வெள்ளி, 15 ஜூன், 2012

நான் அறிந்த வள்ளலார்! பாகம்--4,

நான் அறிந்த வள்ளலார்! பாகம்--4,


சாதி சமய மதங்களை ஒழிக்க பாடுப்பட்ட சீர் சிருத்த செம்மல் ,துன்மார்க்கத்தை ஒழித்து சன்மார்க்கம் காண புறப்பட்ட ஞான ஒளி !அருட்பாக்களை அவனி எங்கும் பாட வைத்த சங்கீதக் குயில் ,

தாவரங்கள் யானாலும் ,எறும்பு முதல் யானை வரை உள்ள ஜீவன்கள் யானாலும் ஆறறிவு படைத்த மனிதர்கள் யானாலும் எல்லா உயிர்களும் ஒன்றே என்று உன்னதமான கருத்துக்களை வழங்கிய கருணை வள்ளல் ,

அவர் யார் ?

அவர்தான் திருஅருட்பிரகாச வள்ளல் என்னும் இராமலிங்க அடிகள் ! அவரால் பிறந்த தெய்வ நிலையங்கள்,கொள்கைகள்,லட்சயங்கள்,பொது மறையாம் திரு அருட்பாவைப் பற்றியும் கூறினோம் ,

இனி அண்ணலின் சரித்திரத்தைத் திருப்புவோம்.!

அந்த புனித சரித்திரம் 1823,-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி --சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21,--ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை துவங்குகிறது .

தெய்வத் தமிழ் குலவும் திருமண்ணில்.தென்னாற்காடு மாவட்டத்தில்  {தற்போது கடலூர் மாவட்டம் } பாடல் பெற்ற திருத்தலமான சிதம்பரத்திற்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவில் உள்ள மருதூர் என்னும் அழகிய சிற்றூரில் இறைவனால் வருவிக்க உற்றவரின் வரலாறு தொடங்கிகிறது.!

வாருங்கள் மருதூர் செல்வோம் !.

மருதூர் கிராமம் ;--

சூரியன் தன சுடர்க் கதிர்களை வெளியே காட்டிக் கொண்டு வரும் ,விடிந்தும் விடியாத அதிகாலை நேரம்.ஆதவன் தன பொற் கரங்களை விரித்து முகிலைக்  கிழித்துக் கொண்டு வெளிக் கிளம்புகிறான் ,

பூபாள ராகம் பின்னணியில் இழை யோடுகிறது ,மருதூர் கிராமத்தின் வெளிப்புறக் காட்சிகளை கண்டு மகிழ்கிறோம்.

சேவல் சோம்பல் முறித்து உற்சாகமாகக் கூவுகின்றது ,பறவை இனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு தங்கள் கூடுகளை விட்டுப் பறக்கின்றன.

மாடுகளும்,ஆடுகளும்,கத்துகின்றன ,

கிராமக் கோயிலில் இருந்து மணியோசை காற்றிலே மிதந்து வந்து ஊரெங்கும் பரவுகிறது.அதிகாலைப் பொழுதின் பனிமூட்டங்களுக்கு நடுவே சூரிய ஒளி ஊடுருவியதால் --பனித்திறள் புகைபோல் நகர்ந்து கொண்டு இருந்தன.

புளிய மரங்கள் நிறைந்தப் பகுதி !

அங்கே பத்து பதினைந்து கூரை வீடுகள் ,இளஞ் சூரியன் ஒளியில குடிசைகள் முற்றுப் பெறாத ஓவியம போல் தெளிவில்லாமல் தெரிகின்றன ,ஒரு குடிசைக்குள்ளே --குழைந்தைகள் மிகவும் இனிமையாக திருவாசகம் பாடலைப் பாடுகின்றனர்.அந்தப் பாடல் ஒலி மட்டும் வெளியே கேட்கிறது.

சோதியே !சுடரே !சூழ் ஒளி விளக்கே !
சுரிகுழல் பனைமுலை மடந்தை
பாதியே !பரனே !பால் கொள் வெண் நீற்றாய்
பங்கயத் அயனும் மாலறியா
நீதியே ! செல்வத் திருப் பெருந்துறையில்
நிறை மலர்க்குள் இருந்த மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெதந்துவே என்று அருளாயே !

வீட்டின் முன்புறம் ---

சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க பெரியவர் ,சிவந்த மேனி ,சுட்டுக்குடுமி ,கழுத்தில் ஒரே ஒரு ருத்திராட்சை மணிக கட்டிய கறுப்புக் கயிறு ,நெற்றியில் திருநீறு,நடுவே சந்தனப் பொட்டின் மேல் குங்குமம் ,பார்த்தாலே மரியாதை
தரவேண்டும் என்று என்னும் படியான கம்பீரமான தோற்றம் .

அவர்தான் --மருதூர் கிராமக் கணக்குப்பிள்ளை யான இராமையாபிள்ளை என்பவராகும் .

காலையில் நீராடிவிட்டு சிவப்பிழம்பாக நின்று நெஞ்சுக்கு நேராகக் கரங்களைக் குவித்து --கண்களை லேசாக மூடிக்கொண்டு சூரியன் இருக்கும் திசையை நோக்கி வணங்கிக் கொண்டு இருக்கிறார் .

குழைந்தைகள் குடிசைக்குள் இருந்து பாடும் திருவாசகம் காற்றில் மிதந்து அவர் செவிக்குள் நுழைகிறது .இராமையா முகம் மலருகிறது,உள்ளம உருக சூரிய நமஸ்காரம் செய்கிறார்.

அவரின் துணைவியார் சின்னம்மை ,

கணவரின் குறிப்பு அறிந்து நடக்கும் குலமகள்,பக்தி நெறி கொண்டுவாழும் பரிசுத்த மனம் படைத்த பதிவிரதை,பெண்களே பெண்களைப் போற்றும் பெருமாட்டி,ஊரார் போற்றும் உயர்ந்த குணம் படைத்தவர்,பசி என்று வந்தவருக்கு பசியாற்றும் அன்ன லஷ்சுமி,அவரைப் பார்த்தாலே தெய்வத் திருமகள் போல் காட்சி அளிக்கும் தெய்வீக தோற்றம்.கருணை நிறைந்த கண்கள் .கள்ளம் கபடம் இல்லா குணம் படைத்தவர் ,இறைவனே அவர் இல்லம் தேடிவரும் அன்பும் தயவும் கொண்டவர் ,பெண்கள் குலத்திற்கே பெருமைத் தேடித்தரும் பெருங் குணம் படைத்தவர் .

இத்தனை செயல்களுக்கும் சொந்தக் காரிகைதான் இராமய்யாவின் துணைவியார் சின்னம்மை என்பவராகும்.

அந்த அம்மையார் குளித்து முடித்து ஈரம் காயாத தலையோடு --சுமங்கலி இறை மகளாக நெற்றியில் திலகம் துலங்க--வீட்டின் முற்றத்தில் சாணம தெளிக்கிறார் .

சாணநீர் தெளிக்கும் சப்தமும் கேட்கிறது ,பின் கோலம வரைகிறார் .இந்த காட்சிகளோடு திருவாசகப் பாடல் ஒலித்துக் கொண்டு உள்ளது.

இராமய்யாவின் வாய் --

நமச்சிவாய வாழ்க !
நாதன் தாள் வாழ்க !

என்று முனுமுனுக் கொண்டு ,தலைக்குமேல் கையைக் குவித்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு --திருவாசகப் பாட்டு ஒலிக்கின்ற தமது குடிசைக்குள் நுழைகிறார் ,

உணவு ;--

இராமய்யா,சபாபதி,பரசுராமன்,சுந்தராம்பாள் ,உண்ணாமலை ஆகியோர் சாப்பிட அமர்ந்து இறக்கின்றனர் ,தாய் இலையில் பரிமாறுகிறாள்,

பரிமாறும் போதே உண்ணாமலை எடுத்துச் சுவை பார்க்கிறாள் ,இதைப் பார்த்த சபாபதி ,அப்பா ...உண்ணாமலை திங்கறா...என்றவுடன் அவளைப் பார்க்கிறார் உண்ணாமலை உணவை மென்று கொண்டே அவரை அசடுவழியப் பார்க்கிறார் ,

உண்ணாமலை ...வழக்கமாக மொத மொதல்லே நம்ப உறவுக்காரங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தானே நாம சாப்பிடுனும் என்று சொல்லி இருக்கேன் இல்லையா ? என்று இராமய்யா அவளை கொஞ்சம் கோபத்தோடு கண்டிக்கிறார் .

உடனே சின்னம்மை ..ஏங்க கொழந்தை மேல் கோபப் படுறீங்க ..அது பொக்குன்னு போச்சு பாருங்க ..அதெல்லாம் நீங்க பாராயணம் பண்ணிக்கிட்டு இருக்கும் போதே ..காக்காய்க்கு சோறு வைச்சுட்டேன் ..எல்லாரும் சாப்பிடலாம் !என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் .

உண்ணாமலை சிரித்துக் கொண்டே ..நான் சாமி கும்பிடும் போதே ..அம்மா காக்காய்க்கு சோறு வைக்கப் போனதை பாத்துட்டேன் அப்பா ..என்று கூறிக் கொண்டே சோற்றை அள்ளி வாயில் திணிக்கிறாள் .

அதற்கு பரசுராமன் ..அதான் சோறு போட்ட உடனே வாயை வெச்சுட்டியா ..
என்று கூறுகிறான் ,

உடனே சுந்தரம்மா ..அப்பா ..அம்மா கையிலே சோறு கொண்டு போனதை பரசுராம அண்ணன் தான் பாத்து உண்ணாமலை கிட்டே ஜாடைக் காட்டுச்சு ,..
தங்கச்சி பாவம் அப்பா ! அவ சின்னக் குழைந்தை தானே அவளுக்கு என்ன தெரியும்.? என்றவுடன் ...அமைதி யுடன் உணவு உன்கின்றார்கள்.

உணவு உட்கொண்ட பிறகு பரசுராமனையும் உண்ணாமலையும் அழைகிறார் இராமய்யா ..இருவரும் மவுனமாக வந்து நிற்கின்றனர் ..

சாமி கும்பிடறப்போ..நீங்க ரெண்டு பேரும் கடவுள் நினைப்பு இல்லாமல் ..யாரு என்ன பண்றாங்கன்னு பராக்குப் பாத்துகிட்டு இருந்து இருக்கீங்க ?
இல்லே ...இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா ?--இதுக்கு என்ன தண்டனை தெரியும் இல்லே என்கிறார் .

உண்ணாமலை ...சாமிகிட்டே தோப்புக் கரணம் போடனும் !என்று கூறுகிறாள் ,

போங்க --சாமிக்கு முன்னாலே ஒருத்தர் காதை ஒருத்தர் பிடிச்சுகிட்டு --இன்மேல் தப்புப் பண்ண மாட்டேன் --ன்னு சொல்லிக் கிட்டே தோப்புக் கரணம்
போடுங்க ,...என்று சொல்ல,-- அப்பா சொன்ன மாதிரியே உண்ணாமலையும் பரசுராமனும் --நடராசர் முன்னிலையில் ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடுகின்றனர் .

அப்பா ....காலு வலிக்குதப்பா..அப்பா ...ம் ..
இருவரும் அழ ஆரம்பிக்கவே ..ஒடி வந்து அந்த இரண்டு பேரையும் எடுத்து அனைத்துக் கொள்கிறார் சின்னம்மை .--

அப்போது வெளியே இருந்து ஒருகுரல் ,சாமீ---சாமியோவ்--என்று கேட்கிறது .
"தலையாரி தருமன் குரலாட்டம் இருக்கு" இருங்க பார்க்கறேன் ..என்று கூறிக் கொண்டே சின்னம்மை வாசலுக்குப் போகிறார் .

தொடரும் ;--    






1 கருத்துகள்:

16 அக்டோபர், 2023 அன்று AM 8:38 க்கு, Blogger Sri Chandra கூறியது…

A good article

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு