புதன், 4 ஜூலை, 2012

நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 5,

திருஅருட்பிரகாச வள்ளலார் 


நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 5,

மருதூர் இராமய்யா அவர்களின் வீட்டின் வாசலுக்கு அருகில் தலையாரி தருமன் நின்று கொண்டு இருக்கிறான் .

தன் இரண்டு கைகளால் மேனியை மூடிக்கொண்டு கையிலே வைத்திருக்கும் நீண்ட தடியைத் தன மார்போடு அனைத்துக் கொண்டு வாயிலைப் பார்த்தபடி நிற்கிறான் .சின்னம்மை எட்டிப் பார்க்கிறார் .அவரைப் பார்த்த தருமன் --கும்புடுறேன் தாயீ ...என்று வணங்குகிறான்.

''யாரு....தருமனா ?''

அமாம் தாயீ ...சொகமா இருக்கிங்களா ?

இறைவன் அருளால் நலமாக உள்ளோம் ,ஆமாம் என்ன இன்னிக்கு பொழுது கெளம்பறதுக்கு முன்னாடியே வந்து குரல் கொடுக்கிரே !என்று கேட்க ,அவன் .


''சேத்தியாத் தோப்புலே பூமி விவகாரங்க --படையாச்சி மார்களுக்கும்,--ஐயரு வூட்டுக்கும்,வேலித் தகராருங்க --ஐயரு ,மேற்காலக் காட்டை நம்ம குறிஞ்ச்சிபாடி மெத்தை வீட்டுகாரங்களுக்கு விக்கிராங்களாம்--கிரயம் பண்றதுக்கு முன்னாடி நடைப்பாதை தகராறு வேற வந்திருச்சிங்க --கரணம் வந்தாத்தான் பஞ்சாயித்துன்னு சேத்தியாப் தோப்பு ஐயரு சொல்லிப்புட்டாக,--விடியற்காலை வாடா போகலாம்னு நம்ம கர்ணம் ஐயா சொன்னாங்கோ அதான் தாயீ வந்திருக்கேன் ,


அப்ப சரி ..இரு வருவாரு--


என்று கூறிவிட்டு சின்னம்மை உள்ளே போகிறார் . 


குழந்தைகளை அழைத்து --அப்பா வெளியே போறார் வாங்கோ அப்பாவோடு உட்கார்ந்து சாப்பிடுங்கோ என்று அனைவருக்கும் இலையைப் போட்டு உணவு பரிமாறிக் கொண்டு சின்னம்மை பார்வையை வேறுபக்கம் திரும்புக் கொண்டே --


இராமய்யாவிடம் சேத்தியாப் தோப்பு ஐயரு காட்டு தகராறு விஷயமா நீங்க அவசியம் போகனுமா என்று கேட்கிறார்.--ஏன்....?என்கிறார் இராமய்யா !


இல்லே ...இன்னிக்கி குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் இல்லே --கிருத்திகை நாள் வேறே --ரொம்பநாளா குழந்தைகளோடு நீங்க பகல்லே வீட்டுலே இருக்கிறது இல்லை --அதான் சொல்ல வந்தேன் என்கிறார் சின்னம்மை ,--


கிராம கர்ணம் வேலைக்குன்னு வந்துவிட்டா இந்தமாதிரி வேலைகள் வந்து கொண்டே இருக்கும் அதை சரி செய்வதுதான் நம்ம வேலை .நேற்று திடீர் என்று ஐயரு மகன் சிவதாணு சாவடியில ராத்திரி குந்தி இருக்கும் போது வந்து சொன்னான் ..என்ன பண்றது பொறுப்பான வேலைக்கு வந்துட்டா அதை பொறுப்புடன் செய்து கொடுப்பது நமது உத்தியோகத்தின் கடமையாகும் .


"'நாளைக்கு போகலாம் இல்லையீங்களா?
நாளைக்கா ...நாளைக்கு திங்கட்கிழமை நான் மவுனவிரதம் இருக்கும் நாளாச்சே --


ஆமா ...மறந்து போச்சி ..உங்க விருப்பம் எப்படியோ அப்படியே செய்யுங்கள் !
நான் என் விருப்படியே செய்யிறேன் நீ ஒண்ணு பண்ணே --


என்னங்கே --


கொஞ்சம் சாதத்திலே மோர் விடு என்றவுடன் அனைவரும் சிரித்தபடியே சாப்பிடுகிறார்கள் .


ஆமா ...தருமனுக்கு சோறு போட்டியா ? சாப்பிடிறான் என்று சின்னம்மை சொல்ல ,சாப்பிட்டதுக்கு அப்புறம் --நிலம் அளக்க சங்கிலிய எடுத்துக்க சொல்லு --சரிங்க என்கிறார் சின்னம்மை .


திண்ணையிலே அமர்ந்து சாப்பிட்டு முடிந்த தலையாரி தருமன் --இலையை எடுத்து ஒதுக்கு புறத்தில் போடுகிறான் .--சின்னம்மை தண்ணீர் ஊற்ற கைகளை அலம்புகிறான் இரண்டு கைகளையும் குவித்து குழி பண்ணி --வாயருகே வைத்து தண்ணீர் குடிக்கிறான் .


குடித்தவுடன்-- தாயீ உங்க கையாள போட்ட சாப்பாடு வயிறு நிறைஞ்சு போச்சி ,நீங்க நாங்க வணங்கும் தெய்வம் தாயீ என்று கை கூப்பி வணங்குகிறான் .


போலாம் தருமன் ,,என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறார் இராமய்யா --


போலாம் சாமீ--என்று கூறிக்கொண்டே சங்கிலி முதலிய நிலம் அளக்கும் கருவிகளை எடுத்துக் கொள்கிறான் -- புறப்பட ஆரம்பிக்கிறார்கள்.


அவர்கள் புறப்படும் போது சித்தே நில்லுங்கள் " என்று இராமய்யாவை நிறுத்தி விட்டு சின்னம்மை வானத்தை அண்ணாந்து பார்க்கிறார் .


அங்கே ஒரு கழுகு பறக்கிறது ,


கன்னத்தில் போட்டுக் கொண்டே சின்னம்மை சகுனம் நன்றாக இருப்பதற்கு அடையாளமாக தலையை அசைத்துக் கொண்டே ----ம் --இப்ப புறப்படுங்க என்று இராமய்யாவிடம் சொல்ல --மெல்ல புன்னகை செய்தவாறு அவர்கள் புறப்படுகின்றனர்.               
.
இராமய்யா வீதியில் போய்க் கொண்டு இருக்கிறார் ,போவோர் வருவோர் அவருக்கு கும்பிடு போட்டு செல்கின்றனர் .

சாவடியில் பொழுது போக்க அமர்ந்திருக்கும் சிலர் --இவரைக் கண்டதும் எழுந்து நிற்கின்றனர்,--மரியாதை கலந்த புன்னகையுடன் புகைத்துக் கொண்டு இருக்கும் சுருட்டை மறைக்கின்றனர்,

பள்ளிகூடம ;--

சிறிது தூரம் சென்றதும் ,ஒரு திண்ணையில் பள்ளிகூடம் நடந்து கொண்டு இருக்கிறது.ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.அவர் பாடத்தை சொல்ல குழைந்தைகள் அதைத் திருப்பிச் சொல்கின்றனர் ,

''அறஞ்செய விரும்பு ,
ஆறுவது சினம் ,
இயல்வது கரவேல்,
ஈவது விலக்கேல்,
சோம்பித் திரியேல்,
'ங 'ப் போல் வளை ''  

ஆசிரியர் ''ங'' போல் வளை என்று கூறி முடித்தவுடன் --ஒரு மாணவன் எழுந்து -ங போல் வளை என்பதற்கு ஆசிரியரிடம் அர்த்தம் கேட்கிறான் ,உடனே ஆசிரியர் திரு திரு வென முழிக்கிறார்.பிறகு சமாளித்து ங போல் வளைன்னா தெரியாதா ?என்று மாணவர்களிடம் கேட்க --அனைவரும் தெரியாது என்று கூறுகின்றனர் ,அதில் ஒரு மாணவன் மட்டும் எனக்குத் தெரியும் என்று கூறுகின்றான் ,

ஆசிரியர் மகிழ்ந்து --உனக்குத் தெரியுமா ?என்று கேட்டுவிட்டு --சுற்றிலும் பார்வையை செலுத்தி விட்டு அவன் அருகில் சென்று --எனக்கு மட்டும் மேதுவாகச்சொல்லு என்கிறார் .மாணவனும் அவர் காதருகில் மெல்லிய குரலில் ங போல் வளைன்னா --மீன் பிடிக்கிற வலை மாதிரி -அதுவும் ஒரு வலை தான் வாத்தியாரய்யா --என்கிறான் .

ஆசிரியர் முகத்தில் அசடு வழிகிறது,
கெட்டிக்காரன் போய் உக்காரு --
''ங ''போல் வளைன்னா அர்த்தம் சொல்லுங்கள் ஐயா--என்று குழைந்தைகள் கூச்சல் போடுகின்றனர் ,அமைதியா இருங்கோ நாளைக்கு சொல்கிறேன் என்று சிரித்து மழுப்புகிறார் --பாவம் உண்மையிலே அவருக்கு அர்த்தம் தெரியவில்லை .--


வேண்டாம் வேண்டாம் ...இன்னிக்கே சொல்லுங்கள் என்று மீண்டும் கூச்சல் போடுகின்றனர் .
அச்சச்சோ --நாம இன்னிக்கு நல்லா மாட்டிகிட்டோம் இவங்க முன்னாடி கேவலப் படனும்னு விதி --அதான் மாட்டிகிட்டோம் என்று மனதுக்குள்ளே அங்கலாய்க்கிறார் ஆசிரியர் அவருக்கு சிறிது  கோபம வந்துவிடுகிறது ,


இதோ பாருங்கோ --இங்க நான்தான் வாத்தியாரு --கேள்வி கேக்கிறது என்வேலை பதில் சொல்றது உங்க வேலை --நீங்கள் எல்லாம்  கேள்விக் கேட்டு நான் பதில் சொல்றது என்னங்கடா அது புது வழக்கம் .?


என்றவுடன் --  


இமாய்யா மகன் சபாபதி எழுந்து --டேய்--வாத்தியாருக்கே பதில் தெரியலே டேய்--சும்மா மழுப்பராறு --என்று கூறிவிட்டு சிரிக்க வகுப்பு அறையில் உள்ள அனைவரும் சிரிக்கின்றனர் ,ஆசிரியர் அசடு வழிய நிற்கிறார் .


அந்த வழியே வந்துகொண்டு இருந்த இராமய்யா மாணவர்கள் கூச்சல் கேட்டு அங்கே வருகிறார்.


பள்ளிகூடமே அமைதி ,
வாத்தியார் கும்பிடுகிறார் ,
மாணவர்கள் சந்தேகம் கேட்டால் நாளைக்கு சொல்கிறேன் எங்கிறது --சமாதானமா எனக்கு பாடலே --என்று வாத்தியாரைப் பார்க்கிறார்.


பிறகு --
சிறுவனிடம் 'தம்பி உங்களுக்கு இப்போ என்ன சந்தேகம் ?என்று கேட்க --அவன் ''ங''போல வளைக்கு அர்த்தம் கேட்கிறான் ,


பின்னர் --இராமய்யாவின் பார்வை வாத்தியார் பக்கம் திரும்ப --வாத்தியார் தலையைச் சொரிந்து கொண்டு நிற்கிறார்,
தலையாரி தருமன் ''வாத்தியார் தலையைச் சொரியரத பார்த்தா --அவருக்கே இது ஒன்றும் அத்துபடி ஆகலே போல இருக்குதுங்க சாமீ--என்கிறான் .


குழைந்தைகளைப் பார்த்து இராமய்யா --''ங''போல் வளைன்னா --ங ங்கற ஒரு எழுத்தில எத்தனை வளைவு இருக்குது --அதுமாதிரி நம்ம ஒடம்பு வலையுனும்னு அர்த்தம்.அதாவது நல்லா உழைக்கணும் என்பதற்காக சொன்ன பொன் மொழி இது,உடம்பு வளைய மாட்டேங்குதன்னா சோம்பலா இருக்கிறவங்களப் பார்த்து ங போல வளை என்று  பெரியவங்க சொல்லுவாங்கோ !இதான் அதற்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் -தெரிந்ததா ?


குழைந்தைகள் தலையை அசைத்து புரிந்து கொள்கின்றனர்.வரட்டுமா! என்று ஆசிரியரிடம் கூறிவிட்டு இராமய்யா புறப்படுகிறார் .


மீண்டும் பூக்கும்;--           

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு