வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !
ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று வடலூரில் உள்ள ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்'', ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
வடலூரில் காட்டப்படும் ஜோதி தரிசனம் வித்தியாசமானது
இந்த ஆண்டு 17--1--2014, ஆம் தேதி காலை 6.00,மணிக்கும் 10.00,மணிக்கும்,நண்பகல் 1.00,மணிக்கும்,இரவு 7.00,மணிக்கும் 10.00,மணிக்கும் ,மறுநாள் காலை 5.00,மணிக்கும் ,ஆக ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
அன்று காலை நேரத்தில் கிழக்கே சூரியன் தோன்றுவதும் ,மேற்கே சந்திரன நிறைவு பெறுவதும் ,மத்தியில் ஜோதி தெரிவதும்,ஒரே நேரத்தில் மூன்று ஜோதியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவே வடலூரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின் தனிசிறப்பாகும் .
ஏழு திரைகள் என்பது மனிதனின் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.அந்த திரைகள் நீங்கினால்தான் கடவுளைக் காணமுடியும் என்பது வள்ளலாரின் கொள்கையாகும்.அதனால் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.,
ஜோதி தரிசனத்தை காண்பதற்கு தமிழ் நாட்டில் இருந்தும் ,மற்ற மாநிலங்களில் இருந்தும்,வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காண வருகின்றார்கள் .
அங்கே சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தர மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு மனமகிழ்ச்சியுடன் செல்வார்கள்.மேலும் அங்கே அபிஷேகம் ஆராதனை,,மேளம்,தாளங்கள் போன்ற எந்த சமய, மத ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் எதுவும் இல்லாமல் ஜோதி தரிசனம் மட்டுமே காண்பிக்கப்படும் .ஒத்தாரும் ,உயர்ந்தாரும் ,தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுடன் வந்து வழிபடும் இடமாகும்.
வடலூர் வரும் பல லட்சக்கணக்கான மக்கள் அனைவருக்கும், வடலூரில், வள்ளலார் தோற்றுவித்த தருமச்சாலையிலும் , சன்மார்க்க சங்கங்களிலும் இடைவிடாது உணவு வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.மக்கள் அனைவரும் தங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டு ஜோதி தரினம் பார்க்க வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும் .
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க தனிப் பெரும் நெறியாகும்.,அதை அனைத்து சன்மார்க்க சங்கங்களும் கடைபிடித்து நிறைவேற்றி வருகிறார்கள்.இவைகள் யாவும் வடலுரின் தனிச்சிறப்பாகும்.
அனைத்து உயிர்கள் இடத்தும் ஈரமும், கருணையும், இரக்கமும்,ஆண்டவர் இடத்தில் அன்பும் செலுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் வழிபாட்டு முறைகளாகும்,
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்தியாகும்.கடவுள் அன்பும், கருணை உள்ளவர் நாமும் கருணை உள்ளவர்களாக மாறினால்தான் இறைவன் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த செயல்களாலும் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையின் செய்தியாகும் .
ஜோதி தரிசனம் !
பலகோடி அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஒரு சக்தி, அது ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் அருள்
ஒளியாகும், அதுவே கடவுள் என்று சொல்லப்படும் ''அணு துகள் '' என்பதாகும்.அந்த அணுத்துகள் இல்லை என்றால் அண்டங்கள் உலகங்கள்,உயிர்கள் இயங்காது .
அவர் (அவர் என்பது ஒளி ) எப்படி உள்ளார் எங்கு உள்ளார் என்பதை வள்ளல்பெருமான் கண்டு,களித்து அருளைப் பெற்று அனுபவித்து மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் .
கடவுள் ஜோதிமயமானவர் !
இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும்,
எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும்,எல்லா பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும் எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,
மற்ற எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் ,தோற்றுவித்தல்,..வாழ்வித்தல்,..குற்றம் நீக்குவித்தல்,..பக்குவம் வருவித்தல்,..விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும் ,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,சர்வ காருணயர் என்றும் சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையராயத் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத
தனிப்பெரும் தலைமை கடவுள் ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ..
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய (மனிதர்கள் ) நாம் அறிந்து. அன்பு செய்து அருளை அடைந்து ,அழிவில்லாத சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து '' அதன் மத்தியில் இயற்க்கை விளக்கமாக ஜோதியை (ஒளியை ) வைத்துள்ளார் வள்ளல்பெருமான்.
ஆதலால் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் தைபூசத்தன்று ஏழு திரை நீக்கி ''ஜோதி தரிசனம்'' காட்டப்படுகிறது.,
எல்லா நாட்களையும் விட ''தைப்பூசம்'' என்னும் நாள் அருள் நிறைந்த நாள் என்பதாலும் ,இறைவன், அன்று எல்லா உயிர்களுக்கும் நிறைவான அருள் வழங்கும் நாள் என்பதாலும், இறைவன் உலகை நோக்கி வருகிறார் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
மேலும் முக்கியமானது ,இறைவன் உலகை நோக்கி வருவதால்,அந்த நாள் உயிர்களுக்கு நிறைவான இன்பம் தரும் நாள் என்பதாலும் இயற்கையில் உள்ள கிரகங்கள் யாவும் தன்னுடைய பணிகளை (வேலைகளை ) செய்யாமல் உயிர்களுக்கு நன்மையே செய்யும் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது அதனால்தான் ''தைபிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள் நம் முன்னோர்கள் .
தைப்பூசத் திருநாளில் மனிதர்களாகிய நாம் இறைவனுடைய அருளைப் பெற்று மகிழ்ச்சியான இன்பம் தரும் நாளாகக் கருதி வடலூர் ஜோதி தரிசனம் கண்டு இறைவனுடைய அருளைப் பெற்று ,நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று நீடுழி வாழ்வோம்.
வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !.....வள்ளலார் .
ஆன்மநேயன்;--செ,கதிர்வேல் ,ஈரோடு ,
கைபேசி ;--9865939896,

1 கருத்துகள்:
சத்திய தருமசாலையில் பசிக்கு அளிக்கபடும் உணவு தரமாக இல்லையென்றலும் அங்கு பணி செய்யும் பணியாளர்களின் செய்கை மிகவும் மோசமாக உள்ளது அதாவது அங்கு பறிமாறப்படும் எச்சீல் இலைகள் குப்பை தொட்டியிலிருந்து எடுத்து கழுவி பின் மீண்டும் அதே இலையில் உணவு மற்றவர்களூக்கு பறிமாற பயன் படுத்தபடுகிற்து என்பதை மிகவும் வருந்தி கண்ணுற்றதை இங்கு பதிவு செய்கிறேன்.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு