ஞாயிறு, 10 ஜூலை, 2011

வள்ளலார் கண்ட மெய்பொருள் !


வள்ளலார் கண்ட மெய்பொருள் !

வள்ளலார் கண்ட மெய்ப்பொருளை உலக மக்கள் அனைவரும் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் எண்ணமும் ஆசையுமாகும்.அடியேன் அவர் வழியில் செலவதால் என்னைப்போல் அனைவரும் செல்லவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும் .அனைவரும் வள்ளலாரின் சுத்தசன்மார்க்க கொள்கையை பின் பற்றுவோம்,இதற்க்கு எந்த பொருள் முதலீடும் தேவை இல்லை.ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் முக்கியமானதாகும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு தயவு கருணை காட்டவேண்டும்.மனிதன் மனிதனாக வாழவேண்டும்..சுய நலமில்லாமல் பொது நல நோக்கத்துடன் --வள்ளலார் கண்ட பெய்பொருள் குழு அமைக்கப் பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ள அன்பர்கள் உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.வாதம் இல்லாமல் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.அவரவர் கொள்கைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே முக்கியமான நோக்கமாகும்,

உண்மையை உணர்ந்து முயற்ச்சி செய்து வாழ்வது அவரவர் விருப்பமாகும் .ஒருவர் கொள்கையை மற்றவர்கள் மீது புகுத்துவது அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் .

மெய்பொருள் என்பது உண்மையானது.அந்த மெய்பொருள் உண்மையை அறிந்து தெரிந்து வாழ்ந்து காட்டியவர் வள்ளலார்! அவர் காட்டிய வழியில் நாம் வாழ்ந்து மெய்பொருளை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியபடுத்திக் கொள்கிறேன்.நானும் உங்களைப்போன்ற சராசரி மனிதன்தான்.இருந்தாலும் நான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் வாழ்ந்து வருவதால் எனக்கு கிடைத்த தெரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம்.

இதில் சாதி, சமயம், மதமோ,பணமோ, புகழோ, உயர்வோ, தாழ்வோ, என்பது எதுவும் இல்லை அனைவரும் என்னுடைய ஆன்மநேய சகோதரர்கள் என்பதால் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்ற அன்பால் இதை தெரிவித்துகொள்கிறேன் .

உங்கள் ஆன்மநேயன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு