புதன், 15 நவம்பர், 2023

விபூதி பற்றிய விரிவான செய்திகள்!

*விபூதி பற்றிய விரிவான செய்தி.*
===============

*பேரன்பு மிக்க சன்மார்க்க சான்றோர் பெருமக்களே,*

🔥🔥🔥🔥🔥🔥🔥

 *சமீப காலமாக நமது சுத்த சன்மார்க்க சங்க அமைப்புகளுக்குள்ளே*
 *ஒரு மிகப்பெரிய* *விவாதம் நடந்து வருகிறது*

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
*அதுதான் விபூதி பற்றியது.*

ஒரு சாரார்* *வள்ளலாருக்கு விபூதி இட வேண்டும் என்றும்*

 *வேறொரு சாரார் வள்ளலாருக்கு விபூதி தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.*

🎪🎪🎪🎪🎪🎪🎪
 *இது தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து சங்கங்களின் பிரிவினைக்கு இதுவே ஒரு காரணமாக அமைந்துவிடும் போல தோன்றுகிறது.*
💡💡💡💡💡💡💡
 *இதற்கு வள்ளல் பெருமான் திருவருட்பா மூலம் நமக்கு என்ன தெளிவை தருகிறார் என்பது பற்றி சிந்திப்போம்.*

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
*துவக்க காலத்தில் வள்ளல் பெருமானும் திருநீறு* *அணிந்திருக்கிறார்.*
 *அதை சார்ந்து பல* *பாடலும் எழுதி* *இருக்கிறார்.*

 *திருநீறு அளி த்து பலருக்கு நோய்களையும் குணமாக்கி இருக்கிறார் என்பது நமக்கு வரலாற்றுச் சான்று.*

 *வள்ளல் பெருமானும் திருவருட்பா இரண்டாம் திருமுறையில்*💥   *சிவ*
 *புண்ணிய  தோற்றம்* 💥 *என்ற தலைப்பில் பத்து பாடல்களை* *பாடியுள்ளார்.*

*இதில் திருநீறிடாதவர்களை வள்ளல் பெருமான் கடுமையாக விமர்சித்தே பாடி இருப்பார். கடவுள் நீரிடா கடையறை, போற்றி நீரிடா* *பிழையரை, தெய்வ நீரி டா சிறியரை, தூய நீரிடா பேயர்களை, நல்ல நீரிடா நாய்கள், அருள் செய் நீரி டார் அமுதம் எனக்கு ஈடினும், முக்தி நேரிடார் முன் கையால்* *தொடினும், இனிய நீரிடார் ஈனநாய் புலையர், நிலைகொள் நீரிடா புலையர்,*

 *என பலவாறு திருநீர்  அணியா தவர்களை பெருமான் விமர்சனம் செய்து* *பாடியிருப்பார்கள்.*

 *அதேபோன்று திருநீறிடும் அன்பர்களை கண்டால் எந்த அளவிற்கு போற்றி ட வேண்டும் என்பதையும் பாடி இருக்கிறார்கள்.*

 *இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது* *என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்தால்,*
 *ஒரு சமயத்தில்* *ஒருவருக்கு பற்று அதிகமாக இருந்தால்* *அதற்கு* *எதிரானவற்றையெல்லாம் தவறாக தான் நினைக்கத் தோன்றும்.*
 *அதே கருத்தில்தான் வள்ளல் பெருமானும் இந்த பாடலை* *பாடியுள்ளார்கள் என்று நாம் கருதத்* *தோன்றுகிறது.*
 *எனவே நமக்கு எந்த சமய பற்றுகளும் கூடாது என்பதை தான் இது உணர்த்துவதாக** *உள்ளது.*

*இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந் தற்று,*
💥💥💥💥💥💥💥
 *என்பது உலகப் பேராசானின் திருக்குறள்.*

 *வள்ளல் பெருமானுக்கு திருக்குறளின் சாராம்சங்கள் அனைத்தும் அத்துபடி. அப்படி இருக்க திருநீர் இடா தவர்களை ஏன் இப்படி விமர்சிக்கிறார் என்ற சூழலை நாம் சற்று சிந்தித்தால், நமக்கு எந்த சமயத்தின் மீதும் பற்று கூடாது என்பதே உணர்த்துவதாக மீண்டும் மீண்டும் நாம் உணர முடிகிறது.*

 *திருநீறு என்பது சைவ சமயத்தின் உயர்ந்த புனித நெறி குறியீடு.*
💥💥💥💥💥💥💥💥
 *ஆனால் சுத்த சன்மார்க்கத்திற்கு அனைத்து சமய நெறிகளையும் நாம் கடந்து ஆக வேண்டும்.*

 *இதை வள்ளல் பெருமான் அகவலில் ல் மிகத் தெளிவாக சொல்லுகிறார்.*

 *சாதியும் மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி என்று.*

 *இதற்கு மேல் நாம் சமய பற்றுகளை விட  விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன்.*

 *சரி ஆரம்ப காலத்தில் வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயத்தை சார்ந்து சுத்த சன்மார்க்க கருத்துக்களை கூறியிருக்கிறார் என்பது பற்றி நாம் சற்று சிந்திப்போம்.*

*உலகத்தில் தோன்றிய சமயங்களில் கொல்லா நெறியை நேரடியாக ஏற்பது இரண்டு பிரிவு மட்டுமே.*

 *ஒன்று சைவ நெறி.   மற்றொன்று சமண மதம்.*

 *வைணவம் ஏற்றாலும் கொலையை அது தவறு என்று கூறவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு பாரதப்போராகும்.*

 *புத்த மதமும் அன்பை போதிக்கிறது. ஆனால் முழுமையான கொல்லா நெறியில் அது ஏற்கவில்லை.* *இதற்குபுத்தர் பெருமானின் வாழ்க்கையின் முடிவே நமக்கு  சாட்சியாக உள்ளது.*

 *சமண மதமும் கொல்லா நெறியை போற்றி புகழ்ந்து ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அது கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது இல்லை.*

 *இருப்பதில் சைவம் தான் கொல்லா நெறியை  ஏற்றுக் கொள்வதும், கடவுளைப் பற்றிய சிந்தனையும், ஆன்மா பற்றிய விளக்கமும், மறுபிறவிகள் பற்றிய செய்தியையும் உள்ளடக்கியதாக உள்ளது.*

 *இதன் அடிப்படையில் நாம் சற்று உற்று நோக்கினால், சுத்த சன்மார்க்கத்திற்கு மிக அருகில் உள்ளது சைவ சமய அனுபவம் ஒன்றே.*

 *இதனை கருத்தில் கொண்டு  சு த்த சன்மார்க்க நெறியை துவக்க காலத்தில் சைவ நெறியை சார்ந்து கூறியுள்ளார்கள் என்று கருதத் தோன்றுகிறது.*
💡💡💡💡💡💡💡
 *நான்காம் திருமுறையில் பிரசாதம் மாலை என்ற தலைப்பில் பத்து பாடல்களை வள்ளல் பெருமான் பாடியிருக்கிறார்கள்.*

 *இந்தப் பாடல்களில் இறைவனிடம் தான்* *திருநீரைக் கேட்டதாகவும்*
 *அதற்கு இறைவன்* *அவற்றையெல்லாம் நாம் உமக்கு முன்னரே* *கொடுத்து விட்டோம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 *இப்பொழுது செஞ்சுடர் பூ, தகுசுடர் பூ, மண ச்செழும்பு, அருள் மணப்பூ, அருண் மணப்பபூ, செழுமண ப்பூ, கொளு மணப்பூ என்ற அனுபவ நிலைகளை தந்ததாக கூறியுள்ளார்.*
💥💥💥💥💥💥💥
 *வள்ளல் பெருமான் கேட்ட திருநீருக்கு பதில், இது போன்ற அனுபவ நிலைகளை வள்ளல் பெருமானுக்கு* *இறைவன் தந்ததாக உறுதிப்பட கூறுகிறார்.*

💡💡💡💡💡💡💡
 *என் வடிவம் தலைப்ப ஒரு பொன் வடிவந் தரித்தே,*

 *என் முன் அடைந்து என்னை நோக்கி இளநகை செய்தருளித்*

 *தன் வடிவ திருநீற்றுத் தனிப்பை அவிழ்த்து எனக்குத்*

 *தனி சுடர் பூ அளிக்கவும் நான் தான் வாங்கி களி த்து*

*மின் வடிவப் பெருந்தகையே திருநீரும் தருதல்*

 *வேண்டுமென முன்னரது விரும்பி அளித்தனம் நாம்*

 *உன் வடிவிற் காண்டியென உரைத்தாருளி நின்றாய்*

 *ஒளிநடைஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே* .

 *உதாரணத்திற்காக இந்த ஒரு பாடலை நாம் இதில் பதிவிட்டுள்ளோம்.*

 *இந்தப் பாடல்கள் மூலம் நாம் அறிவது* *என்னவென்றால்*
 *வள்ளலார் திருநீறு பூசி நிலையை கடந்துவிட்டார் என்பதே*
 *அதாவது சைவ சமய அனுபவத்தை கடந்து, சுத்த சன்மார்க்க நெறியை முழுவதுமாக அடைந்து  விட்டார் என்பதற்கு ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.*

 *இதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ள ஆறாம் திருமுறை பாடலையும் பார்ப்போம்.*

 *பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எ டுத்தரை யில் புனைவேன் சில் ல்லோர்*

 *தடியெடுக்க காணில் அதற்குளங் க லங்கி ஓடு வனித்  தரத்தேன் இங்கே*

 *முடி எடுக்க வல்லேனோ இறைவா நின் அ ருள் இளதே ல்முன்னே*

 *அடி எடுக்க முடியாதே அந்தோ இச்சிறி யே னால் ஆவது என்னே.*

 *இந்தப் பாடலை சற்று உள்நோக்கினால்*

 *சைவ சமயம் சார்ந்தவர்கள் மற்றும் சிவனடியார்கள் காலையில் குளித்து முடிந்தவுடன்*
 *அந்த ஈரத் துண்டு உடனையே நெற்றி மற்றும் உடலெங்கும் திருநீற்றை* *பூசிக்கொண்டு  பின்புதான் ஆடை அணிவார்கள்*

 *ஆனால் பெருமான் இந்த பாடல் குறிப்பிடுவது என்னவென்றால் "பொடி எடுக்கப் போய் மறந்து என்கிறார் "*

 *அதாவது தான் திருநீர் அணிவதை விட்டு விட்டதை அங்கே குறிப்பிடுகிறார்.*

 *அதுவும் தன் செயல் அல்ல இறைவன் செயல் என்று அடுத்த வரியிலேயே அதை குறிப்பிடுகிறார்.*

 *மேலும் வள்ளல் பெருமான் தனது சுத்த சன்மார்க்க அனுபவத்தை கூறும் பொழுது*

 *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்ரிடாஇயல் எனக்க ளித்தனை என்று சொல்லி,*

 *தான் சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் பெற்று இறைவனுடைய ஒளி உடலை பெற்றதையும் நமக்கு குறிப்பிடுகிறார்.*

 *அப்படி ஒளி தே கம் பெற்றவருக்கு நாம் எப்படி திருநீறு அணிய இயலும்?*

*என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது*

 *இதன் அடிப்படையில் பார்த்தோமேயானால் நமக்கு ஒரு தெளிவான முடிவு தெரிகிறது.*

 *வள்ளல் பெருமானுடைய திருவருவத்திற்கு திருநீறு இடுவது அவசியம் இல்லை என்பது.*

 *ஆனால் சமய வழிபாட்டில் இருந்து வந்த அன்பர்கள் திருநீறு அறிந்து கொள்கிறார்கள்.*

 *அதை நாம் பெரிய குறையாகவோ தவறு என்றும் சொல்லிவிட இயலாது.*

 *மேலும் ஆறாம் திருமுறையில் மற்றும் ஒரு பாடலில் வள்ளல் பெருமான் ஒரு கருத்தை இங்கு பதிவிடுகிறார் அதையும் காண்போம்.*

          *திரு அருட்கொடை என்ற தலைப்பில்.*
   💡💡💡💡💡💡    

 *ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நி ன் அருளமுதெ ன்*

 *கை வரச்செய்து உ ண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்த அணிந்தாய்*

 *சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்தருளிச்*

 *தெய்வம் என்று வளர்க்கின்றார் சிற்சபையில்  நடிக்கின்றாய்.*
💡💡💡💡💡💡💡💡
*இந்தப் பாடலின் படி பொருள் பார்த்தால்* *சைவ உணவு முறையில் இருப்பவர்கள் என்னை தெய்வம் என்று வணங்கும்படி* *செய்துள்ளாய். என்று குறிப்பிட்டுள்ளார்.*
 *பொதுவாக நமது சன்மார்க்கத்தில் உள்ளவர்களில்* *பெரும்பாலானவர்கள் சைவ சமயத்தை சார்ந்து தான் வந்திருக்கிறார்கள்.*
 *சிலர் சுத்த* *சன்மார்க்கத்தை உணர்ந்து அந்த நெறியில் மேல் அனுபவத்திற்காக பயணிக்கிறார்கள்*
💥💥💥💥🎪🎪🎪💥
 *ஆனால் பலர் சைவ சமயத்தைச் சார்ந்தே இன்னும்* *இருக்கிறார்கள். அவர்கள் வள்ளல் பெருமானை தெய்வமாகவே தான் வணங்குவார்கள். என்ற நிலை இருந்து கொண்டு தான் இருக்கும் என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவது போல் இங்கு உள்ளது.*

 *எனவே சுத்த சன்மார்க்கம் பேசுபவர்கள், மேற்படி சமயம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களை வேறுபாடாக கருதுதல் கூடாது.*
🎪💥💥💥💥💥🎪
 *ஏனென்றால் கொலை புலை தவிர்த்து வாழ்வதே மிகப்பெரிய வாழ்வியல் முறையாக இருக்கிறது. இந்தச் சூழலில் அவர்களை சமயத்தவர் என்று விலக்கி விட்டால் அது சரியான செயலும் அல்ல.*

 *எவ் உயிரையும் தம்முயிர் போல் என்னும் குணத்தை நாம் வருவித்துக் கொள்ள வேண்டும் என்று பெருமானார் கூறுகிறார்.*

*ஆனால் நாம் சன்மார்க்கத்துக்குள்ளேயே இரு பிரிவினராக பார்த்தால் எப்படி அந்த குணம் நமக்கு வரும்?*
💥💥💥💥💥💥💥
 *இனிமேலாவது சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை கருதாது பழக வேண்டும்.*

 *சுத்த சன்மார்க்கம் பேசும் அன்பர்கள், வெறுமனே பேச்சுடன்* *இருந்துவிடாமல்,*
💥💥💥💥💥💥
 *வள்ளல் பெருமான் கூறக்கூடிய அந்த அனுபவ நிலைகளை நோக்கிச் சென்று,* *அதாவது உணவு முறை மற்றும் ஒழுக்கங்களில் எல்லாம் தீவிரமாக கடைபிடித்து, வள்ளல் பெருமான் அடைந்த சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அடைய முயற்சி செய்தல் வேண்டும்.*
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
 *அதைவிடுத்து வேறுபாடு பேசி, ஒருவர் வை ஒருவர்* *கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து கொள்வது* *அவ்வளவு சரியல்ல.*
 *பொதுவாக இன்று சுத்த சன்மார்க்கம் பேசுவோர் பெருமான் கூறக்கூடிய அந்த உணவு* *ஒழுக்கத்தில் இல்லை.*
💡💡💡💡💡💡
 *எனவேதான் அவர்கள் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் ஒருவர் கூட இதுவரைக்கும் தேறவில்லை.*

 *எனவே இனிமேல் சுத்த சன்மார்க்க ம் பேசுபவர்கள் அனுபவ நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் .*

💥🎪🎪💥💥💥💥
 *சமயத்தில் இருந்து வந்த பெருமக்கள், சமய ஈடுபாடை குறைத்துக் கொண்டு சுத்த சன்மார்க்கநெறியை போற்றி வாழ முயற்சி செய்தல் வேண்டும்.*
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
  *திருநீறு தவிர்த்து மற்ற புறச் சின்னங்களை அணியாமல் இருப்பது மிகவும் நன்று.*



 *கிட்டத்தட்ட 1990 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சனை சன்மார்க்கத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தான் இந்த கட்டுரையை அடியேன் இப்பொழுது வெளியிட நேர்ந்தது.*
💡💡💡💡💡💡💡
 *நீங்களும் இதுபோன்று திருவருட்பா* *ஆதாரத்துடன்*
 *வெளியிடலாம்*

  *நமது கருத்துப் பரிமாற்றம்அனைவருக்கும் ஒரு பொதுவான அறிவு விளக்கத்தை தரும்படி இருக்க வேண்டும். வீண் வாதத்திற்காக எதையும் எழுதுதல் கூடாது.*

 *அன்புடன் வள்ளலார் வருகை சத்தியமூர்த்தி.*

💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு