வெள்ளி, 15 ஜூன், 2012

வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு !


வாழ வழிகாட்டும் வள்ளலார்!

தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் வடமேற்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு அருகே அமைந்திருக்கும் மருதூர் என்னும் ஒரு சிறிய கிராமம் உள்ளது  .
அந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார்,திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .

இராமைய்யாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .அவருக்கு முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார் . 
இராமைய்யா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.

சிதம்பர தரிசனம் !

பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமைய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர் .அந்த சமயம் ,

கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தன்னுடைய தாயின் கரங்களில் இருந்து கொண்டு தரிசித்தார்..அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று இடைவிடாமல் சிரித்தது..அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பைய்யா தீஷ்தர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு பார்த்து ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன்   தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள் .இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி ,இராமையாவிடம் ,இக் குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு,இராமைய்யா தன் குடும்பத்துடன் சென்றார் .

குருக்கள் வீட்டில் நடந்தது !

அப்பய்யா தீஷ்தர்,பாய்விரித்து குழைந்தையை கையில் பெற்று, கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினார் .அதைப் பார்த்த இராமைய்யா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசயித்தனர். பின் அவர்களுக்கு தேநீர் கொடுத்து மகிழ்ந்தார் .

இக் குழைந்தை சாதாரணக் குழந்தை அல்ல கடவுளின் குழந்தை அருள் ஞானக் குழந்தை,இக் குழந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் அப்பைய்ய தீஷ்சதர்.இது வரலாற்று உண்மையாகும்.

ஆண்டவர் காட்சி கொடுத்தல் !

அனைவருக்கும் இரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை ஐந்து மாதக் குழந்தையாக இருந்த இராமலிங்க பெருமகனார்க்கு வெட்ட வெளியாக புலப்பட்டது. இறைவன் ரகசியத்தை வெளிப்படையாகக் காட்டி அருளினார் திரை தூக்கத் தாம் அருள் வெளியாகக் கண்ட அனுபவத்தை அவருடைய நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் அருட்பாடலாக எழுதி வெளிப்படுத்துகிறார் . 

தான் குழந்தையாக இருந்த போது சிதம்பரம் அழைத்து சென்ற தாய் தந்தையர் யாரும் அவரிடம் சொல்லவில்லை.அவர்களும் இல்லை .அவருக்கு வேறு யாரும் சொல்லவில்லை.அப்படி இருந்தும் அவருக்கு எப்படி அந்த நிகழ்ச்சி தெரியும்.எல்லாம் இறைவன் காட்டியது,இறைவன் சொல்லியது.இறைவனுடைய குழந்தை யாயிற்றே ,இறைவனால் அனுப்பிவைத்த குழந்தை என்பதால் அவருக்கு அனைத்தும் வெளிப்படையாகக் காட்டியதை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார் . 

அருள் விளக்க மாலை பாடல் ;--44,    

தாய் முதலோரோடு சிறு பருவத்திற் தில்லைத் 
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது 
மேய் வகைமேற் காட்டாதே என்தனக்கே எல்லாம் 
வெளியாகக் காட்டிய என் மெய்யுருவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்வகை யோர் போற்ற மணி மன்றில் நடம் புரியுஞ்
ஜோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்து அருளே !

என்ற பாடல் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.இராமலிங்கப் பெருமானை சிறு வயதிலேயே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் என்பதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் யார் என்பதை பின் வரும் வரலாற்றில் காண்போம் .தொடர்ந்து வரலாற்றைப் பார்ப்போம் .

குடும்பம் சென்னைக்கு செல்லுதல் !
ராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமைய்யா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான  போன்னேரிக்கு அடுத்த சின்னக்காவனம்  சென்றார் சிலகாலம் சின்னக்காவனத்தில் வாழ்ந்த பின்பு தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்,குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னையில் பெத்து நாயக்கன் பேட்டை ஏழு கிணறு ,கதவு எண் பழையது 39....உள்ள வீராசாமிப் பிள்ளைத் தெருவில் உள்ள வீட்டில் குடி பெயர்ந்தார்கள் .இன்னும் அந்த வீடு சென்னையில் வழிபடும் தலமாக உள்ளது . 
அந்த வீட்டில் இருந்து கொண்டு ,மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களிடம்  கல்வி பயின்றார்.பின் புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற் பொழிவு களுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

ஓதாது உணர்தல் !

இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் .பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார் .அடுத்து நடந்தது என்ன ?

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் .இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் அதை கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும் .ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும் .ஆசிரியர் சொன்ன பாடல் .

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல,இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள்.இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் ஏன் நீ சொல்ல வில்லை என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்டார்.அதற்கு தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம் .மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா என்று மிரட்டுவது போல் கேட்டார் ஆசிரியர் .

இராமலிங்கம் பதில் சொல்ல ஆரம்பித்தார் !

ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் நல்ல கருத்துக்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது ஆதலால் நான் அப்படி சொல்ல விருமப வில்லை என்று பதில் அளித்தார் .ஆசிரியருக்கு கோபம வந்து விட்டது .என்ன அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய் ,அப்படியானால் நீ பெரிய அறிவாளியா ? உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரிய புராண சொற் பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார் .அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாக பேசுகிறாயே என்று வினவியதுடன் அப்படியானால் நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம் என்று கிண்டலாக அதட்டி கேட்டார் .{இவை யாவும் மற்றவர்கள் எழுதி வைத்தவையாகும் அருட்பாவில் ஆதாரம் இல்லை } 

இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலை பாட ஆரம்பித்தார் .அவர் பாடிய பாடல் வருமாறு .... 

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்

என ...வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர்.அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள் .இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை.ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி திட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும் ,பக்குவ நிலையையும் ,கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகாவித்துவான்,---இராமலிங்கம் கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும்,உணர்த்தவும்,அறிவில் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்
 
அன்றிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார் இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்.எழுதினார் .

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றது இல்லை!,எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை! எவரிடத்தும் உபதேசம் பெற்றது இல்லை ! எவரிடத்தும் தீட்சை பெற்றது இல்லை!சரியை,கிரியை,யோகம்,ஞானம்,போன்ற ஆன்மீக பயிற்ச்சி பெறவில்லை.கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார் !.கல்வியும் கேள்வியும்,பதிலும், கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கேட்கவில்லை கற்கவில்லை !,வேறு எந்த நூல்களில்  இருந்தும் படித்து தெரிந்து கொள்ள வில்லை என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். .

இறைவன் இராமலிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார்.குமாரப்பருவத்திலே என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்திற் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்வியை, என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடைப் பகுதியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் எழுதி வைத்துள்ளார் .மேலும்

மேலும் பாடலில் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!.

வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்று அடிகுறித்துப் பாடும் வகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந் தவ மெய்ப்பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறு நெறியிற் சிறிதும்
செலுத்தாமல் பெரு நெறியிற் செலுத்திய நற்றுணையே
அம்மானே என்னாவிக் கான பெரும் பொருளே
அம்பலத் தென்னரசே என் அலங்கல் அணிந்தருளே !

சிறுவயதிலேயே இறைவன் தனக்கு,-- அருளை வியந்து அளித்த பெருமையைப் பற்றி போற்றி புகழ்ந்ததோடு அல்லாமல் ,இச்சிறியவனை,சிறு நெறியிற் செலுத்தாமல் --அனைவராலும் போற்றும் பெருநெறியில் செலுத்திய நற்றுணையே என போற்றி புகழ்கின்றார்

அடுத்து

கருவிற் கலந்த துணையே என் கனிவிற் கலந்த அமுதே என்
கண்ணிற் கலந்த வொளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்
உருவிற் கலந்த அழகே என் உயிரிற் கலந்த உறவே என்
உணவிற் கலந்து சுகமே என்னுடைய வொருமைப்பெருமானே
தெருவிற் கலந்து விளையாடும் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி யளித்த பெருங் கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருண இதுவென்றே
வாயே பறையாய் யறைகின்றேன் எந்தாய் கருணை வளத்தாலே !

என்னுடைய கருவிலே கலந்த கருணைக் கடல்,நீ --அதுமட்டும் அல்லாமல் ,கனிவிற் ,கண்ணில் ,கருத்தில்,உருவில்,உயிரில் ,உணர்வில்,உள்ளத்தில்,உடம்பில்  முதலிய அனைத்திலும் கலந்து என்னை பிரியாமல் ,உண்மை அறிந்துகொள்ளும் ''மெய்ஞ் ஞான சித்தி'' அளித்த பெருங்கருணை தேவே .உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் மருவிக் கலந்து (சமமாக ) வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுவென்றே --என்னுடைய வாயே பறையாய் {சத்தம் }யறைய வைத்து வேடிக்கைப் பார்க்கும் உம் பெருங் கருணை திறத்தை என்னென்று கருதி ! என்னென்று துதிப்பேன் !என்கிறார் வள்ளார் .

சிறு வயதிலே பள்ளிக்கு செல்லாமல்,யாரிடமும் கல்விக் கற்காமல்,உலகில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளும் அருள் அறிவும்,ஆற்றலும் பெற்றவராகும்.      

தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி விளக்கி உள்ளார் !

மேலும் இடம்பத்தையும் ஆராவாரத்தையும் ,பெருமறைப்பையும்,போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும்,அறிதற்கும் மிகவும் லேசுடையதாய் ,சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருஅருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யாகிய தமிழ் மொழி யினிடத்தே மனதை பற்ற செய்து அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாடல்களை பாட்டுவித்து அருளினீர் என்று தமிழ் மொழியின் சிறப்பினையும்,பெருமையும்  தெளிவுப் படுத்துகிறார்

அச்சிறு பருவத்திலே ஜாதி ஆசாரம்,ஆசிரம ஆசாரம்,என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய் என்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து ,அப்பருவம் ஏறுந்தோரும்  எனது அறிவை விளக்கஞ் செய்து,செய்து என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்க வைத்து அருளினீர் என்றும் .

உண்மைக கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர் !

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்தானே ,அப்பருவத்திற்கு மிகவும் உரிய விரும்பும் இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்கு வித்து அருளினீர் என்றும்.

அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே ,எல்லா உயிர்களுக்கும் இன்பம் தருதற்கு அகத்தும் புறத்தும் விளங்கிகின்ற ''அருட்பெரும்ஜோதி உண்மைக கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர் என்றும் .

வாலிபப் பருவம் தோன்றியபோதே சைவம் ,வைணவம் .சமணம்,பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு { கிருத்துவம்,இஸ்லாம் }பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும்,அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும் .கதிகளும்,தத்துவங்களும் தத்துவசித்தி விகற்பங்கள் என்றும் [அதாவது உண்மை அல்ல }அச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள் ,சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும் ,உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச சிறிதும் அனுட்டியாமற் [பற்று வைக்காமல் }செய்வித்து அருளினீர் என்றும் .

அன்றியும் வேதாந்தம் ,சித்தாந்தம்,போதாந்தம் ,நாதாந்தம் ,யோகாந்தம்,கலாந்தம்,முதலாகப் பல பெயர்க் கொண்டு பலபட விரிந்த மதங்களும் ,மார்க்கங்களும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய அனுபவத்தின் லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாமற் {அவைகளை பின்பற்றாமல் }தடை செய்வித்து அருளினீர் என்றும் தான் சிறுவயதில் எப்படி வாழ்ந்தேன் இறைவன் என்னை எப்படி ஆட்கொண்டு சென்றார் என்பதை மிகத் தெளிவாக இமாலிங்கப் பெருமான் அவரே தன் வாழ்க்கை சரிதத்தை எழுதி வைத்துள்ளார் ,

அடுத்து அவரே சொல்லுவதை கேளுங்கள் .

அங்கனம் செய்வித்தும் அதற்கு மேல் என்னை --உலகியலில் உள்ள பொன்னாசை ,பெண்ணாசை,மண்ணாசை,முதலிய எவ்வித இச்சைகளிலும் என் அறிவை ஓர் அணுத்துணையும் பற்று வைக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி ,எல்லா உயிர்களும் இன்பம் அடைதல் வேண்டும் என்னும் கருணை நன் முயற்சியைப் பெறுவித்துச சுத்த சனமார்க்கத் தனிநெறி ஒனறையே பற்றுவித்து எக்காலத்தும்,நாசமடையாத சுத்த தேகம் ,பிரணவதேகம் ,ஞானதேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும்,''கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,கருமசித்தி,யோகசித்தி,ஞானசித்தி, முதலிய எல்லாச சித்திகளும்,பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் சித்திப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்கு திருவுளங் கொண்டு, ''அருட்பெரும்ஜோதியராகிய'' உண்மைக கடவுள்  ஒருவரே ! ,----

நான் எவ்விதத்தும் ,அறிதற்கு அறிய உண்மைப் பேரறிவை அறிவிதத்தும் ,நான் காண்பதற்கு அறிய உண்மைப் பெரும் காட்சிகளைக் காட்டுவித்தும்,நான் எவ்வித்த்தும் செய்தற்கு அறிய உண்மைப் பெருஞ் செயல்களைச செய்வித்தும் ,நான் எவ்விதத்தும் அடைதற்கு அறிய உண்மைப் பெரும் நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்து அறிதற்கு அறிய உண்மைப் பேரணுபவங்களை அனுபவித்தும் ,எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்தில் இருந்து உயிரிற் கலந்து பெரும் தயவால் திரு நடம செய்து அருளுகின்றீர் ..
இங்கனம் செய்து அருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இராமலிங்கப் பெருமானை சிறுவயதிலேயே ஆட்கொண்டார் என்பதை யாரும் மறுக்க இயலாது .

அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !
ஆறாம் திருமுறையில் பாடிய பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம் !

ஏதும் ஒன்றும் அறியாப் பேதையாம் பருவத்தே என்னை யாட்கொண்டு எனை யுவந்தே
ஓதும இன்மொழியாற் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த்துனைவா 
வேதமும் பயனுமாகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான 
போதகந் தருதற்கு இது தகுதருணம் புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே !   

எனது உடலும் உயிரும் பொருளும் நின்ன தல்லவோ
எந்தாய் இதனைப் பெருக வென நான் இன்று சொல்லவோ 
சின்ன வயதில் என்னை யாண்ட திறத்தை நினைக்குதே 
சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே !       

ஆதியிலே எனை யாட்கொண்டு என் அறிவகத்தே யமர்ந்த
அப்பா என் அன்பே என் ஆருயிரே அமுதே 
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் 
மிகப் பெரிய பருவமென வியந்து அருளி அருளாம் 
ஜோதியிலே விழைவுறச செய்து இனிய மொழி மாலை 
தொடுத்திடச செய்து அணிந்து கொண்ட துறையே சிற்பொதுவில்
நீதியிலே நிறைந்த நடத்தரசே என்றடியேன் 
நிகழ்த்திய சொன்மாலையும் நீ நிகழ்த்தி யணிந்தருளே!

வெம்மாலைச சிறுவரோடும் விளையாடித் திரியும்
மிகச்சிறிய பருவத்தே வியந்து நினை நமது 
பெம்மானென்று அடிக்குறித்துப் பாடும் வகை புரிந்த
பெருமானே நான் செய்த பெருந்தவ மெய்ப்பயனே
செம்மாந்தச சிறியேனைச சிறு நெறியிற் சிறிதுஞ்
செலுத்தாமற் பெரு நெறியிற் செலுத்திய நற்துணையே 
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே 
அம்பலத்தென் அரசே என் அலங்கல் அணிந்தருளே !

ஓதாது உணர்ந்திட வொளி யளித்து எனக்கே 
ஆதாரமாகிய அருட்பெரும்ஜோதி !  

''கற்றதும் நின்னிடத்தே ,பின் கேட்டதும் நின்னிடத்தே '' 

''பள்ளியில் பயிற்றாது எந்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்து ''

''ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதான் '

''ஓதும் மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி '

''ஓதி உணர்ந்தவர்கள் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்த்திய என் மெய் உறவாம் பொருளே '''
'         
''ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் ''
        
எனபனப் போன்ற அகச்சான்றுகள் ஆறாம் திருமுறையில் குவிந்து கிடைக்கின்றன .இவை தெரியாமல் வள்ளலார் வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் அவரவர் கருத்துக்கு புலப்பட்டதை கண்டபடி எழுதி வைத்துள்ளார்கள் அருட்பாவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,மேலோட்டமாக படித்து விட்டு எழுதுவது முற்றிலும் தவறாகும்.வரலாறு எழுதுபவர்கள் எல்லாம் சமய வாதிகளாகவே உள்ளார்கள்,சமய மதங்களில் பற்று உள்ளவர்கள் சமய மதம் கண் கொண்டு திருஅருட்பாவை பார்த்து எழுதுகிறார்கள்.அவர்களுக்கு உண்மை விளங்காது.அதனால் முன்னுக்குப் பின் முரணாகவே எழுதுகிறார்கள் .

சாதி,சமயம் ,மதம் இனம் மொழி நாடு முதலிய எதிலும் பற்று இல்லாதவர்களுக்கு மட்டும்தான் திருஅருட்பாவின் கருத்துக்கள் உண்மையாக விளங்கும்.அதே நேரத்தில் ஜீவ காருண்யமும்,உயிர் இரக்கமும்,பொது நோக்கமும் கொண்டு,உலகப் பற்று இல்லாமல்,உண்மையைத் தேடும் ஆர்வம் இருந்து  திருஅருட்பாவை படித்தால்தான் உண்மைகள் தானே விளங்கும்.

அதேபோல் இராமலிங்கப் பெருமான் உலகியலில் எந்தப் பற்றும் இல்லாமல் இறைவனுடைய பற்றை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டார் என்பது அவர் வாழ்ந்த வாழ்க்கை நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது. ..

சென்னை கந்தகோட்ட வழிபாடு!

கல்வி கற்க பள்ளிக்கு செல்லாத இராமலிங்கம் வீட்டிலும் தங்காமல் பள்ளிக்கும் செல்லாமல் நாள்தோறும் சென்னையில் உள்ள கந்த கோட்ட முருகப் பெருமானைப் பாடி வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். கந்தசாமிக் கோயில் என்று வழங்கப் பெற்ற அதனைக் கந்தக் கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் இராமலிங்கப் பெருமானாரே.

மேலும் அனைத்து தெய்வங்களைப் பற்றியும்,போற்றிப் வழிப்பட்டு பாடல்கள் இயற்றி உள்ளார்.
அடுத்து அந்த தெய்வங்கள் எத்தனமையானது,அவைகளின் சக்தி ஆற்றல் எந்த அளவிற்கு உள்ளது.அந்த தெய்வங்கள் எங்கு இருந்து தங்களுக்கு,ஆற்றலையும் சக்தியும் பெறுகின்றன,அவைகளுக்கு சக்தியும் ஆற்றலையும் கொடுக்கும் மாபெரும் சத்தியும் ஆற்றலும் உள்ள தெய்வம் எங்கே உள்ளது ?,அதன் தன்மை என்ன ? உண்மை என்ன ? உருவம் என்ன ? எப்படி செயல்படுகிறது ?என்பதை தான் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் வெளிப்படையாக காட்டியும் சொல்லியும் உள்ளார் ...

ஆடல செய்யும் பருவத்தே பாடல் செய்யத் தொடங்குதல்              

அனைத்தும் இறைவனிடமே கேட்டுப் பெற்றதாக அவரே கூறும் பாடல்கள் !
ஒரு கட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.
பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம்,அண்ணனுக்குத் தெரியாமல் வீட்டின் பின் புற வழியாக வந்து அண்ணியின் உபசரிப்பால் உணவு அருந்திவிட்டு செல்வது வழக்கமாக கொண்டார்.,ஆனாலும் அண்ணனுக்குத் தெரிந்தும், தெரியாதது போல் இருப்பார்.

உணவு !

இராமலிங்கம் உணவைப்பற்றி எப்போதும் நினைத்ததில்லை ,பசி எனபது என்னவென்று தெரியாமல் இறைவன் மீது பற்றுக் கொண்டு தோத்திரம் செய்வதும் ,பாடல் இயற்றுவதுமே அவர் பெரும்பணியாகக் கொண்டார் .வீட்டில் உணவு இல்லாவிட்டாலும்,அவர் பசியை அறிந்து இறைவனே உணவு வழங்கி பசியைப் போக்கியுள்ளார் .

நான் பசித்த போதெல்லாம் தான் பசித்த தாகி
நல்லுணவு கொடுத்து என்னைச் செல்வமுற வளர்த்தே
ஊன் பசித்த விளைப்பொன்றும் தோற்றாதே வகையே
ஒள்ளிய தெள்ளமுதம் எனக்கு இங்கு வந்தளித்த வொளியே
வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
வாழ்வெனக்கே யாகியுற வரமளித்த பதியே
தேன் பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
திருநடஞ் செய் யரசே என் சிறு மொழி ஏற்று அருளே !

என பல பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் .இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே இராமலிங்கம் ,அவர்ப் பசியைப் போக்குவது இறைவன் கடமை அல்லவா ! ஆதலால் இறைவனே எக்காலத்தும் அவர் பசியைப் போக்கியுள்ளார் இருந்தாலும் தன்னுடைய அண்ணியார் அன்பில் கட்டுப்பட்டு உணவிற்கு வீட்டிற்கு வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார்,

அவருடைய் தந்தையார் திதி வந்தது !

தந்தையார் திதி வந்ததும் அவருடைய அண்ணார் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து ஏற்பாடு செய்து வழிப்பட்டு அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார் .அந்த நேரத்தில் தம்பி இராமலிங்கம் வீட்டில் இல்லை .அதை நினைத்து அண்ணியார் மிகவும் வேதனைப்பட்டார் ,அன்று இரவு இராமலிங்கம் எப்போதும் போல் மாலை இரவு நேரத்தில் வந்தார்.அண்ணியார் அழுது கொண்டே அவருக்கு உணவு படைத்தார்,அதைக்கண்ட இராமலிங்கம் ஏன் அண்ணி அழுகிறீர்கள் என்று கேட்க,அனைவரும் வந்து கலந்து கொண்டு சூடாக உணவு உண்டுவிட்டு சென்றார்கள் .நீ ஆறிய உணவை யாருக்கும் தெரியாமல் வந்து உண்கிராயே ! அதை நினைத்து வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது .

நீ இனிமேல் வெளியில் எங்கும் செல்லாமல் ,உன் அண்ணன் சொலபடிக் கேட்டு வீட்டிலே தங்கி இருப்பா என்று அன்பு கட்டளை இட்டார்..அண்ணியின் அன்புக்கு கட்டுப்பட்டு சரி அண்ணி வீட்டிலே தங்குகிறேன் ஆனால் ஒரு விண்ணப்பம் எனக்குத் தனியாக ஒரு அறையை கொடுங்கள் அங்கு நான் தனிமையில் தங்கிக் கொள்கிறேன் என்றார்...உன் விருப்பபடியே உங்கள் அண்ணாரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்றார்.  .
.
வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.!   
ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சி யளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

எல்லோருக்கும் காட்சித் தருவதாக கூறுகின்றார்களே எனக்கு ஏன் காட்சி தரவில்லை என்று கண்ணாடி முன் அமர்ந்து பாடிய பாடல் .

பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்
கண் ஏறுபடும் என்றோ கனவிலேனும்
காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண் ஏறும் அரிமுதலோர்க்கு அறிய ஞான
விளக்கே என்கண்ணே மெய் வீட்டின் வித்தே
தண் ஏறு பொழிவில் தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே !

என்று தன்னுடைய எண்ணத்தையும் விருப்பத்தையும்,கண்ணாடி முன் அமர்ந்து பார்த்து உன்னுடைய உண்மை நிலையைக் காட்டவேண்டும் முறையிடுகிறார் .அதற்கு இறைவன் தனக்கு எப்படி காட்சிக் கொடுத்தார் என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்கிறார்.

சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந்
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்,நற் கோழிக் கோடியும் அருட்
கார் கொண்ட வண்மைச் தணிகா சலமும் என் கண்ணுற்றதே !

எனற பாடல் வாயிலாக இறைவன் எப்படிக் காட்சிக் கொடுத்தார் என்பதை வெளிப்படுத்துகின்றார்.

இவற்றைப் படிக்கும் சமயவாதிகள் சன்மார்க்கிகள் மற்றும் பலர் தணிகை முருகன் கண்ணாடியில் இராமலிங்கத்திற்கு காட்சி கொடுத்தார் என்று நினைத்துக் கொண்டும் உண்மை என்றும் பேசிவருகிறார்கள் அவை உண்மை அல்ல ! என்பதை பின்னாளில் முருகன் என்பது யார் ?அதற்கு என்ன பொருள் என்பதை அவரே தெரியப் படுத்துகின்றார் அதை ஊன்றி படித்துப்  பார்த்தால் உண்மை விளங்கும் .

சொற்பொழிவு !

சென்னையில் மிகவும் பிரபலமானவர் சோமுசெட்டியார்  என்பவராகும் ,தங்கம் வைரம் வியாபாரம் செய்யும் தொழில் உடையவர்,அவர் ஒவ்வொரு வருடமும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வருடம் இராமலிங்கம் அண்ணார் சபாபதியை புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.சபாபதி சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்     
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு,அன்று உடல்நலம் குன்றியதால் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்ப் பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடி யிருந்தனர். அண்ணன் சொன்ன படியே,அண்ணாருடைய நிலைமையை சோமு ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தார்,வேண்டா வெறுப்பாக சம்மதித்து ஒப்புக் கொண்டார்....சபாபதி அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர்,கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது .

கன்னி சொற்பொழிவு !

இராமலிங்கம் விழா மேடைக்கு வந்தார்.எல்லோரும் அதிசியமும் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .

இராமலிங்கம் சேக்கிழார் பாடிய ''உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன்,நிலவுளாவிய நீர் மலிமேனியன் ,அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் .அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் '' என்ற பாடலை மனமுருகப் பாடி அதற்கு விளக்கம் சொன்னார் .அவற்றைக் கேட்ட மக்கள் உணர்வின்றி மெய்சிலிர்த்துப் போனார்கள் .அதுதான் இராமலிங்கத்தின் கன்னி சொற்பொழிவாகும்.அதன்பின் அவரிடம்,--சோமு ஐயா அவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும்,--மறுநாளும் நீங்களே வந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்றும்,மேலும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் வெகுநேரம் வற்புறுத்தினர். ராமலிங்கமும் அதற்கு அண்ணாரைக் கேட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

மறுநாள் காலையில் சோமு ஐயா அவர்கள் ,தன்னுடைய சவாரி வண்டியில் சபாபதி வீட்டிற்குச் சென்றார்.சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை,நாம் சொற்பொழிவுக்கு போகாததால் வருத்தத்துடன் வந்து இருக்கிறார் என்று நினைத்து,ஐயா இன்று நான் நிச்சயம் வந்து விடுகிறேன் எனக்கு உடல்நிலைத் தேறிவிட்டது என்று சோமு அய்யாவிடம் சொன்னார் .சபாபதி நீங்கள் ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் ,உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எதைப்பற்றியும் மனம் வருத்தம் வேண்டாம் .

நான் இன்று வந்ததின் நோக்கம் ,இன்றும் உன்னுடைய தம்பி இராமலிங்கத்தை சொற்பொழிவு செய்ய அனுப்பவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் .சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை ....ஐயா என்ன சொல்றீங்க எனக்கு உடல் நிலை குணமாகி விட்டது நான் வந்து விடுகிறேன் வருத்தப் படாதீர்கள் என்று தணிந்த குரலில் பதில் உரைத்தார்..அதற்கு சோமு ஐயா அவர்கள்,நான் சொல்லுவதை கேளுங்கள்.உங்கள் தம்பி இராமலிங்கம் நேற்று ஆற்றிய சொற்பொழிவு ஜனங்களை மிகவும் கவர்ந்து விட்டது .ஜனங்கள் அவரையே இன்றும் அழைத்து வாருங்கள் என்று விரும்புகிறார்கள் ,அதற்காகத்தான் சொல்லிவிட்டு போகலாம் என்று நானே வந்தேன் என்றார்.அதற்கு சபாபதி பதில் சொல்ல முடியாமல் சரிங்க ஐயா அப்படியே அனுப்பி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்தார் .

தன்னுடைய மனைவி பாப்பாத்தியை அழைத்து ,இது என்ன அதிசயம என்று ஒருவருக்கொருவர் பேசி அதிசயித்துப் போனார்கள் இராமலிங்கமா! என் தம்பி இராமலிங்கமா! --எனக்கு ஒன்றும் புரியவில்லை உனக்கு ஏதாவது புரிகிறதா தெரிகிறதா என்று தன மனைவியிடம் கேட்டார்.எனக்கு இராமலிங்கத்தைப் பற்றித் தெரியும் ஆனால் இப்படி இந்த அளவிற்கு பெரியதாக ஒன்றும் தெரியாதுங்க என்று கண்களில் நீர் பெருக உணர்ச்சி வசப்பட்டவராக பதில் அளித்தார் .

மறுநாள் சொற்பொழிவு நிகழ்ச்சி ! 

முதல் நாள் இராமலிங்கத்தின் சொற்பொழிவு கேட்ட ஜனங்கள் வாயிலாக சென்னை நகரம் முழுவதும் அதன் செய்தி பரவிவிட்டது .எட்டு வயது சிறுவன்,சோமு ஐயா வீட்டின் நிகழ்ச்சியில்  அருமையான சொற்பொழிவு செய்கிறானாம் என்று அறிந்து மக்கள் கூட்டம் மறுநாள் அங்கு அமர்வதற்கு இடம் இல்லாமல் நிரம்பி விட்டது.

சபாபதியும் தன்மனைவி பாப்பாத்தியும் என்னதான் இராமலிங்கம் செய்கிறான் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு தங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று துணியால் தங்களை மறைத்துக் கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சென்றார்கள்.அங்கு மக்கள் கூட்ட நெரிசலில் ஒரு ஓரமாக நின்று கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இராமலிங்கம் மேடைக்கு வந்தார் அமர்ந்தார் .மக்கள் அனைவரும் ஆவலோடு அமைதியாக சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.சபாபதியும் பாப்பாத்தியும் ஊன்றி கவனித்துக் கொண்டு இருந்தார்கள்.கடல் அலைகள் போல் தமிழ் வார்த்தைகள் இலக்கணம் இலக்கியம்,சொற்பொருள் யாவும் ஒருங்கே புயல் சீற்றம் போல் கொட்டிக் கொண்டே இருந்ததன் .அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ! உலக ரகசியங்களையும்,உயிர்களின் படைப்புகளையும்,கடவுளின் உண்மைகளையும்,மனித வாழ்க்கையின் பெருமைகளையும் மனிதன் கடவுளை அறிந்து அருளைப் பெற்று கடவுளுடன் எப்படி இணைய முடியும் என்பதையும் தமிழும்,தமிழின் சிறப்பும் பற்றியும,கேட்போர் மயங்கும் அளவிற்கு தமிழ் எழுத்துகளால் பிணைந்து வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தார்.

நேரம் அதிகமாகி விட்டதால் அவரே சொற்பொழிவை நிறுத்திக் கொண்டார்.உலக வரலாற்றில் இதுபோன்ற சொற்பொழிவை கேட்டதில்லை என்று மக்கள் அனைவரும் அக மகிழ்ச்சியுடன் கண்டு கேட்டு உணர்ந்து சென்றவண்ணம் இருந்தார்கள்.சோமு செட்டியார் அவர்களுக்கு மகிழ்ச்சி அளவில் அடங்காமல் மேடைக்கு வந்து இராமலிங்கத்தை கட்டித் தழுவி,உள்ளம் பூரித்து முத்தமிட்டு வாரி அனைத்துக் கொண்டார் .

இதை எல்லாம பார்த்துக் கொண்டு இருந்த சபாபதியும்,பாப்பாத்தியும்.இவன் இராமலிங்கம் இல்லை,இவனே கடவுள் ,கடவுளே வந்து சொற்பொழிவு நிகழ்த்தியது என்று நினைந்து தங்களையே தங்களால் நம்ப முடியவில்லை என்பதை உணர்ந்து கண்ணில் நீர் பெருக யாருக்கும் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்.         
அண்ணனும் அண்ணியும் இராமலிங்கத்தை வணங்குதல்.!

சோமு செட்டியார் வீட்டில் நடந்த விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றிவிட்டு வண்டியில் வீடு வந்து சேர்கிறார் இராமலிங்கம்..

இராமலிங்கம் வீட்டிற்குள் வந்ததும் அண்ணனும் அண்ணியாரும் இராமலிங்கம் காலில் விழுந்து வணங்குகிறார்கள்,அண்ணா அண்ணி இது என்ன விபரீதம் ,என்ன கொடுமை,என்காலில் நீங்கள் விழுந்து வணங்குவதா ? என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது,நீங்கள் இருவரும் என்னில் உயர்ந்தவர்கள்,எனக்கு முதியவர்கள் நீங்கள் என்னுடைய காலில் விழுந்து வணங்குவது ஏற்றுக் கொள்ள முடியாத பாவச்செயல்களாகும்,கடவுள் என்னை மன்னிக்க மாட்டார் .தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்,இப்படி செய்தால் இன்றே நான் வீட்டைவிட்டு சென்று விடுவேன்.என்ன மன்னித்து விடுங்கள் என்று இருவரையும் கைக்கூப்பி வணங்கி அவர்கள் இருவரின் கால்களில்  விழுந்து வணங்குகிறார்.

இராமலிங்கம் நீ என்னுடைய தம்பி என்று நினைத்து பள்ளிக்கு செல்லவில்லையே என்று உன்னை இந்த கைகள் அடித்து இருக்கின்றன,இந்த வாய் உனக்கு சோறு போட வேண்டாம் என்று சொல்லி உள்ளது.உன்னை திட்டி உள்ளது,என்னை மன்னித்துவிடு.....நீ என்தம்பி இல்லை !...நீ கடவுளின் குழந்தை என்று அறியாமல் உனக்கு பலவகையில் தண்டனைக் கொடுதது உள்ளேன்.இந்த பாவியை கடவுள் மன்னிக்க மாட்டார் என்று புலம்பி அழுது கதறுகின்றார் .அதைக் கண்ட அண்ணியார் இராமலிங்கத்தை கட்டித் தழுவி உச்சிமோந்து எனக்குத் தெரியும் நீ யார் என்று ,உன்னுடைய அறிவும் ஆற்றலும் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து பார்த்து பரவசமாகி உள்ளேன்...நீ இனிமேல் எங்கும் செல்லவேண்டாம் எங்கள் உடனே இருந்துவிடு, உனக்கு எந்த தொந்தரவும் செய்யமாட்டோம் .நீ எங்களுடன் இருந்தால் அதுவே போதும் இந்த பிறவியில் நீ எங்களுடன் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றார்.

அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் இப்படி செய்தால் நான் இவ்விடம் இருக்கமாட்டேன்,தயவு செய்து இப்படி எல்லாம் சொல்லி என்னை வேறு படுத்தி விடாதீர்கள்.நீங்கள் இருவரும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை பாதுகாத்து வருகிறீர்கள் .உங்களை விட இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள் ,நீங்கள் இருவரும் எனக்கு கண்கண்ட தெய்வங்கள் .உங்கள் அன்பில் அரவணைப்பில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இனிமேல் என்னை உயர்த்தி உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.இதுவே கடைசியும் முதலுமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விடுகின்றார்.இராமலிங்கம்.

அன்றிலிருந்து இராமலிங்கம் எது செய்தாலும் அண்ணனும் அண்ணியும் தெய்வம் செய்வதாகவே நினைத்து மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து பெருமை கொண்டனர் .

திரு ஒற்றியூர் கோவில் !

ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்து வந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே
சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டார்.

வழிபடும் காலங்களில் கருத்தாழமுள்ள பக்திப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் பாடியும் எழுதியும் வைத்துள்ளார் .கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்து தெய்வங்கள் பற்றியும் பாமாலை இயற்றி உள்ளார்,அவை அனைத்தும் மக்களுக்காக பாடியதாகும் .தான் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களாக இருந்தாலும்,உண்மையான தெய்வத்தை தேடிக்கொண்டே இருந்தேன்,இந்த சிலைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் ..மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த பூத உடம்பில் வாழ்ந்ததால் தத்துவ உருவங்களைப் பற்றி பாடல்கள் பாட நேர்ந்தது .ஆன்மாவின் விழிப்பால் உண்மையான தெய்வத்தை தேடிக் கொண்டு உள்ளேன்.உலகில் உள்ள அனைத்தையும் உன்னுடைய சாயையாகத்தான் பார்த்தேன் பார்க்கிறேன் .என்பதை பதிவு செய்துள்ள் பாடில் இதோ ;--

மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன்தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே யல்லாற்
தலைவா வேறு எண்ணிய துண்டோ
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச் சிறிதும் இங்கு காற்றேன்
நாயகா வெனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவது உன்கடனே !

மேலும் பல வடிவங்கள் வண்ணங்கள் உடைய கடவுள்களின் உருவங்கள்ப் பற்றிப் பதிவு செய்துள்ள பாடலை பதிவு செய்துள்ளார் !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை யொன்று றென்றே
எண்ணிய தல்லாற் சச்சிதா னந்தத் திறையும்
வேறு எண்ணியது உண்டோ
அண்ணனின் பாதம் அறிய நான் அறியேன்
அஞர் இனிச் சிறிதும் இங்காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணை என்தன்னைத்
தெளிவித்துக் காப்பது உன்கடனே !

என்ற பாடல்கள் வாயிலாக இறைவனுடைய  உண்மையைத் தேடிக் கொண்டே உள்ளார் வள்ளலார் .எல்லாவற்றுக்கும் காரண காரிய மாக ஒன்று இருக்க வேண்டும் ,அதை எனக்கு தெரிய தெளிவுப் படுத்துவது ,மெய்ப்பொருளான உன்னுடைய கடமையாகும்  கடனாகும் என்பதை ஆணை {சத்தியம் }வைத்து கேட்கும் ,அவருடைய தேடுதலை அறிய முடிகிறது.சிறுவதில் இருந்தே ஆன்மா விளக்கம் அடைய வேண்டும் ,ஆன்மாவின் உண்மையை அறிய வேண்டும். ஆன்மாவின் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்னும்,''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' பேராசைப் பற்றியே தேடிக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .

உலகில் உள்ள அருளாளர்கள் யாரையும் வள்ளலார் பின் பற்றவில்லை ,வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் ''ஒருவர் அல்லர்''எனபதை ,அவர் பதிவு செய்துள்ள பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே ! இறைவனே அவர் ஆனாமாவின் உள் ஒளியில் இருந்து இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த
ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இது தருமந்தானோ
மாழைப் மணிப் பொது நடஞ் செய் வள்ளால் யான் உனக்கு
மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ
கோழை உலக உயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே !

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப் படுத்தி உள்ளார்.நான் மற்றவர்கள் போல் வந்தவன் அல்ல மற்ற அருளாளர்கள் போல் வந்தவனா நான்,நான் உங்கள் மகன் அல்லவா இந்த ஏழைபடும் பாடு உன் திரு உள்ளத்துக்கு சம்மதமோ ,வகை அறியாமல் கேட்கின்றேன். நீ அனுப்பியவன் அல்லவா ? நான் எதற்க்காக வந்தவன் என்று உமக்குத் தெரியாதா ?தருமத்திற்கு மாறாக நீங்கள் செய்வது சரியாகுமா ?நான் உமக்கு மகன் அல்லவா ?நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா உலக உயிர்களை காப்பாற்ற நீ அனுப்பி நான் வந்தவன் ஆச்சே .இன்னும் ஏன் மற்றவர்களுக்கு செய்வதுபோல் எனக்கு அருளை வழங்க காலம் தாழ்த்துகின்றாய் .உலக உயிர்களின் துயரத்தை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் .இப்பொழுதே உங்கள் அருள் ஒளியை கொடுத்து மக்கள் குறைகளை நீக்க அருள் செய்வாய் என்று இறைவனிடம் கேட்கிறார் வள்ளல்பெருமான் .

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ? வாழையடி வாழை என வந்த திருக் கூட்டத்தில் ஒருவன் அல்ல .இறைவனால் நேரடியாக அனுப்பி வைக்கப் பட்டவன் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார்.            
.
திருமணம் !
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஏன் திருமணம் செய்து கொண்டார் ? தன்னுடைய தாய் உலக வழக்கப்படி தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் தன்னுடைய கடமை தீர்ந்து விடும் எண்ணத்தில் செயல் படுகிறார் .உலக வாழ்க்கையில் விருப்பம் இல்லாத இராமலிங்கம் திருமணம் வேண்டாம் என்கிறார்.அனைவருடைய வற்புறுத்துதலின் பேரில் ஒப்புக் கொள்கிறார் எனபதைத்தான் நாம் படித்துள்ளோம் .

தன்னுடைய அக்காள் மகள் தனக்கோட்டி, "தன்னுடைய தாய் மாமன் வள்ளலாரைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார் வள்ளலார்.!தனக்கோட்டியின் குணம் இராமலிங்கத்திற்கு தெரியும் ! இராமலிங்கத்தின் குணம் தனக்கோட்டிக்குத் தெரியும் .ஆதலால் இருவரும் சமத்திக்கின்றனர்,உலக வழக்கபடி  திருமணம் நடைபெறுகிறது .

முதல் இரவில் என்ன நடந்தது ?

இருவரும் உள்ளே சென்று அமைதியுடன் உட்கார்ந்து இருக்கிறார்கள் --பருவத்தின் தலைவாசலில் கால் வைத்திருக்கும் கன்னிப் பெண் தனக்கோடி எத்தனை ஆயிரம் ஆசைகளை செஞ்சிலே தேக்கிக் வைத்துக் கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பாள் என நினைக்கத் தோன்றும் .அவள் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள் .

இராமலிங்கம் பேச தொடங்குகிறார் !''தனக்கோடி'' யைப் பார்த்து .திருமணம் ஆன பெண்ணும் ,ஆணும் --உள்ளம் கலந்து ,உயிர்கலந்து ,பின் உடல்கலந்து மகிழ வேண்டும் என்பதற்கே இந்த முதல் எனற ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஆனால் நமக்காக உருவாக்கி உள்ள இந்த ''முதல் இரவு ''நீயும் நானும் தனிமையில் சந்தித்துப் பேசும் ''கடைசி இரவு ''என்பதை நீ அறிவாயா ?என்று கேட்கிறார் .

{அவள் அலறுவாள் !அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிப்பாள் !என்று எதிர்ப்பர்ப்போம் !} அவை எதுவும் நடைபெற வில்லை !

இராமலிங்கம் அறிவாயா ?என்று கேட்ட கேளிவிக்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் தனக்கோடி,

மேலும் இராமலிங்கம் பேச்சைத் தொடங்குகிறார் ,--''தனக்கோடி ''நான் உனக்குத் தாலிக் கட்டியது கடவுளின் கட்டளை !காலத்தின் கட்டாயம் ! திருமணம் முடிந்தாலும் உன்னை மனைவியாகப் பார்க்க முடியவில்லை.!நான் வணங்கும் தெய்வமாக பார்க்கிறேன் ,என்னுடைய ஆன்மாவும் உன்னுடைய ஆன்மாவும் ஒரே தன்மை உள்ளதாக பார்க்கிறேன் ,நீ என்ன நினைக்கிறார் என்று கேட்கிறார் .

தனக்கோடி வாய் விட்டு சிரிக்கிறாள் !மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் ! மேலும் பேசத் தொடங்குகிறார் ."'

''நீங்கள் ஆசைகளை வென்றவர் !....நான் ....ஆசைகளைக் கொன்றவள் !...என ஆசைகள் செத்து விட்டன ..!  உங்களை நான் கடவுளாகக் கருதினேன் !இது யாருக்கும் தெரியாது ! எனக்கு மட்டும்தான் தெரியும் ! எப்படியும் உங்களை கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவிடமும் .பாட்டியிடமும் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன் ! அதன்படி நம்முடைய திருமணம் நடந்தது !.

இராமலிங்கம் பிரமை பிடித்தவராக, தனக்கோடி சொல்வதை மேலும் கேட்டுக் கொண்டு உள்ளார் !

''உங்களை முழுவதுமாக உரிமை கொண்டாட வேண்டும் எனற பேராசைதான் உங்கள் மேல் காதலாக மலர்ந்தது.இப்போதுதான் என உள்ளம் குளிர்ந்த்து.உங்களை என்னைத் தவிர வேறு யாரும் தொட்டுவிடக் கூடாது ,

''தனக்கோடி நீ...நீயா ...பேசுகிறாய் "'

''ஆமாம் தனக்கோடி தான் பேசுகிறேன்....முன்னைவிட இப்போது எனக்கு உயர்வாகத்  தோன்றுகிறீர்கள் !..எல்லா ஆண்கள் போல் இந்த முதல் இரவில் நீங்கள் என்னைத் தொட்டுத் ...தழுவி ...உறவு கொண்டிருந்தால் நீங்கள் சராசரி மனிதனாகப் போயிருப்பீர்கள் ,உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் .

''சிற்றின்ப ஆசையை வேறு அறுத்து ...ஆனடவனின் பேரின்ப வீடு நோக்கி பெரும் பயணம் போகும் உங்களுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன்!என்னை ஆட்கொண்ட தெய்வம் நீங்கள் ..இனி உங்கள் வழியே என்வழி !என்னை வாழ்த்தி வரம் அருளுங்கள் ! என்று இராமலிங்கம் காலில் விழுந்து வழிபடுகிறாள் தனக்கோடி அம்மையார் !

இராமலிங்கம் கண்களுக்கு தனக்கோடி வடியுடை நாயகியாக,சரஸ்வதியாக,பார்வதியாக  மகாலஷ்மியாக ,அருள் தெய்வமாக காட்சித் தருகிறார் .''தாயே'' என்று கண்ணீரோடு கரம் குவிக்கிறார் .

தன்னை இராமலிங்கம் வணங்குவதை விரும்பாத தனக்கோடி ....

"'சுவாமீ !'' என்று இராமலிங்கம் கூம்பிய கரங்களைத் தொடுகிறார் !

உடனே..... அவர் ஸ்பரிசம் பட்டவுடனே அருள் வந்தவள் போல் ஆகிறாள் .இருவருடைய கண்களிலும் ஒளி பிரகாசம் தோன்றுகிறது .

இராமலிங்கத்தின் உடலில் ஏறப்பட்ட ஒளி தனக்கோடியின் கைவழியாக அவள் மேனியிலும் பரவுகிறது..இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர் .இதுவே முதல் இரவில் நடந்த செயலாகும்.{இதன் விபரங்கள் முழுவதும் நான் அறிந்த வள்ளலார் எனற தலைப்பில் எழுதி வரும் வலைபூவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் }

தனக்கோடி அம்மையார், இராமலிங்கத்தின் அருள் பயணத்திற்கு எந்த தடையும் வராமல்,மன மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார் .தனக்கோடி இராமலிங்கத்தின் கரம் பட்டவுடனே பிறவிப் பயனை அடைந்து விடுகிறார் .[தனக்கோடி புண்ணியம் செய்த ஆன்மாவாகும் }

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;;--

முனித்த வெவ் வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி யொருசார் மடந்தையர் தமக்குள்
ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தன நினைக்குந் தோறும் உள்ளுடைந்தேன்
பகர்வதென் னெந்தை நீ யறிவாய் !

என்பதன் மூலம் விளக்கம் அளிக்கிறார் {வள்ளலார் } ஒரு பெண்ணைத் தொட்டுள்ளேன் கலப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
         
ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னை யிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.
அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப் பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.
ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண் கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக் கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பி வைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப் படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார்.
அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும் போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!
கருங்குழியில் தங்கி யிருந்தபோது 1865 ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:
கடவுள் ஒருவரே.
கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.
மாமிச உணவை உண்ணக்கூடாது.
ஜாதி, மத வேறுபாடு கூடாது.
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேம்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!

வேதம் ஆகமம் ,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம் !அதில் உண்மையை சொல்ல வில்லை ! 
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

வள்ளலார் பிறந்த இடம்

கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867--ஆம் ஆண்டு, மே மாதம் 23{வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி }ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே Ôசமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைÕ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம் நாடு,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.
ராமலிங்க அடிகள் Ôவள்ளலார்Õ என அழைக்கப் படலானார். வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ண வாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் (கொஞ்சம் நீளமான பெயர்தான்!) என்பவருக்கு இரு மனைவியர்.

வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வீடு...

ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.
வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு Ôசித்தி வளாகத் திருமாளிகைÕ என்றுபெயர் சூட்டினார்.

தண்ணீரால் விளக்கேற்றிய இடம் இதுதான் (வீட்டின் உள்ளே)

அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.
இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’ என்று பெயர் சூட்டினார்.

கல்பட்டு ஐயா திருச்சந்நிதி
25.1.1872, தை மாதம் 13|ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே ‘பேருபதேசம்’ என்று சொல்லப்படுகிறது.
கொடியேற்றியதற்கு அடுத்த கார்த்திகை மாதம், திருவண்ணாமலை தீபத் திருநாளில், தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கைச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார்.
மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, Ôஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்Õ என்று செய்தி அளித்தார்.
1874-ஆம் வருடம் தை மாதம் 19|ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான தொழுவூர் வேலாயுதமும்,மற்ற தொண்டகர்களும் மூடப்பட்ட அறையின் வெளிப்புற கதவைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
சத்திய ஞானசபை
உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார்.
மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில் தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.
பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன.

ஜோதி தரிசனம் ஆனதும் பக்தர்களுக்குத் கற்கண்டும் தரப்படுகின்றன.
சித்திவளாகம்
வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம். வள்ளலார் ஏற்றிவைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் சித்தபெற்ற அறையின் கதவு  பூட்டப்பட்டு இருக்கும் கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.
தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடும் நடைபெறு கின்றன.
தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.
ஜோதி தரிசனம்

ஒவ்வொரு தைப் பூசம் தோறும திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப் படுகிறது.!
ஜோதி தரிசனத்தை அனைவரும் கண்டு களிகின்றார்கள் . அது முதற்கொண்டு ஒவ்வொரு தைப்பூசத்திலும் முழுமையான தரிசனம் நடக்கிறது.

பௌர்ணமி முழு நிலவும் பூச நட்சத்திரமும் ஒன்றுசேரும் நாள்தான் தைப்பூச நாள். அந்த நாளில், நம் ஆன்ம சக்தியும் ஆழ் மனமும் உயர்நிலையை அடைகின்றன. அருட்பெருஞ்ஜோதி தரிசன அனுபவத்தை அந்த நாளில் பெறுவது உகந்ததாக இருக்கும் என்பதுதான் இந்த நாளை வள்ளலார் தேர்ந்தெடுக்கக் காரணம். தைப்பூச நாளில் காலை 6.30, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00, மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

மாதாந்திர பூச நாளில், இரவு எட்டு மணி முதல் எட்டரை மணிவரை ஆறு திரைகளை விலக்கி, மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் மனிதத் தன்மை என்ற ஒப்பற்ற ஜோதி ஆன்மா என்னும் உள் ஒளிதான் என்பதை உஅணர வேண்டும்.

சித்தி வளாகத்தில் உள்ள அணையா ஜோதி...
பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம், பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது.
இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது, மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். ஜோதி தரிசனம் என்பதும் இது போலத்தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியைத் தரிசிக்க முடியும். கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள்!
மாயா சக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி, சித்சக்தி என ஏழுவிதச் சக்திகளைக் கடந்துவிட்டால், ஜோதி வடிவிலான இறைவனைத் தரிசித்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.
ஞானசபையில் வழிபாடு தொடங்கியபோது, வள்ளலார் தன் கையால் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்தார். அது அணையாத்தீபமாக இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.
அந்தத் தீபம் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொலிப்பதே ஜோதி ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.

எனவே, ஒவ்வொரு தைப்பூசத் திருநாளன்றும் சத்திய ஞானசபையில் இந்த ஏழு திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் நிகழும். இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். இறைதரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குக் கிடைத்து வருகிறது.
ஜீவகாருண்ய ஒழுக்கம்!
வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின் பசியை ஆற்றுவது.

சத்திய தருமச்சாலை & வெளித்தோற்றம்

"ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்" என்றார் அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.
"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:
பசி என்ற ஒன்று இருப்பதேன்?
பசி இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி யில்லாத போது, ஒருவருக் கொருவர் உதவ மாட்டார்கள். அப்படி உதவ வில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

சத்திய ஞான சபை & வெளித்தோற்றம்

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?
பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.!
பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.!
பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.!
பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.!
பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!
பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.!
பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.!
இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.!
பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.!

வள்ளலார் சந்நிதி
இதன் விளைவாக, வயதானவர்கள் பிற தேசங்களில், பிற வீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.
வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.
முனிவர்களையும் யோகிகளையும் சித்தர் களையும் கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.
எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள் கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.
பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?
அறிவு மயங்கும்.
கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.
சித்தம் கலங்கும்.

நம்பிக்கை குலையும்.
கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.
காதில் இரைச்சல் ஏற்படும்.
நாக்கு உலர்ந்து போகும்.
கை, கால் சோர்ந்து துவளும்.
வார்த்தை குழறும்.
வயிறு திகு திகுவென எரியும்.
தாபமும் கோபமும் பெருகும்.
உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.
நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.
தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.
உள்ளம் குளிரும்.
சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.
கடவுள் நம்பிக்கை துளிர்க்கும
தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட் கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?
இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?
இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்ச மென்றே சத்தியமாக அறியவேண்டும்.
ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!
சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.
பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தனக்கு அற்ப ஆயுள் என்று ஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்க வல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

வள்ளலார் சித்தி அடைந்த வளாகம்...

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.
கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.
அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.
வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.
வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!
ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை. செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்தபின், Ôஅரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும்Õ என்று கூறினார்.

மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.
அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர். முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும், அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

உடல் வேறு! உயிர் வேறு ! ஆன்மா வேறு !

வள்ளலார் தருமச் சாலையின் வெளியே உச்சிப் பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.
இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.
ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ் வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.
உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகத்தை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.
பெய்யெனப் பெய்த மழை!
கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.
சாலைக்கு உள்ளே சென்று கதவை தாள் போட்டு தியானத்தில் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார் .
ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.
என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.
அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.
வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!
புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.
வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை
சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காண வருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.
அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.
வள்ளலார் கரம்பட்ட தும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.
வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று...
வள்ளலார் தமது வாழ்வின் நிகழ்வுகள் அத்தனையையும் பாடல் களாகப் பாடி இருக்கிறார்

இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, "வள்ளலார்' என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார். அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு "ஜீவகாருண்ய' உண்மைகளை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார்,

வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்

ஒரு சமயம் இறைவன் தன் துணைவியுடன் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் வள்ளலார் இருக்குமிடத்துக்கு வந்து அருள் புரிந்ததையும், அப்போது தன்னைத் தேடிவந்தவர் யாரோ, எவரோ எனப் புரியாமல் வாசலருகிலேயே கதவின் தாழ்ப்பாளைப் பற்றிக்கொண்டு பயத்துடன் நின்று பார்த்ததையும் வள்ளலார் பாடல் வடிவில் கூறியுள்ளார். அந்தப் பாடல்;
எருதின் உழைத் திருந்தேனுக் கிரங்கி அடிச் சிறியேன் இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடு நின்றேனை வருதி எனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே மணியே என் மருந்தே என்வாழ்வே என்வரமே சுருதிமுடி அடிக்கணிந்த துரையே என் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
இதே போல அவர் இறுதியாக சித்திவளாகத்தில் இருந்த போது இறைவன் அவரை ஆட் கொண்டதையும் பாடலாகப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல்:
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணை மேல் பளிக்கறை யினூடே திருவடி சேர்த்தருள்க எனச் செப்பி வருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந் தெனக்கே நல்ல திருஅருளமுதம் நல்கிய தன்றியும் என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும் நுழைந்தனையே.
ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்!
கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே... அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால், உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?
வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும் சடங்களே.
அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்று வதற்குத் தகுதியுள்ள சடங்களான வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்கு ளையும் தழை களையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.
வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.
மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணம் இல்லாததாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல; துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.
சித்த மருத்துவர் வள்ளலார்!
பல மூலிகைகளின் குணங்களை அட்டவணையாக எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகளின் துணைகொண்டு இறந்தவர்களை மறுபடி உயிர்ப்பிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார். அங்கங்கள் துண்டுகளாக வெட்டுப் பட்டால், அவற்றை மீண்டும் இணைக்க எந்த மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வலுவான, திடமான சரீரத்துக்கு அவர் கூறும் மருத்துவக் குறிப்பு இதோ:
கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.
வள்ளலார் நினைவிடம் மருதூர்...
இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.
வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை
1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.
2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.
3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.
4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.
5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப் படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.
9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரா அன்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.
13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.
14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.
15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். தோத்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவ காரங்களைப் பற்றிப் பேசலாம்.
16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.
17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக் கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | 
20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.
21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்கக்கூடாது.
22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.
25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.
26. புகை, கஞ்சா, கள், சாராயம்,மாமிசம் போன்றவை கூடாது.
27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.
வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை
ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:
"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
பொன்னான மண்!
பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம் முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை அறவே அற்ற வர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும் என்றார் .

  • நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள் முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை உங்கள் உள் மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத் தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும் குறையாது. 
  • அதேபோல் இறைவன் நமக்கு பிடித்த மானவராகவே இருக்கிறார். அவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம் இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவனைக் கடந்து ஆன்மாவில்,மனதை வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால் தான் இது சாத்தியமாகும்.ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதம் சுரந்து ,அதை அனுபவித்தால் தான் இறைவனுடைய சுவை என்ன என்பதை அறிய முடியும்.   எனவே, இறைவனை அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும் ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.
  • இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், நடு உலகம்,என அளவிடமுடியாத அண்டங்கள் உள்ள அனைத்து உலகங்களிலும் நிறைந்திருந்து,அருள் விளக்கமாக அவர் அசைந்தாடுகின்ற,அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற ''அருட்பெரும்ஜோதி கடவுள்'' ஒருவரே யாகும்.என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார் . 
வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்!

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தமக்கு அறிவித்த வண்ணம் ,....உத்தரஞான் சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளால் ஆக்கச் சிறப்புப் பெயர்களும் ,பார்வதி புரமென்றும்,''வடலூரென்றும்'' உலகியலாற் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள .ஓர் சுத்த சிவானுபவ ஞான வெளியில் ''சத்திய ஞானசபை ''..அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி நிறுவுகிறார் .

இது ஒரு கோயில் அல்ல !இறைவன் வந்து அமர்ந்து உலக மக்களுக்கு அருளை வழங்கும் ,''ஞான சிங்காதன பீடமாகும் '',இங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளியாக வீற்று யிருக்கின்றார் என்பதை விளக்கும்,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் சிற்சபையாகும்,ஆதாவது ஆன்மா இருக்கும் இடமாகும்.--நமது தலைபாகமாகும் .என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார் .ஆன்மாவை அறிந்தவர்கள் இறைவனை அறியலாம் ,இறைவனுடைய அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என்பது வள்ளலார் முக்கிய கொள்கையாகும்,மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார் 

ஆன்மாவும் ஒளியாக உள்ளது ! இறைவனும் ஒளியாக உள்ளார் !ஒளியும் ஒளியும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக ...ஒளிக் கடவுளான உண்மைக் கடவுளை ,உலக மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காக தோற்றுவிக்கப் பட்டதுதான்,''சத்திய ஞானசபை ''யாகும் .

''சத்திய ஞான சபை '' என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் என்று பறை சாற்றுகின்றார் வள்ளலார் .நான் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது வள்ளலாரின் பேராசையாகும்.

பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் 
ஜோதி யளித்து என்னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் 
நீதி நடஞ் செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை 
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !

நான் அடைந்த பேரின்பத்தை இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் ,என்று இறைவனிடம் உலக உயிர்களுக்காக வேண்டுகிறார் .

ஒளியாகிய ஜோதியில் ஐக்கியமாகி இறைவன் இருக்கிறான்.-- இந்த உண்மையை தெரிந்துகொண்டு அந்த ஜோதியையே உண்மைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள். தன்னை ஜோதி வடிவினனாக வழிபடுவதைத்தான் இறைவனும் விரும்புகிறான். — வள்ளலார் ....தைப்பூசம் வள்ளலார் சித்தியடைந்த நாள்
1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக திரு மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.அதுவே சித்தி என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் என்பதாகும்.இவை அனைத்தும் பெற்ற ஒரே ஒரு அருள் ஞானி ,அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

நாமும் அவர் காட்டிய வழியில் சென்று அவரைப்போல் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல் .

20 கருத்துகள்:

29 ஜனவரி, 2013 அன்று PM 7:29 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஒரு பொன்னான மெய்ஞானியைப் பற்றிய தகவல் திரட்டு நன்றி அய்யா உங்களுக்கு.

 
17 பிப்ரவரி, 2013 அன்று AM 7:20 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

பொதுவாக கடவுளால் மனிதர்களுக்குப் பிரச்சனை இல்லை. அவர் இருப்பதாக நம்புவர்களால்தான் பிரச்சனயே. வள்ளலார் இயற்க்கைக்கு மாறாக வாழ்ந்துள்ளது மட்டுமல்ல அவரது வழிமுறைகள் மட்டுமே மிகச் சிறந்தது என்பது இயற்க்கைக்கு எதிரானது, எதார்த்தம் இல்லாதது, மனித வாழ்க்கைக்கு முரண்பாடானது. வள்ளலாராக மாற்றப்பட்ட ராமலிங்கத்தின் தந்தைக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர் இவரது தாய். இவரும் ஐந்தாவதாகப் பிறந்தவர். இயற்க்கைக்கு மீறிய காமத்தில் கட்டுப்பாடோடு இருந்து இருப்பார்களேயானால் இன்றைக்கு வள்ளலார் என்ற பெயரே இருந்து இருக்காது. அனைத்து உயிர்களும் இயற்கையால் நடக்கின்ற இனப்பெருக்க முறையே உடல் உறவு. அதை கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்த மனித இனம் ஒருசில கட்டுப்படுகளுக்காக சில சட்டங்களை வைத்துக்கொண்டது. அதில் ஒன்றுதான் திருமணம் என்பது. கடவுள்களுக்கே திருமணம், குழந்தை என்பதாகக் காட்டப்படுகின்ற நிலையில், உலக இயல்புகளுக்காக ராமலிங்கம் திருமணம் செய்துகொண்டதாக உயர்வாகச் சொல்லப்படுகிறது. அப்படி உலக இயல்புகளுக்காக திருமணம் செய்துகொண்டவர், இயற்கையின் நியதிப்படி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று இருக்கவேண்டும். மாறாக, திருமணம் செய்துகொண்டு அந்தப் பெண்ணிற்கும் இயற்கையில் கிடைத்து இருக்கவேண்டிய இன்பங்களை இல்லாமல் செய்தது மட்டுமல்லாமல், அதைச் சிறப்பு என்று சொல்வது எந்த வகையில் சிறப்பாக இருக்கமுடியும்..! அடுத்து, அவர் சொல்லிச் சென்றதாகச் சொல்லப்படுகின்ற உணவு முறைகள் முற்றிலுமாக இயற்க்கைக்கு முரண்பாடான ஒன்று. அவை அனைத்தும் உழைக்காமல், சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்காக மட்டுமே பொருந்தும். தேவையற்ற உணவுக் கட்டுப்பாடுகளைச் சொல்லி, அது மட்டுமே சிறப்பு என்பதும் ஏற்புடையது அல்ல. சைவமும், அசைவமும் இயற்க்கை உயிர் இனத்திற்க்குக் கொடுத்தது. உணவுச் சுழற்சி, உணவு முறை. இதில் சைவம் மட்டுமே சிறப்பாகச் சொல்வது இயற்க்கை இயல்புக்கு மட்டுமல்ல, கடவுளின் படைப்புக்கே மாறுபட்டது.

 
29 மே, 2013 அன்று AM 7:15 க்கு, Blogger Unknown கூறியது…

நிறம்பிய தகவல்கள்.. நன்றி..ஒரு வேண்டுகோள் இப்பகுதியில் எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன; எனவே, அவற்றைத் திருத்தி விடுங்கள்.

 
23 ஜூலை, 2013 அன்று PM 5:02 க்கு, Blogger sathish கூறியது…

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

 
27 பிப்ரவரி, 2014 அன்று AM 5:47 க்கு, Blogger Unknown கூறியது…

நிறம்பிய தகவல்கள்.. நன்றி..ஒரு வேண்டுகோள் இப்பகுதியில் எழுத்துப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன; எனவே, அவற்றைத் திருத்தி விடுங்கள்

 
14 மார்ச், 2014 அன்று PM 9:41 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

நன்றி வாழ்த்துக்கள்

 
24 நவம்பர், 2016 அன்று AM 6:57 க்கு, Blogger HUMAYUN HAJ SERVICE கூறியது…

.
C... சஹாக்களே.
.
+R.Meenakshi Sundaram​​
அதெல்லாம் ஆரம்பத்தில் தான் தன்னைச் சுற்றிய நடப்புகள்.
பிறகு
சரக்கு தீர்ந்துப் போச்சு.
சிந்தனை?
தெளியத்தெளிய
இப்பிரபஞ்சம்
விரிய விரிய
தெளிவு தெளிய
தெளிய ஆரம்பம்.
கேள்வி கேள்விகளாய்?
கேள்வி
கேள்விகளாக!
தெளிவு தெளிய
தெளிந்த தெளிவை
.
கொளுத்தினான் சுடலையில். காப்பாற்றுபவன் எவனும் இல்லை
"வள்ளலாரை"
எல்லோரும் வேடிக்கைப் பார்த்தனன் கூட்டமாய்
கபோதிகள்
கயமைகள்
அழிந்தார்
"வள்ளலார்"
கருகினார்.
ஆதியிடம்
போனாரே.
இன்று வள்ளலாரை வைத்து வயிறு வளர்க்குது பெருங்கூட்டம்
நெருப்பை சோதின்னு சொல்லுது.
காட்டுவதை தர்ஷணம் என்றும்
பூச நட்சத்திரம் என்று
பூஜை நேரம் மக்களை ஏமாற்றுது வெட்கம் இல்லாமல்.
.
நிச்சயம் விடியும்.
.
Ok by HUMAYUNBATCHA
.




 
25 டிசம்பர், 2016 அன்று PM 3:41 க்கு, Blogger savithrikannan கூறியது…

சிறப்பான கட்டுரை.

 
3 ஜனவரி, 2017 அன்று PM 1:05 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

நன்றி

 
20 பிப்ரவரி, 2017 அன்று AM 9:30 க்கு, Blogger Unknown கூறியது…

அருமையான பதிவு

 
17 ஜூன், 2017 அன்று AM 1:16 க்கு, Blogger கவிதைகள் கூறியது…

வள்ளலாரை நேரில் பார்த்து, அவரோடு பழகி, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஞானம் பிறக்கிறது....

 
16 பிப்ரவரி, 2019 அன்று PM 9:06 க்கு, Blogger Astronavalar கூறியது…

மிக அருமை ஐயா அதுவும் இன்று பூசம் நட்சத்திரம் சனி நாளும் கூடிய இந்த நல்ல நாளில் வள்ளல் பெருமானின் வரலாறு படிக்க வைத்த இறை அருளுக்கும் இவ்வளவு விசயங்களை இறை அருள் சம்மதத்துடன் எழதிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நாவலர்

 
17 மே, 2019 அன்று PM 9:08 க்கு, Blogger Unknown கூறியது…

தழிழன் தான் கடவுள்......

 
7 ஆகஸ்ட், 2019 அன்று PM 8:31 க்கு, Blogger Unknown கூறியது…

அருமை

 
26 ஆகஸ்ட், 2019 அன்று PM 5:05 க்கு, Blogger Information கூறியது…

மிக்க நன்று.

 
11 டிசம்பர், 2019 அன்று PM 5:10 க்கு, Anonymous Thanga jothi gnana sabai கூறியது…

வள்ளல் பெருமான் தானே முன்னின்று கட்டியது சத்திய ஞான சபை, ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறியருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கக் கட்டியதே ஞான சபை.

சத்திய ஞான சபையில் பிற கோவில்களில் உள்ளது போல் தெய்வத் திருவுருவங்கள் கிடையாது. பூசை வழிபாடு கிடையாது.

இறைவனை நாடி தவம் செய்யும் நமக்கு கிட்டும் முதல் பேறு, ஆத்ம ஜோதி தரிசனம் எல்லோரும் அறிய ஏற்படுத்தினார்.

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே - ஞானசபை உள்ளது. தைப்பூசம் அன்று ஞான சபையில் ஒவ்வொன்றாக ஏழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் பெரும் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.



இறைவன் பேரொளி. அவனை காண உன்னிடமுள்ள அஞ்ஞான திரைகளை அகற்று என்பதே! எப்படி? புறத்திலே உள்ளதை புரிந்து கொள்வது?

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - சிற்சபை வலது கண். பொற்சபை இடது கண் இரு கண் மணியிலுள்ள ஒளியை பெருக்கினால் உள்ளே அக்னிகலையை ஞான சபையில் ஆத்ம ஜோதியை மறைத்து கொண்டிருக்கும் நம் கர்ம பந்தத்தால் ஏற்பட்ட திரைகள்
அதாவது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது ஜவ்வு. இந்த ஜவ்வு தான் 7 நிலை திரைகளாகும். நாம் தவம் செய்யச் செய்ய நினைந்து உணர்ந்து நெகிழ கண்ணீர் பெருகும். கண்ணில் கனல் எழும்பும் அக்கனல் ஞானக்கனல் உள்ளிருக்கும்
ஜோதியை மறைத்துக்கொண்டிருக்கும் ஜவ்வை சூடாக்கி உருக்கி விடும். கொஞ்சங் கொஞ்சமாக திரை போன்ற ஜவ்வு உருகி கரைந்து விடும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும். இதை சொல்வதற்குதான் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபை கட்டி அங்கே ஜோதி தரிசனமும் காண வைத்தார்கள். ஜோதி தரிசனம் - ஞான அனுபவ நிலை.

இங்கே கண்ணை மூடி கொண்டிருந்தால் எப்படி ஜோதியை தரிசிக்க முடியும்.? இதற்குத்தான் பெருமான் விழித்திரு என உபதேசம் செய்தார்.

கலையுரைத்த கற்பனையை நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக என வள்ளலார் கூறினார்.

இழிச் செயலையே, கண்மூடித்தனம் என்கிறோம். கண்மூடிதனம் என்பது அறியாமையால் செய்வது. இதுவல்லாமலால் நாம் கண்ணை திறந்து பார்த்தல் தானே எல்லாம் தெரியும்! கண்ணை மூடி கொண்டால் ஒரே இருளாகத்தானே இருக்கும்.

சரியை கிரியை யோகம் அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு செய்வது
சொற்ப பலனே மிஞ்சும். முழுமை கிட்டாது.

ஞானத்தில் கண்ணை திறந்து கொண்டுதான் தவம் செய்ய வேண்டும். கண்ணை மூடினால் இருள் கண்ணை திறந்தால் ஒளி. நாம் ஒளியை பேரொளியை தானே தவம் செய்ய வேண்டும்.

கண்திறந்து காண்பதே உண்மை. கண்ணை மூடிக்காண்பது அனைத்தும் மாயை! கண் திறக்க வேண்டும்! ஞான சாதனைக்கு. கண் இமைகளை திறக்க வேண்டும். என்பது ஒன்று. கண்மணியை மறைத்து கொண்டிருக்கும் திரையை அகற்ற வேண்டும். அடைப்பட்ட வாசல் திறக்க வேண்டும்.என்பதும் ஆகும்.

கண் திறப்பது என்பது கண்மணியில் அடைத்து நிற்கும் வாசல் போன்ற திரைகள் நீங்க வேண்டும் என்பதே. அப்போது தான் ஜோதி தரிசனம் ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும். ஞானம் பெறலாம். தன் புறக்கண் இமைகளை விட்டு அகக்கண் மணித்திரை திறப்பதே ஞானம். திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் நீக்கியே -மணிக்கதவம் திறவாயே என வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

ஒரு ஓவியம் ஒரு சிற்பம் இவை செய்து முடித்த பின் முடிக்குமுன் கடைசியாக செய்வது கண் திறப்பது என்றேயாகும். கண் திறந்தால் பூர்த்தியாயிற்று என்று பொருள்.

அதுபோலவே ஒரு மனிதனுக்கும் அகக்கண் - மணித்திரை திறப்பதே பிறவியின் லட்சியம். பிறப்பில் மிக மிக முக்கியமான நிகழ்வு நாம் மனிதனாக பிறந்த பயன் பெற நம் க திறக்கப்பட வேண்டும். கண் திறந்தால் தான் ஜோதி தரிசனம், இறைவன் அருள் அடியேனுக்கு வள்ளல் பெருமான் அருள், குரு பீடமேறி, நயன தீட்சை மூலம் அகக்கண்களை திறந்து வைக்க அருள் பாலித்திருக்கிறது.

மாதா பிதா பெற்ற மனிதர் குருவை பெற்று தன் அகக்கண்களை திறந்து கொண்டு தவம் செய்து மேன்மையடைய வேண்டும். அதற்குத்தான் வள்ளல் பெருமான் படாத பாடுபட்டார், படுகிறார்.

www.vallalyaar.com

 
3 டிசம்பர், 2021 அன்று PM 3:42 க்கு, Blogger Unknown கூறியது…

உண்மை தெரியாமல் உளறாதீர்கள்

மாமிச உணவை விடாமல் உங்களுக்கு கடவுளை பற்றி நினைக்க தகுதி இல்லை

 
3 டிசம்பர், 2021 அன்று PM 3:44 க்கு, Blogger Unknown கூறியது…

அவர் பெற்ற பேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு தெரியும்

 
3 டிசம்பர், 2021 அன்று PM 3:47 க்கு, Blogger Unknown கூறியது…

உண்மை யை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை இறைவனை பற்றி வெளிப்படையாக கூறியவர் எமது குரு வள்ளல் பெருமான்

 
16 அக்டோபர், 2023 அன்று AM 8:18 க்கு, Blogger Sri Chandra கூறியது…

1.An excellent text on Arut பிரகாச வள்ளலார்(1823-1874=50 years) life &His teachings.
2.Congratulation to the author.This text is giving a very clear picture on the holy saint popularly known as Chidambaram Ramalinga சுவாமிகள்.& his unique life style.
3.சுவாமி practically demonstrated to the world His main teaching on DEATHLESSNESS(Mettukuppam Sittivalagam-30.1.1874) thro disappearence in air(dematerialisation process)It is a mystery in world history.Vallalar himself is living GOD in Jyothi form& deserves Nobel price.
4.What is the time scale of one kandigai?
S.chandrasekaran

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு