சனி, 16 ஜூலை, 2011

மனம் !


                         மனம் !

மனம் என்பது நம் உடம்பில் உள்ள அந்த காரணங்களில் ஒன்றாகும்.அந்தகரனங்கள் என்றால் என்ன?

நம் உடம்பில் ஐம்புலன்கள் கண்,காது ,மூக்கு ,வாய்,மெய் அதாவது உடம்பு இவைகள் செய்யும் செயல்களை உள் வாங்கிக் கொள்வது அந்த கரணங்கள் என்பதாகும்.அவைகள் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,உள்ளம, இவைகளுக்கு உருவம் கிடையாது.ஆற்றல் மிகு அணு அலைகளால் செயல்படும்,இதில் மனம் என்பது முக்கியமானதாகும்,கண்களில் பார்த்து செயல்படுவதெல்லாம்,முதலில் மனதில்தான் பதிவாகும்.மனதில் பதிவானதை புத்தி ,சித்தம் ,அகங்காரம், உள்ளம போன்ற அணு அலைகள் அவைகளை பிரிந்து அந்த அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கும்.அனுப்பி வைத்த அணு அலைகள் ஜீவன் என்னும் உயிருக்கு செல்லும் ,அங்கு அதை சரி செய்து ஆன்மா என்னும் ஒளிக்கு அனுப்பும்.இவை யாவும் ஓரு  நொடியில் நடக்கும் செயல்களாகும் .

மனதுக்கும் அணு அலைகலான காற்றுக்கும் தொடர்பு உண்டு .ஆகாயம் +காற்று இரண்டும் சேர்ந்தது மனமாகும்.ஆதலால் மனத்தை பெண் உருவமாக உருவகப்படுத்தி யுள்ளார்கள்.இதை வள்ளலார் அவர்கள்

ஆண் இயல் அறிவும் பெண் இயல் மனமும்
அண்னுற வகுத்த அருட்பெரும்ஜோதி !

என்கிறார்.மனத்திற்கு இறக்க குணம் உண்டு ஆற்றல் வலிமையையும் உண்டு.மன்ம போலத்தான் வாழ்வு.

அதனால் மனத்தை ஆட்டாமல் சும்மா இருபதுவே சுகம் என்கிறார் வள்ளலார்
மனதை ஒரு நிலைப் படுத்துவதே ஆன்மீகமாகும்.ஆன்மீக பாதையாகும்.மனம் கட்டுப்பட்டால் நம்முள் சுவாசம் அடங்கும்.சுவாசக்கலை நிலை சித்திகள் சித்திக்கப் பெறும்,ஒரு நிமிடம் மனம் அடங்கினால் சன்மார்க்க குணங்கள் எல்லாம் கிடைக்கப் பெறும்.என்கிறார் வள்ளலார் .

மனதுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ;--

ஆணின தன்மை அறிவு ---பெண்ணின் தன்மை மனம்.
அறிவு ஒரு தீபம் ---மனம் ஒரு இருள்
அறிந்து உணர்வது அறிவு ---சஞ்சலப்படுவது மனம்,
அறிவு சுத்த சிவத்தின் பீடம்--மனம் சத்தியின் பீடம்,
அறிவே துறவறம் ---மனமே இல்லறம்,
ஆன்ம இரக்கமே அறிவு ---ஜீவ இரக்கமே மனம்,
ஊன்றிய பாதம் அறிவு ---தூக்கிய பாதம் மனம்,
அறிவே உயிரின் கூறு ---மனமே உடற் கூறு,
அறிவே ஆன்ம வெளி ---மனமே அனல் காற்று,
ஆண் தன்மையே வலப்பக்கம் ---பெண் தன்மையே இடப்பக்கம்,
ஆண்மையே அறிவு ---மனத்தின்மையே சத்தி,
பிறன் மனை நோக்காமை பேராண்மை --மனம் தின்மையானால் அறிவு திடம் உண்டாகும்.

அறிவும் மனமும் அடங்கினால் பேரானந்தம் உன்யாகும்.எனவே மனம் போன போக்கெல்லாம் போகாது அறிவு என்னும் அறிவை அறிந்து உணரவேண்டும்.அறிவுப் பாதையில் நாம் நம் மனத்தைச செலுத்தவேண்டும்.
இவை ஆண் பெண் என்ற உருவங்களுக்கு சொன்னதல்ல,அனைவருக்கும் பொதுவானதாகும்.

வள்ளலார் பாடல் ஒன்று;--

கடுத்த மனத்தை யடக்கியொரு கணமும் இருக்க மாட்டாதே
படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்து என் அறிவைப் பல நாலுந
தடுத்த தடையைத் தவிர்த்து என்றும் சாகா நலஞ்செய் தனி அமுதம்
கொடுத்த குருவே நிந்தனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே!

என்கிறார் வள்ளலார்.மனதை அடக்கும் வழியை தெரிந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

அன்புள்ள ஆன்மநேயன் --கதிர்வேலு.                                        

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு