வள்ளலார் ஒளி தேகம் பெற்றவர்
வள்ளலார் ஒளி தேகம் பெற்றவர் அவருக்கு விபூதிபோன்ற சமயசின்ன்ங்கள்
அணியலாமா? அவர் ஜாதி, சமய, மதங்களை கடந்தவர். மத கொள்கைகளை
குழி தோண்டிபுதைத்தவர். சமய, மத, குற்றங்களையும் குறைபாடுகளையும்
உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டியவர்.
வள்ளலார் வழியில் நடைபோடும் சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும்
வள்ளலார் காட்டிய பாதையை விட்டு நம் விருப்பம் போல் செயல் பட கூடாது
அப்படி செயல்பட்டால் அவருக்கு, அவர் காட்டிய உண்மை யான சுத்த சன்மார்க்க கொள்கைளுக்கு விரோதமாகும். இனிமேலாவது வள்ளலார் படத்துக்கு எந்த சமய சின்னங்களும் அணியாமல் பார்த்து கொள்வது நமது அனைவரின் கடமை யாகும் வள்ளலார் ஆரம்பத்தில் சமய தெய்வங்களைப் பாடினார் திருநீறுஅணிய வேண்டும் என்று வலியுறுத்தியும் பாடினார். ஐந்து திருமுறை வரையில் சமய தெய் வங்களைப் பற்றி பாடினார். அதற்கு பிறகு எல்லாவற்றையம் விட்டு விட்டதனால் வந்த லாபமே என்னை ஆண்டவர் ஏரானிலையில் ஏற்றி வைத்துள்ளார் .
என்னை ஏற்றி விட்டது எது எனில் அன்பு, கருணை, தயவு தான் தூக்கி
விட்டதே தவிர வேறு எதுவும் என்னை தூக்கி விடவில்லை; நீங்களும்
எல்லா உயிரிடத்தும் அன்பும், கருணையும், தயவும் வைத்து வந்தீர்களானால்
ஆண்டவர் உங்களை கை விடமாட்டார். நான் சமய, மதங்களை ஏன் சாடுகிறேன் என்றால் அவை உண்மை ஏதும் சொல்லவில்லை சமுகத்தை சீர்குலைத்து விட்டது. இன்னும் சீர் குலைத்து விடாமல் தடுத்து நிறுத்துவதற்கு என்னை, ஆண்டவர் இந்த உலகத்தற்க்கு அனுப்பிவைத்தார் என்று வள்ளலார் தெளிவாக திரு அருட்பாவில் விளக்கி உள்ளார்.
திருவருட்பாவை நன்கு தெளிவுபட படித்தால் நன்றாக புரியும். சன்மார்க்க
அன்பர்கள் இனி வள்ளலார் வழியில் நின்று நளமுடன் வாழ்வோம்.
மீண்டும் பூக்கும்!
மீண்டும் பூக்கும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு