சனி, 7 ஆகஸ்ட், 2010

'' வள்ளலார் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது ''

        
  •  அருட்பெருஞ்ஜோதியால் 
  • வள்ளலார் வசம் பூலோக
  • ஆட்சியை ஒப்படைக்கப் பட்டுள்ளது.!


      ஆன்ம நேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் .
அருட்பெரும்ஜோதியால் இவ்வுலகத்திற்கு அனுப்பி
வைக்கப் பட்டவர் வள்ளலார் அவர்கள் ,என்பதை நாம்
முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் .

     ஏன் அனுப்பி வைக்கப்பட்டார் ;--
இவ்வுலகில் மனிதர்கள் மனிதர்களாக வாழாமல் தவறான
பாதையில் சென்று வாழ்ந்து வருகிறார்கள் .மனித பிறவியின்
முக்கியமான நோக்கம் ;--
அருட்பெரும்ஜோதி  ஆண்டவரின்  குழந்தையாகிய நாம்
எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்லவேண்டும் என்பதுதான்
நியதி, அதாவது அருட்பெரும்ஜோதி அருளின் சட்டமஆகும் .

     ஆனால் மனிதபிறவி எடுத்த ஆன்மாக்கள் வள்ளலாருக்கு
முன்புவரை யாராவது சென்று இருக்கிறார்களா ?என்றால்
இல்லை என்றுதான் சொல்லவேண்டும் .

      விலாசம் தெரியாத ஆன்மாக்களாக இருந்துகொண்டு
இருககிறோம் அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கும் ,உலக
உயிர்களுக்கும் உண்டான தொடர்பு துண்டிக்கப் பட்டு
விட்டன.ஆதலால் உண்மையான விலாசம் தெரியாமல்
பொய்யான விலாசத்தை ,தேடி அலைந்து ,திரிந்து ,
அல்லல் பட்டு ,அறிவிழந்து அழிந்து கொண்டே இருககிறோம் .

    நமக்கு வழி காட்டிகளாக வந்த அருளாலர்கள் ,வியாசமுனிவர் ,
அவருக்கு போட்டியாக வந்த வால்மீக முனிவர் ,போன்றவர்கள்
பொய்யான ,கற்பனைக் கதைகளை ,தத்துவங்களை ,மக்கள்
மத்தியில் விதைத்து விட்டு சென்றுவிட்டார்கள் .அவைகள் வளர்ந்து உலகமுழுவதும் பரவிவிட்டது.அதனாலுண்மை தெரியாமல் மக்கள் துன்பப் படநேரிட்டது.

     அவர்களுக்கு பின்னாடி வந்த பெரியோர்களான ,புத்தர் ,
ஏசுபிரான் ,நபிகள்நாயகம் ,போன்ற பெரியோர்களும் ,
ஒன்று கிடக்க ஒன்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் .

     அதனால் மக்கள் சாதி ,சமயம் ,மதம் போன்ற பிரிவினைகளால்
போரிட்டு வீணாக அழிந்து கொண்டு இருக்கிறார்கள் .

    அதற்கு பின்னாடி வந்த பெரியோர்களும் ,கண்ணை மூடிக் கொண்டு
உண்மை தெரியாமல் ,பிரிவினையை உண்டு பண்ணி ,அவரவர்
அறிவுக்கு தகுந்தாற்  போல் மக்களை பிறித்துவிட்டார்கள்.

     ஒரே இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஆன்மாக்கள் ,அதாவது
உலக உயிர்கள் ,ஆன்ம நேயத்தோடு வாழ  வேண்டியவர்கள்
தவறான் வழி காட்டுதலால்,தவறான வழியில் வாழ்ந்து ,
பிரிவினைகள் ஏற்பட்டுவிட்டன .


  •   '' இவைகளை பார்த்து வேதனை அடைந்த அருட்பெரும்ஜோதி

ஆண்டவர் ,அவசர,அவசரமாக அருலாளர்கள் மகாசபையை
கூட்டுவதற்கு அழைப்பு அனுப்புகிறார்.''
  •      மகாசபை !.       
      உலகிலுள்ள பல கோடி அருளாலர்கள் அவசர அழைப்பை 
ஏற்று ,அருட்பெரும்ஜோதி மகா மண்டபத்தில் வந்து அமர்ந்து 
விடுகிறார்கள் .

     அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்து ,தனது'' ஞான சிங்காதன ''
மேடையில் அமருகிறார் .அனைவரும் என்ன நடக்கப் 
போகிறது என்பதை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

       அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ;--
இங்கே உங்களை எதற்காக அழைத்திருக்கிறேன் என்பதை 
தெரியப் படுத்தபோகிறேன் .சற்று கவனமாக கேளுங்கள் .
நீங்கள் அனைவரும் பக்குவமுள்ள ஆன்மாக்கள் ,உங்களை 
பூலோகத்தில் உள்ள உயிர்களை காப்பாற்ற வேண்டும் 
என்ற, நோக்கத்தில் அனுப்பி வைத்தேன் .நீங்கள் அனைவரும் 
என்ன செய்தீர்கள் ? 

     உண்மையை சொல்லாமல் பொய்யான கதைகளை 
சொல்லி மக்களை ஏமாற்றி விட்டீர்கள் .உண்மையை மறைத்துவிட்டீர்கள்.                உங்களால் 
உலக உயிர்கள் அனைத்தும், துன்பமும் ,துயரமும் ,அச்சமும் ,
அடைந்து வருகின்றன .அவர்களுக்கு உண்மையான 
விலாசத்தை கூட ,தராமல் விட்டு விட்டீர்கள் .
''தத்துவங்களை கடவுளர்களாக அறிமுகப் படுத்தி விட்டீர்கள் !''
தத்துவங்களை உண்மைக்கடவுள் எனறு நம்பி ,ஏமாந்து ,அழிந்து 
கொண்டு இருக்கிறார்கள் .

  •   உங்களை அனுப்பி வைத்தது வீண் விரயமாகி விட்டது .

ஆதலால் உங்களுக்கு ,இப்பொழுது ஒரு செய்தியை
வெளிப்படையாக வெளியிடுகிறேன்,அனைவரும்
கேளுங்கள் .

     இந்த அருளாலர் மகா சபையிலே உண்மையான ஒருவரை
அறிமுகப் படுத்த போகிறேன் ,அவர் யார் தெரியுமா ?
அவர்தான் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .எனறு
வள்ளலாரை அழைத்து சபையின் நடுவே நிறுத்தி ,
அனைவருக்கும் அறிமுகப் படுத்துகிறார் அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் .அனைவரும் ஆச்சிரியமாக பார்க்கிறார்கள் ,
பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் .

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ;--
இனிமேல் நீங்கள் அனைவரும் வள்ளலார் நிறுவி இருக்கும் ,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ,
வள்ளலார் கருத்துகளுக்கு இணங்கி ,கட்டுப்பட்டு
செயல்பட வேண்டும் .

  •   உங்களுடைய பொய்யான கருத்துக்கள் ,கதைகள்

தத்துவங்கள் ,செய்திகள் சட்டதிட்டங்கள் ,அனைத்தும்
இருக்கும் இடம் தெரியாமல் மறைக்கப்படும்.இவைகள்
யாவும் என்னுடைய ஆணையாகும் .எனறு அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் ஆணையிடுகிறார் .இந்த ஆணையானது
30 ---1 ---1874 , ஆம், ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் .
என்பதை தெரிவித்துக கொள்கிறேன் .

   30---1 ---1874 ஆம், ஆண்டுக்கு பிறகு வள்ளலாரின்
சுத்த சன்மார்க்க கொள்கைகள் உலகமெங்கும் ,
நிறுவப்படும் .இனிமேல் உலகிலுள்ள அனைத்து உயிர்களும்
வள்ளலார் ,காட்டிய'' சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''
என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு பயன் அடைய
வேண்டும் .வேறு எதையும் பின் பற்றக்  கூடாது .இது
என்னுடைய ஆணையாகும் .எனறு ,அனைத்து
அருளாலர்கள் முன்னிலையில் ,சட்டதிருத்தம்
நிறைவேற்றப் பட்டது .

மேலே கண்ட தேதியில் இருந்து உலகம் முழுவதும்,
வள்ளலார் கொண்டு வந்த சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்க ,ஆட்சி நடைபெறும் ,இந்த ஆட்சி
அருட்பெரும்ஜோதி ஆணடவரின் நேரடி பார்வையில்
நடைபெறும் என்பது உண்மையாகும் .

   மேலே கண்ட நிகழ்வுகளைப் பற்றி வள்ளலார்
திரு அருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் ஒன்று ;--

பொய் பிடித்தார் எல்லோரும் புறத்திருக்க நான் போய்ப்
பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்
மெய்பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம்
விளங்க உலகத்திடையே விளக்குக எனறு எனது
கைபிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக் கொண்டேன்
களித்திடுக இனி உணை நாங் கை விடோம் மென்றும்
மைபிடித்த விழி உலகர் எல்லாருங் காண
மாலை யிட்டோம் மென்று எனக்கு மாலை அணிந்தாரே.

  என்ற பாடலை ;-- திரு அருட்பா அனுபவ மாலையில்
தெளிவாக பதிவு செய்துள்ளார் வள்ளலார் அவர்கள் .


  • அடுத்து அருட்பெரும்ஜோதி ஆண்டவருக்கு இருந்த துன்பம் போக்கியதாக ஒரு பாடல் ;--

துன்பெலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுத்ந்தரம தானது உலகில்
வன்பெலாம் நீக்கி நல வழியெலாம் மாக்கி மெய்
வாழ்வெலாம் பெற்று மிகவும்
மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெறுக உலவாது நீடுழி விலை
யாடுக அருட்ஜோதியாம் 
ஆட்சி தந்தோம் உனைக் கை விடோங் கைவிடோம்
ஆணை நம் மாணை யென்றே
இன்புறத் திருவாக் களித்து என் உள்ளே கலந்
திசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடராஜ பதியே .

உண்மையை சொல்லுவதற்கு வள்ளலார்
கிடைத்து விட்டதால் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவருக்கு இருந்த துன்பங்கள் தீர்ந்து
விட்டதாம் .இனி கவலை இல்லை எனறு .
தன்னுடைய ஆட்சியை வள்ளலாரிடம்
ஒப்படைத்துவிடுகிறார் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் .

    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வேறு ,
வள்ளலார் வேறு அல்ல .இனிமேல் இருவரும்
ஒன்றே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .

     இனிமேல் உலகமக்கள் அனைவரும் ,குறிப்பாக
சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ,வள்ளலார் காட்டிய
வழியை  பின் பற்றி நடைமுறை படுத்தவேண்டும் ,

   இனிமேலும் சமய, மத மார்க்கங்களில் பற்று உள்ளவர்கள் ,
அவைகளை தூக்கி எறிந்து விட்டு ,சுத்த சன்மார்க்க
பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு
வாழ்ந்து ,மற்றவர்களையும் வாழ வைக்கவேண்டும் .

     எல்லாவற்றையும் விட்டு ,உண்மை அன்பால்
திரு அருட்பாவை படியுங்கள் ,ஜீவகாருண்யம் செய்யுங்கள் ,
தெரிவிக்க வேண்டிய அனைத்தும் ,அருட்பெரும்ஜோதி
ஆண்டவர் தெரிவிப்பார் .ஆதியும் நடுவும்  அந்தமும் இல்லா
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் .

குறிப்பு ;---

     இன்றைய காலகட்டத்தில் ,வள்ளலாரின் உண்மை
நெறியாகிய '' சுத்த சன்மார்க்க '' கொள்கைகளை
உலக மக்களுக்கு தெரியப் படுத்த மீடியாக்கள்
தேவைப்படுகிறது ..

    டிவி, ரேடியோ ,இன்டர்நெட் ,பத்திரிகைகள் .தினசரி
பத்திரிக்கைகள் ,வார பத்திரிக்கை ,மாத இதழ் ,சிறு சிறு
புத்தகங்கள் ,பொது கூட்டங்கள், மேடை பேச்சுக்கள் ,
சத்விசாரம் ,பரோபகாரம் .போன்ற ,கருவிகள் மூலமாக
சன்மார்க்கிகளாகிய நாம் வெளியிடவேண்டும் .

     இதற்க்கு உண்மையான ஓர் அமைப்பை உருவாக்க
வேண்டும் .இந்த அமைப்பின் மூலமாக ,வள்ளலாரின்
கருத்துக்கள் .ஒத்த கருத்துடைதாய் இருக்கவேண்டும் .
மாறுபட்ட கருத்துடையவர்களை ஒழுங்கு படுத்த
வேண்டும் .அனைவரையும் அழைத்து தெளிவுப்
படுத்தவேண்டும் .

    அதற்கு வள்ளலார் வழியை பின் பற்றி வாழும்
சுத்த சன்மார்க்கிகளாய் இருத்தல் வேண்டும் .அவர்கள்
வழி காட்டுதலால் செயல் படுத்துதல் வேண்டும் .
அவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும் .தகுதி
உடையவர்களை ,கண்டுபிடித்து ,வரவழைத்து ,ஓர்
அமைப்பை உருவாக்க வேண்டும் .அந்த அமைப்பின்செயல்பாடுகள்
மூலமாக ,வள்ளலார் கருத்துக்களை ,உலக முழுவதும்
பரப்ப ஆவன செய்ய வேண்டும் .

    வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையங்கள்
வள்ளலார் எண்ணப்படி ,கருத்துப்படி செயல்படவேண்டும் .
வடலூர் தூய்மை அடைந்தால் ,அனைத்தும் வெகு விரைவில்
துய்மை அடையும் .வடலூர் உள்ள தெய்வ நிலையங்கள்
 போலி சன்மார்க்கர்கள் கையில் சிக்கிக் கொண்டு உள்ளது .
அவைகளை சுத்த சன்மார்க்கர்கள் ,ஒன்று திரண்டு
 மீட்க வேண்டும் .

    இவைகள் அடியேனின் கருத்துக்களாகும் ,இவைகளில்
மாற்றுக் கருத்துக்கள் ,நல்லவைகளாக இருந்தால்
மாற்றிக் கொள்ளலாம் .

     மற்ற அமைப்புகள் போல் அல்லாமல் வள்ளலார்
கொள்கைகளுக்கு ,மாற்றம் இல்லாமல் வித்தியாசமாக
இருக்க வேண்டும் .அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி
இருக்கவேண்டும் .

    இவைகளை சன்மார்க்கிளாகிய நாம் செய்யாவிட்டாலும்
கண்டிப்பாக நடந்தே தீரும் .அப்பொழுது நாம் விலகி
இருந்து வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகும் .

  •  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,தகுதி உள்ளவர்களை 

தேடிக் கொண்டு இருக்கிறார் .இது சத்தியம் ,உண்மை .

ஒன்றுபடுவோம் .உண்மையை நாடுவோம் .
வாழ்க உலக உயிர்கள் !
வளர்க சுத்த சன்மார்க்கம் !.

அன்புடன் ;--ஆன்மநேயன் கதிர்வேலு !  

    
    
  

1 கருத்துகள்:

18 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:38 க்கு, Anonymous autpa srinivasan கூறியது…

super

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு