வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

மனித வாழ்க்கை முறை !

வாழ்க்கை முறை !

வாழ்க்கை முறைகள் இரண்டு வகை உண்டு.

பொருள் வாழ்க்கை !,அருள் வாழ்க்கை !....பொருளைப் பெற்று வாழும் வாழ்க்கை இந்த உலக வாழ்க்கை....அருளைப் பெற்று வாழும் வாழ்க்கை அனைத்து உலகங்களிலும்,அண்டங்களிலும்,கடவுள் இருக்கும் இடங்களுக்கும் சென்று அழிவில்லாத அதாவது மரணம் இல்லாமல் வாழும் வாழ்க்கையாகும்.

இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை ,மதங்களும்,சமயங்களும்.அதனால் உருவாக்கிய வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்.சாத்திரங்கள் யாவும் போதிக்கின்றன.

அருளைப்பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கத்தை திரு அருட்பிரகாச வள்ளலார் மட்டும் இந்த உலகத்திற்கு சொல்லி உள்ளார்கள்.அவர்காட்டிய புதிய மார்க்கம்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''  என்னும் அருளைப் பெரும் மார்க்கமாகும்.

மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் ,அவன் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்குத்தான் ,மனித தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது.அதை அறிந்து தெரிந்து கொள்ளாமல் மனிதன் இந்த உலகத்தில் மிருகங்கள் வாழும் வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் ,பொருளை விட்டு அருளைப் பெரும் வாழ்க்கை வாழ்ந்து மரணத்தைப் வென்று பேரின்ப வாழ்க்கை என்னும் ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே பேரின்ப வாழ்க்கையாகும்.

மற்ற ஞானிகள் போல் அல்லாது ,தான் சொல்லியபடி வாழ்ந்து வழிகாட்டி உள்ளார் நமது வள்ளல் பெருமான்.அவர்காட்டிய மார்க்கம் அருளைப் பெரும் மார்க்கமாகும்.அவர்காட்டிய பாதையில் வாழ்வதுதான் மனித வாழ்க்கையாகும் .

அறிவுள்ள ஜீவர்கள் அவர்காட்டிய பாதையில் ,அவர்காட்டிய மார்க்கத்தில் சேர்ந்து அருளைப்பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ்வோம்..

அவர்காட்டிய பாதைகளுக்கு பொருள் தேவை இல்லை.குரு உபதேசம் தேவை இல்லை,பக்தி ,வழிபாடுகள் போன்ற ,யோகம்,தியானம்,தவம்,போன்ற புற செயல்கள் எதுவும் தேவை இல்லை..

உயிர்கள் பால்.அன்பு,தயவு,கருணை போன்ற இரக்கமுள்ள குணங்களை கொண்டு ,ஆண்டவரிடத்தில் இடைவிடாத அறிவு பூர்வமான அன்பு செலுத்த வேண்டும்..இதை இடைவிடாது கடைபிடித்தால் ,நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்,அறியாமை என்னும் திரைகள் நீக்கப்பட்டு ஆன்மாவில் உள்ள அருள் சுரந்து.அறிவு விளக்கம் ஏற்பட்டு,உண்மை என்னும் மெய்ப்பொருள் காணப்படும் .
அந்த மெய்ப்பொருளைக் கண்டால் அதுவே நமக்கு உயர்ந்த உண்மையான வழியைக் காட்டும்.அந்த உண்மையான வழியைத்தான்.வள்ளல்பெருமான்,''சுத்த சன்மார்க்க தனிப்பெரும் பெருநெறி,அருள் நெறி ,பொது நெறி,தனிநெறி,புதிய நெறி,  என்கிறார்.

உண்மை நெறியான சுத்த சன்மார்க்க பொது நெறியை பின்பற்றி வாழ்வதே,அருளைப்பெரும்  மனித வாழ்க்கையாகும்.,வாழ்வோம் ,வாழ்ந்து காட்டுவோம்.

உங்கள் ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு