திங்கள், 23 ஜனவரி, 2012

மனித நேயத்திற்கு தடையாக உள்ளது எது ?


மனித நேயத்திற்கு தடையாக உள்ளது எது ?

மனித நேயத்திற் குதடையாக உள்ளதுசாதி,மதம்,சமயம் சாத்திரங்களாகும.
இறைவன் படைத்த உயிர் இனங்களுக்கு,இறைவன் பெயர் வைக்க வில்லை .

மனிதனுடைய சுய நலத்திற்காக சாதி,மதம் சமயங்களை படைத்தான் ஆதலால் மனித பிரிவினைகள் உண்டாகி விட்டது மனித நேயம் அழிந்து கொண்டு வருகிறது .மனிதனை அடையாளம் காட்டுவதற்கும் ,தொழில் செய்வதற்கும் ,கடவுளை தெரிந்து கொள்வதற்கும் உருவாக்கப் பட்டதுதான் இவைகளாகும் .

இந்த சாதி,மதம் ,சமயத்தை அறிந்து தெரிந்து கொள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடி விட்டன .இன்று வரை சாதி ,மதம்,சமயம் போன்ற கொடுரமான இழிவான அமைப்பை உருவாக்கி உண்டாக்கி சில கூட்டம் மக்களை அடிமைப் படுத்தி உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார்கள் .

மக்கள் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, அறியாமல் உழைத்து கொண்டே இருந்தார்கள். மக்கள் உழைப்பை பயன் படுத்தி சில ஆதிக்க வர்க்கம் ஆனந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் .

வள்ளலார் வருகை புரிந்து, சாதி,மதம், சமயம் போன்ற கொடுமையான செயல்களால் மக்கள் படும் துன்பமும் ,துயரமும் ,அச்சமும்,பயமும் ,அடிமையும் கண்டு வேதனை அடைந்தார் /

மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் .என்ற விடா முயற்ச்சியால் சாதி,மதம்,சமயங்களை வேரோடு பிடுங்கி குழி தோண்டி புதைத்து விட்டார்

அதற்குப் பின்தான் பாரதியார் .பெரியார்,அண்னா,பாரதிதாசன் ,கலைஞர் கருணாநிதி,மற்றும் பல பகுத்தறிவு கொண்ட, பெரியவர்கள் சாதி, மதம் சமயம் போன்ற கொடுமைகளை ஒழிக்க அரும்பாடு பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் .எதிலும் சுய நலமில்லாமல் பொது நலத்துடன் பாடுபட்டால் எந்த செயலும் நிச்சயம் வெற்றி பெரும்.

வள்ளலார் எந்த ஒரு சுய நலமும் இல்லாமல், உலக உயிர்கள் அனைத்தும்  மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற கருணை உள்ளம் கொண்டவராகும் .

ஆன்ம நேயத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் .மனித நேயத்தை உருவாக்கப் பாடு பட்டவர் ,மனித நேயத்திற்கு தடையாக உள்ள,பொய்யான  சாதி,மதம்,சமயம் சாத்திரங்களை போன்ற கற்பனை கதைகளை, நம்ப வேண்டாம் என்பதோடு விட்டு விடாமல் .அதற்காக அனைவருக்கும் பொது வான அமைப்பையும் அமைத்துள்ளார் .வள்ளலார் .

1867,ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதி புரம என்னும் வடலூரில் ,மக்களின் பசி என்னும் பிணியைப் போக்க அனைவருக்கும் பொதுவான ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை''யை உருவாக்கினார் அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாமல் அணையா அடுப்பு என்னும் ''தீ ''மக்களின் பசியை அனைத்துக் கொண்டு உள்ளது. .

1872,ஆம் ஆண்டு அதே இடத்தில் சாதி,மதம் .சமயம் அற்ற ,அனைவருக்கும் பொதுவான கடவுள் வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தார் .கடவுள் ஒளியாக உள்ளார் அவர் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற உண்மையை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி,ஆன்ம நேயத்தை ஒன்று படுத்த ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வந்தார்

வடலூரில் அன்றிலிருந்து இன்றுவரை '' சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை '' யில்,அனைத்து உலக மக்களுக்கும் பொதுவான ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வந்து நடை முறைப் படுத்தியுள்ளார் .

மனித நேயத்திற்கு தடையாக உள்ள சாதி,மதம், சமயம் என்ற பொய்யான கற்பனைக் கதைகளை தூக்கி எரிந்து விட்டு ஒற்றுமையுடன் வாழ்வோம்.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை 

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிருத்தமிடும் தனித தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !  

வள்ளலார் ;

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு,


          

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு