான் ஆவார்கள் .

இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் உண்மை அறியாது ,அளவில் அடங்காத சமய மத நெறிகள் சொல்லிய பொய்யான நெறிகளை கடைபிடித்து ,உண்மையான கடவுள் யார் ? என்பது தெரியாமல் பேய் பிடித்த குரங்குகள் போலும் .குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் போல் கடவுளை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டு உள்ளார்கள்.

அதுமட்டும் அல்ல உங்கள் கடவுள் பெரியது ! எங்கள் கடவுள் பெரியது !
என்று போட்டிப் போட்டுக் கொண்டு அதனால் சண்டையிட்டுக் கொண்டு நாட்டுக்கு நாடு போர் புரிந்து மனித சமுதாயம் அழிந்து கொண்டு உள்ளது .இப்படியே விட்டுவிட்டால் உலகம் ரத்த களமாக மாறிவிடும் .உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் அறிவு தெளிவு இல்லாமல் அழிந்தி விடுவார்கள்.

ஆகவே அவர்களை காப்பாற்ற வேண்டும் ,சாதி சமயம் மதம் போன்ற மூட கொள்கைகை பிடித்துக் கொண்டு ,அவர்கள் வீணாக அழிந்து விடுவார்கள் விரைந்து வேகமாக சென்று நீ அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் ..என்பிள்ளை யாகிய உன்னை இந்த வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கின்றேன்.என்பதை ...உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி இறைவன் வள்ளல் பெருமானை அனுப்பி வைத்ததாக சொல்லுகின்றார் .

இறைவன் ஆணையை சிரமேற்க் கொண்டு வள்ளல்பெருமான் அவர்கள் மக்களைத் திருத்த புனிதமான சுத்த சன்மார்க்க நெறியைத் தோற்றுவித்து ,அதன் வாயிலாக மெய்ப் பொருளான உண்மைக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி  என்னும் உண்மைக் கடவுளாகும். அந்த உண்மைக் கடவுளை  மக்கள் அறிந்து தெரிந்து அருளைப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும்.  சுகமான சுகநிலையை அடைய வேண்டும்.

இதுவே என்னுடைய ஆணையாகும் வேறு எதைப் பற்றியும் கவலைப் படாதே உனக்கு வேண்டிய எல்லா சக்திகளையும் உன்னுள் இருந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் .எப்படி எனில் நீருற்ற நெருப்பின் உள்ளே நிறைந்து இருக்கும் ஒளியைப் போல் உன்னுள் இருந்து ஒளிர்ந்து இருளை அகற்றிக் கொண்டே இருப்பேன் என்பதை தெளிவாக மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் .    

வள்ளலார் எழுதிய ஆறு திருமுறைகளின் தொகுப்பை சுருக்கி அதற்கும் மேல் சொல்ல வேண்டிய உலக படைப்புக்களையும்.பஞ்ச பூத இயக்கங்களையும்.உயிர்களின் தோற்றம் மாற்றம்.அணுக்களின் படைப்பு தன்மை சேர்க்கை.உயர்ந்த அறிவுள்ள மனிதன் மரணத்தை வெல்லும் ரகசியங்களையும்.மனித வாழ்க்கையின் முக்கியவத்தையும் .மேலும் மனிதன் தெரிந்து கொண்ட தெரிந்த கொள்ளாத .இன்றுவரை எவரும் அறியாத அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும்.

அருட்பெருஞ்ஜோதி அகவலில்  1596 வரிகளில் வெளிப்படுத்தி உள்ளார்.

திருஅகவலைப் படித்து உணர்ந்தாலே போதுமானதாகும்.     

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு