சனி, 28 ஜனவரி, 2012

நீண்ட ஆயுளுடன் வாழும் வழி !

நீண்ட ஆயுளுடன் வாழும் வழி !




உலகில் தோன்றிய உயிர் இனங்கள் அனைத்தும் தோன்றி மறைகின்றன ,அவைகளுக்கு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற ஆசைகளோ உணர்வுகளோ கிடையாது

மனிதன் மட்டும் நீண்ட ஆயுள், நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் உணர்வுகளும் இருந்து கொண்டே இருக்கிறது ஆனால் எப்படி வாழ்ந்தால் நீண்ட நாள் வாழலாம் என்பதும் ,மேலும் நோய் இல்லாமல் வாழலாம் என்பதைப் பற்றியும் யாரும் கடைபிடிப்பதாக இல்லை .,கடைபிடிக்கும் வழி முறைகளை யாரும் சொல்லித் தரவும் இல்லை

வள்ளலார் அவர்கள் அதற்கு உண்டான வழிமுறைகளை தெளிவாக சொல்லியுள்ளார் ,நீண்ட நாள் வாழ மட்டும் சொல்லவில்லை மரணத்தையே வெல்ல முடியும் என்பதையும், சொல்லியதோடு அல்லாமல் வாழ்ந்தும் காட்டியுள்ளார் .

நீண்டநாள் வாழ வேண்டுமானால் ஜீவ காருண்யம் வேண்டும் என்கிறார் .அதாவது உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் சுய நலம் இல்லாமல் பொது நலத்துடன் தொண்டு செய்ய வேண்டும்.அப்படி செய்தால் நீண்ட நாள் வாழலாம் என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத உண்மையும் நம்பிக்கையுமாகும் .

இவை சாத்தியமாகுமா என்ற சந்தேகம் வரலாம் !

அமெரிக்காவின் விஸ்கான் நகரில் சுமார் 10317,உயர்க்கல்வி மாணவர்களை கடந்த 1957,ஆம் ஆண்டு முதல் 2008,ஆம் வரை நடை பெற்ற ஆய்வின் தகவல்களை பரிசோதித்தனர் ,இதில் கலந்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் .அவர்களுக்கு கடந்த 2008,ஆம் ஆண்டில் வயது சராசரியாக 69.12.வருடங்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும் .

இதில் தன்னார்வுத் தொண்டுகளில் ஈடுபட்டவர்கள் ,தங்கள் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்தவர்கள் என பிரிக்கப் பட்டு ஆய்வு நடந்தது, அந்த ஆய்வில் மது பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புகை பிடித்தல் ,பொருளாதாரம் தேடுபவர்கள் ,சுயநலம் உள்ளவர்கள் 2008,இல உடல் நலம் பாதிக்கப் பட்டு 75%, இறந்து போய் விட்டனர் .மீதம் உள்ளவர்களில் தன் உழைப்பில் தன் குடுபத்திற்கு மட்டும் வேண்டியதை செய்து கொண்டவர்கள் 20 % உடல் நலம் பாதிக்கப்பட்டு உடல் நலக குறைவுடன் வாழ்ந்து வருகிறார்கள் ,

மீதம் உள்ள 5%,உள்ளவர்கள் சுய நலம் இல்லாமல் தன்னார்வத் தொண்டு செய்தவர்கள் .அவர்கள் எப்படி உள்ளார்கள் தெரியுமா ?உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடன் ,மன மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்கிறார்கள் இன்னும் தொண்டு நிறுவனங்கள் மூலம மக்களுக்கு அதாவது உயிர் இனங்களுக்கு தொண்டு செய்து கொண்டு வருகிறார்கள் .

இதை வள்ளலார் 180,ஆண்டுகளுக்கு முன்னமே சொல்லி உள்ளார்கள் நாம் செவி சாய்க்கவில்லை .அமெரிக்க ஆய்வு சொன்னால் படிக்கிறோம் கேட்கிறோம் நம்புகிறோம் இதுதான் நம்முடைய நிலைப்பாடாகும் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி !

யாரே என்னினும் இரங்கு கின்றார்க்குச
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என உரைத்த மெய் சிவமே !

உயிரெலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விட்டுக எனச செப்பிய சிவமே !

பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருட்பெரும் ஜோதி!

என பலப் பாடல்களில் வள்ளலார் தெளிவு படுத்தி உள்ளார் .இதை உணர்ந்தால் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்

நம் உடம்பில் உள்ள அணுக்கள் {செல்கள் } ஏழு வகைப்படும் அவை ;--வாலணு,திரவ அணு ,குருஅணு,லகு அணு ,அணு,பரமாணு,,விபுஅணு,போன்ற வையாகும் இவற்றில் காரிய அணு,காரண அணு ,காரிய காரண அணு ,என மூன்று வகைப்படும்.இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொதுவாகவே உள்ளன .அவைகள் அந்த அந்த உயிர்களின் தன்மைக்கு தகுந்தாற்போல் செயல்படும் ,

துன்பமும் துயரமும் அச்சமும் பயமும்,மரணமும் அணைத்து உயிர்களுக்கும் வருவதும் போவதுமாய் இருக்கும் , இதை போக்குவது மனித பிறப்பின்,மனித தேகத்தின் கடமையாகும்,அதனால் தான் மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு என்பதாகும்

மற்ற உயிர்களுக்கு தொண்டு செய்வதால் அந்த உயிர்கள் மகிழ்ச்சி அடையும் ,அந்த மகிழ்ச்சியே மனித ஆன்மாவில் பதிவாகும், அந்த பதிவே மனித தேகத்தில் உள்ள அணுக்களை மகிழ்ச்சி அடையச செய்யும் ,தொண்டு செய்கின்றவர்களுக்கு தன்னுடைய உடம்பில் உள்ள அணுக்கள் மகிழ்ச்சி அடையும் .அந்த மகிழ்ச்சியினால் உடம்பில் உள்ள அணுக்கள் நீண்ட ஆயுளுடன் நீடிக்கும் .அணுக்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதால் மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்வான் என்பது சத்தியமான உண்மையாகும் .

இதைத்தான்;- ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் மனித ஜீவர்களுக்கு ஆணித்தரமாக வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் வள்ளலார் .இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம் .

எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிகின்றார் யாவர் அந்தச
செவ்வியர் தஞ் செயல் அனைத்தும் திரு அருளின் செயல் எனவே தெரிந்தேன்

என்றும் ;-

எத்துணையும் பேதம் முறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கே ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த தாலே !

என்கிறார் வள்ளலார் .மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானாலும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமானாலும் வள்ளலார் காட்டிய பாதைதான் நேர்வழிப் பாதையாகும் .

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு,





மனிதன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு