வியாழன், 19 ஜூன், 2014

ஞானம் மூன்று வகைப்படும் !

ஞானம் மூன்று வகைப்படும் !

அவை ;--உபாய ஞானம் ...உண்மை ஞானம் ...அனுபவ ஞானம் ..

இவற்றின் தாத்பரியம்;--

நட்சத்திரம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் !.

சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் அறிவே உண்மை ஞானம் !.

எல்லா வஸ்துக்களையும்  தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவ ஞானம் ! .

காட்சி ;--

ஒரு வஸ்துவை அதன் நாமம் ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் ! .

உருவமாக ( கூடமாக ) அறிதல் கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் !.

உருவம் இன்னதென்று அறிதல் தெரிதல் ஜீவக் காட்சி ஜீவ அறிவு என்பதாகும்!.

எதையும் தானாக அறிதல் ஆன்மக் காட்சி ஆன்ம அறிவு என்பதாகும் !.

இதற்குத் தோன்றும் அறிவு ...தோற்றுவிக்கும் அறிவு ...பதிஅறிவு என மூன்று அறிவு நமக்குள் இயங்கிக் கொண்டு உள்ளது !.

ஆதலால் ;--ஒரு வஸ்துவின் இடத்தில் பற்றுதல் வைப்பது அவா என்றும் அன்பு என்றும் காதல் என்றும் சொல்லப்படுவதாகும் .!.

அதை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது (எழுந்தது ) ஆசை என்று சொல்லப்படுவதாகும் !.

அந்த ஆசையை அதன் மயமாதல் காமம் என்று சொல்லப்படுவதாகும் !. .

அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம் என்று சொல்லப்படுவதாகும் !

எந்த வஸ்து இடத்திலும் மோகமாதி இன்றி அவா மயமாய் நிற்றல் வேண்டும்!

அதுவே அனுபவ ஞானம் என்பதாகும்.! .

அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற உரிமையை அறிதலே அருள் அறிவு என்பதாகும்.!

அருள் அறிவு விளங்கும் போது அனுபவ ஞானம் தோன்றும் !.

அனுபவ ஞானமே இறைவனை அடையும் துவாரமாகும் !.

ஞானத்தில் சிறந்தது,...உபாயத்தை அறிந்து,...உண்மையை அறிந்து  ..அனுபவ ஞானத்தை பெறுதலே மரணத்தை வெல்லும் வழியாகும் .

இதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

சிந்திப்போம் செயல்படுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு