ஞாயிறு, 17 ஜூலை, 2011

கொல்லாமை புலால் உண்ணாமைப் பற்றி நண்பருக்கு கடிதம்!

Kathir Kathirvelu உண்மையை அறிவின் அருள் முலம்தான் உணரந்து அறிய வேண்டும் சாதாரண மனித அறிவினால் அறிய முடியாது. அனுபவத்தில் தான் அறிய முடியும்.யாராக இருந்தாலும் கொலை செய்பவர்கள் குற்றவாளிகள்தான்.அவர்கள் இறைவன் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவர்கல்தான். அதுவும் இறைவன் பெயரைச சொல்லி கொலை செய்வது மன்னிக்க முடியாத குற்றங்களாகும் .அந்த குற்றங்களின் பிரதிப் பலிப்புதான் சண்டாளப் பிறப்புகளுக்கு காரண காரியமாகும்.இன்பம் துன்பங்களுக்கு காரண காரியங்களாகும் .அனைத்தும் அணுக்களின் செயல்பாடுகளாகும்.அதுதான் நல்வினை,தீவினைகலாகும்.இந்த​ உலகமே அணுக்களின் செயல்களாகும்.அணுவை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்தான் அனைத்திற்கும் காரணங்களாகும் .இதை அணு ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்து அறிந்து வெளிப்படுத்தும் போது அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.நீங்கள் சொல்லியதுபோல் காவி உடை உடுத்தியவர்கலான காஞ்சி காம கோடிகள் ஆனாலும். ஆதி சங்கரர்,சங்கராய்ச்சியார் ,போன்ற போலி ஆன்மீகவாதிகள் ஆனாலும் உலகத்திற்கு உலக மக்களுக்கு பொய்யான போதனைகளை போதிக்கும் எந்த போதகர் ஆனாலும் , உலகத்தை ஆளும் எந்த தலைவர்கள் ஆனாலும் ,மற்ற எந்த ஆன்மீக வாதிகள் ஆனாலும் அவர்கள் உயிர் பலிக்கு காரணமாக இருந்தால் அவர்களும் வெறி பிடித்த மிருகங்கள்தான்.செத்தவர்களை​ எழுப்புகின்ற சக்தி வாயந்த சித்துப் பெற்றவர்கள் ஆனாலும் அவர்கள் கொலையும் புலைப புசிப்பும் உடையவர்கள் என்றால் அவர்களை ஞானி என்று சொல்ல முடியாது என்கிறார் வள்ளலார் அவர்களும் கேவலமான மனிதர்கள்தான் என்கிறார் வள்ளலார்,திருவள்ளுவர் கொல்லாமை புலால் உன்னாமைப் பற்றி மிகத் தெளிவாக இரண்டு அதிகாரங்கள்,எழுதிவைத்துல்ல​ார்கள்.அவை உலக பொதுமறை என்பதாகும்.நடு நிலையானதாகும் அவற்றை படித்துப் பாருங்கள் உண்மை வெளிப்படும் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு