புதன், 22 ஆகஸ்ட், 2012

நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 6,

                                                                    வள்ளலார்


நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 6,

இமாய்யா வீடு !

மாலை நேரம் இராமய்யா வீடு திரும்புகிறார் .கையில் குடை ,வாழைப்பழம் ,பலகாரங்கள் அடங்கிய கைப்பை யுடன் வீட்டின் அருகில் வந்து --சின்னம்மை .....சின்னம்மை .....என்று அழைக்கிறார் ...அவருடைய குரலைக் கேட்டு ,சபாபதி ,பரசுராமன் ,சுந்தரம்மாள்,உண்ணாமலை ,ஆகிய நான்கு பெரும் ஒடி வருகின்றனர்.ஐயா ....அப்பா வந்துட்டாங்க ...அப்பா வந்துட்டாங்க ...என்று வந்தவர்கள் அவரிடம் இருந்த பொருட்களை ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்கின்றனர் .

சபாபதி ....அப்பா இன்னிக்கி அம்மா உங்ககிட்டே ஒரு அதியத்தை  சொல்லப்போறாங்க --:என்கிறான் .
""என்ன அதிசியமுன்னு எனக்குத் தெரியுமே---குழைந்தைகள் சொல்லுங்க பார்ப்போம் என்கின்றனர் .
இன்னிக்கி நீங்க நான்கு பேருமே வீட்டிலே ரகள பண்ணாம இருந்திருப்பிங்கே என்கிறார் .

சின்னம்மை ,கையில் தண்ணீர் சொம்புடன் வந்து நின்று "கைகால்கள் அலம்பிட்டு வாங்க ---எல்லாம் விபரமா சொல்கிறேன் !'என்று தண்ணீர்
சொம்பை அவர் கையில் கொடுக்கிறார் --அவர் வாங்கி --கை கால் முகம் கழுவுகிறார் .

கை,கால்,முகம் சுத்தம் செய்து விட்டு ,வந்த இராமய்யா --நடராசர் திரு உருவின் எதிரில் நின்று இறைவனை வழிபடுகிறார் ,தொழுது முடிந்தவுடன் ,தட்டில் இருக்கும் திரு நீறை அள்ளப் போகிறார் ---உடனே சின்னம்மை வந்து அவரைத் தடுக்கிறார் .

....ஏன்...தடுக்கிற ....?புரியாமல் கேட்கிறார் இராமய்யா !
"இந்தாங்க இதை வச்சிங்குங்கே ...என்று ஒரு பொட்டலத்தில் இருந்த திருநீறைக் காட்டுகிறார் ,
---இந்த திருநீறு ஏது...?என்று விளங்காமல் கேட்கிறார் .

தினமும் நாம் அந்த சிவனை வணங்கி ,வணங்கி,கும்பிட்டுக் கூப்பிட்டோம்  இல்லையா ? அந்த சிவனே இன்னிக்கு நம்ப வீட்டுக்கு வந்தாருங்கோ !நானே பார்த்தேங்க --

""ஏதாவது கனவு கண்டாயா ?--என்ன சொல்லற ...எனக்கு ஒண்ணுமே புரியலே ...விபரமா சொல்லு !...

சொல்லறேன் உட்காருங்கோ !..,கனவு இல்லிங்க ....கண் முன்னால நடந்துச்சுங்க !....இணைக்கு மதியம் நம்ம வீட்டுக்கு... ஒரு பழுத்த பழம் போல ----- நீண்ட தலைமுடி ,நீண்ட தாடியுடன் பார்க்க பரவசம் மூட்டும் உயர்ந்த தோற்றமுடைய ,கருணைக் கொண்ட கண்களுடன் ஒரு சாமி வந்தார் .--

அவர் வந்ததும் அம்மா பசிக்குது ...உணவு கிடைக்குமா ?--என்றார், எனக்கு ஒண்ணுமே புரியலே ..உடனே அவரை அமரச்சொன்னேன் .அவரும் அமர்ந்தார் .இலைப்போட்டு உணவு பரிமாறினேன் ,..பசியாற உணவை ருசித்து உண்டார் .!இன்னும் போடப்போனேன் ,வேண்டாம் தாயி ..பசி யாறிவிட்டது.என்றார் .

உன்னுடைய கையால் ,எனக்கு உணவு கொடுத்து பசியாற்றி விட்டாய் !--அதற்கு பதிலாக உனக்கு ஒரு வரம் ..வரன்,,தரப்போறேன் என்றார் .!

"'வரமா ...?
புரியவில்லை இராய்யாவுக்கு ...

''ஆமாங்க !..என்னுடைய வயித்துப் பசியைப் போக்கின,--- உனக்கு ,...உலகத்து உயிர்களின் பசியை எல்லாம் போக்கும் ,..மேலும் மக்களோட அறிவுப் பசியைப் போக்குகிற ...ஒரு ஞானக் குழைந்தை பிறக்கும் ,---அது கடவுளோட குழைந்தையாக,எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்,..அவன் பிறந்து அரும் பேரும் பெற்று, பெரும் புகழோடு நிலைத்து வாழ்வான் ,

என்று சொல்லிவிட்டு ...இந்த ''திரு நீற்றைக் கொடுத்து ''நம்ம ரெண்டு பேரையும் இட்டுக்கச் சொன்னாருங்க !...

சின்னம்மை சொல்லியதைக் கேட்டு இமாய்யா ..கொஞ்சம் நேரம் சிலையாக,நின்று விட்டார் ...பின் தெளிந்து நடராசர் சிலையின் திருவுருவைப் பார்த்து கீழே விழுந்து வணங்கி ,சின்னம்மையின் கையில் உள்ள திருநீற்றை வாங்கி ,தன் நெற்றியிலும் ,தன் வாயிலும் போட்டுக் கொள்கிறார் .

அந்த நேரம் வீட்டின் உள்ளே தெய்வீக மங்கள ஒலி கேட்பதுபோல் ஒரு பரபரப்பும் பரவசமும் இருவருடைய உள்ளங்களிலும் தோன்றுவது போல் நிகழ்கிறது .அதை அவர்களால் வர்ணிக்க முடியவில்லை .அற்புதம் !
அற்புதமே !

இராமய்யா !....

பின் அதிர்ச்சி அடைந்தவராக ..அப்புறம் என்ன சொல்லிவிட்டுப் போனாரு ? என்று மேலும் சின்னம்மையைக் கேட்கிறார் .

சின்னம்மை ....அதன் பின் ..''எல்லாம் நலமாக அமையும் ''ன்னு சொல்லிவிட்டு ,இதே மேல வீதியில் நடந்து போனாருங்க ,....நான் ...ஏதோ மந்திரத்தில் மாங்காய் விழுந்தது போல் ...அந்த சிவனடியாரையே பார்த்து நின்னுகிட்டு இருந்தேனா.....

மேற்கொண்டு சின்னம்மையால் பேச முடியவில்லை ..உணர்ச்சி வசப்பட்டவராக இருக்கவே ....'''இராமய்யா ...'''ஏன் பேச்சை நிறுத்திட்டே  சொல்லு மேலும் என்ன நடந்தது ...சொல்லு ..என்று கேட்கிறார் .

சின்னம்மை ஒரு நிலைக்கு வந்து ,....நா....நான் ....பார்த்துகிட்டு இருக்கும் போதே ....அ.....அப்படியே அவருடைய உருவம் மறைஞ்சி போச்சுங்கோ ...என்று கூறிவிட்டு கண்களில் கண்ணீர் பொங்கி வரும் அளவிற்கு அழுகிறார். ,அந்த ஆனந்த கண்ணீரை துடைத்துக் கணவர் இராமய்யாவைப் பார்க்கிறார்.

அவர் அதிர்ச்சியில் ஆழ்ந்தவராக சின்னம்மையை இடைவிடாது பார்க்கிறார் .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .அவர்கள் இருவரின் உள்ளங்களும் எங்கு சென்று உள்ளன என்று அவர்களுக்கே தெரியாமல் மெய் மறந்து பார்த்துக் கொண்டு ....,இறைவனை சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் . பின் இருவரும் சாதாரண நிலைக்கு வருகிறார்கள் .

''அப்படியா ''?என்று இராமய்யா ஆச்சர்யமாக மீண்டும் கேட்கிறார் !..அடுத்து நடராஜ பெருமானை உற்றுப் பார்க்கிறார் ...பக்திப் பரவசத்தோடு உணர்ச்சி பொங்க ,நடராசர் அருகில் மெல்ல சென்று ...கைகளை குவித்து ...''பெருமானே ...இந்த எழைகலோட குரலைக் கேட்டு என்னுடைய குடிசையைத் தேடிவந்து ..உன் தயவான கருணைக் குணத்தை என்ன சொல்லி புகழுவேன் .?..

ஆந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு !...ஏற்கனவே ஐந்து தடவை திருமணம் நடந்து ..ஐந்து மனைவிகளும் இறந்து போயிட்டாங்க ..!..அடுத்து அடுத்து எனக்கு துக்கத்தையும் துயரத்தையும் கொடுத்து,சோசித்துப் பார்த்து ....இவன் தேறிட்டான் அப்படின்னு ...அதுக்குப் பின் ..பரிசா ..ஒரு நல்ல குணவதியை ..எனக்கு ஆறாவது மனைவியாய் கொடுத்து ...அவள் மூலமாக நான்கு குழைந்தைகளையும் கொடுத்து ...''இப்போ இன்னொருப் பிள்ளைக்கும் வரங்கொடுத்த வள்ளலே ...நடராசப் பெருமானே !உமா மகேஸ்வரா !மகாதேவா !''

என்று அருள் வந்தவர்போல் அரற்றுகிறார் ,..உடனே சின்னம்மை பதறிப்போய் அவரைத் தாங்கி பிடித்து ...என்னங்க ...என்னங்க !...என்று ஆறுதல் படுத்துகிறார் .அவரே மீண்டும் பேசத் தொடங்குகிறார் .

''சின்னம்மை ....நீ ...நீ ..சத்தியவதி,!...நீ புண்ணியவதி ..உலகப் பெண்களிலே உயர்ந்த பாக்கியம் பெத்தவ ....அதனால்தான் அந்த எம்பெருமான் சிவபெருமானே சிவனடியாரா ...இந்த வீட்டிற்கு வந்து ...உன் கையாலே விருந்து சாப்பிட்டுவிட்டுப் போயிருக்காரு !//நீ உத்தமி ...அந்த தேவாதி தேவனேயே நேருக்கு நேராக பார்த்த தரிசித்த ...உன்னை மனைவியாய் ,அடைந்த நான் பாக்கியம் செய்தவன் ,!....நீ எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.!...நீ மனைவி அல்ல நான் வணங்கும் பெண் தெய்வம் !...

என்று உணர்ச்சி பொங்க சொல்லிவிட்டு செய்வது அறியாது நிற்கும்... இராமய்யா காலில் விழுந்து சின்னம்மை வணங்குகிறார்...அப்போது குழைந்தைகள் திருவாசகப் பாடலை கணீர் என்ற குரலில் பாடுகிறார்கள் ....பாடல் ஒலி கேட்கும் பக்கமாக இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள் .அங்கே ...சபாபதி ,பரசுராமன் ,சுந்தரம்மா ,உண்ணாமலை ,ஆகிய நால்வரும் திருவாசக நூலை விரித்து வைத்துக் கொண்டு,// அமர்ந்து படித்து பாடிக்கொண்டு இருக்கின்றனர் !.

இராமய்யாவும் .சின்னம்மையும் மெல்ல நடந்து சென்று பூசை அறையில் அமர்ந்து ,குழைந்தைகளுடன் தாங்களும் சேர்ந்து திருவாசகப் பாடலைப் பாடி வழிபாடு செய்கின்றார்கள்.வீடே அருள்மனம் வீசுகிறது.!குடும்பம் ஒரு கோவில் என்பதுபோல் அந்த காட்சி ,கண் கொள்ளா காட்சியாக இருந்தது.எத்துணையும் பேதமுறாத,எவ்வுயிரையும் தம் உயிர்போல் என்னும்  இல்லத்தில் ...இடத்தில் ..இறைவன் இருப்பார் என்பதை அறிய முடிகிறது....அவர்களை...அந்த குடும்பத்தை ... இறைவன் எப்படி இயக்குகிறார் என்பது அவர்களுக்கே தெரியாது .உலக வரலாற்றில் இப்படி ஒரு குடும்பத்தை ,இறைவன் தேர்வு செய்துள்ளார் என்பது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

மீண்டும் பூக்கும்;--      


            

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு