ஞான விடுதலை என்பது !
ஞான விடுதலை என்பது !
ஞான விடுதலை என்பது !
ஞானம் என்பது சொல்லித் தெரிந்து கொள்வதில்லை அருளால் அனுபவத்தால் அறிவது,
அனுபவம் அவரவர் செயலுக்கு தகுந்தாற் போல் கிடைக்கும்.மனித உருவங்கள் வேறுபடுவது போல் அனுபவமும் வேறுபடும்,இந்த உலகத்தில் எந்த அளவுக்கு அனுபவித்து உள்ளார்களோ அனைத்தும் திருப்பி தந்துவிட வேண்டும் .திருப்பித் தராமல் தியானமோ ,தவமோ,யோகமோ,செய்வதால் சிறு ஒளி உண்டாகும் அதனால் பல்லு இளித்து இறுமாந்து கெட நேரிடும் .பெரிய லாபம் ஒன்றும் கிடைத்து விடாது .
வாங்கிய கடனை திருப்பித் தராமல் இருந்தால் கொடுத்தவன் விடுவானா ?விடமாட்டான் ,அதுபோல் உலக இச்சையில் வாழ்ந்து அனுபவித்த தேக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,போக சுதந்திரம் மூலமாக அனுபவித்த அனைத்தையும் ,ஜீவ காருண்யத்தால்,ஜீவர்களுக்கு உபகாரம் செய்யவேண்டும் ,
உபகாரம் சமமாகும் போது அன்பு,தயவு ,கருணை,தானே உண்டாகும்.அதன் பின்பு அறிவு விளங்கும் .அதன் பின் அருள் வெளிப்படும் .அதன் பின் ஞானம் என்பதும் ஞான விடுதலையும் கிடைக்கும் .பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்ற வேண்டும் .இதுவே ஞானம் அடையும் துவாரமாகும் .
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு,!
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு !
அன்புடன் ஆன்மநேயன் ,கதிர்வேலு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு