ஞாயிறு, 12 டிசம்பர், 2021

என்மார்க்கம் நன்மார்க்கம் !

 *என்மார்க்கம் நன்மார்க்கம் !*


*என்மார்க்கம் நன்மார்க்கம் என்றும் என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்றும்  சொன்னவர் வள்ளலார் ஒருவரே !* 


*என்மார்க்கம் மற்ற மார்க்கங்கள் போல் பொய்யான மார்க்கம் அல்ல உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் தனித்தன்மை வாய்ந்த தனி மார்க்கமாகும் அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்னும் தனித்தன்மை வாய்ந்த  உலகப் பொது மார்க்கமாகும் என்கிறார் வள்ளலார். 


*உலக மக்களை அழித்துக் கொண்டு இருந்த துன்மார்க்கங்கள்  எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன்* *இனி எல்லா உலகும்  என்மார்க்கம் சன்மார்க்கம் ஒன்றே வழங்கும்* 


*வள்ளலார் பாடல்*!


*துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்* - 


*என்மார்க்கம்*

*நன்மார்க்கம்* என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து. 


*வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் அவசியம் தெரிந்து  கொள்ள வேண்டிய உண்மை இதுவேயாம்* 


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!* 


உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே

உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்


கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்

கரணம்எலாம் கலங்கவரும் மரணமும் சம் மதமோ


சற்றும் இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது

தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்


இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!* 


*மேலே கண்ட பாடலில் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் என்று  தெளிவாக சொல்லி புரிய வைக்கிறார் வள்ளலார்* 


*இவ்வளவு தெளிவாக சொல்லியும் சன்மார்க்கிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் தெரிந்து கொள்ளாமல் மறுட்டுலகில் இருட்டுலகில் மடிந்து கொண்டே உள்ளார்கள்*


 *இவ்வாறு மக்கள் மடிந்துகொண்டு உள்ளது ஆண்டவருக்கு ஏற்புடையது அல்ல*  *ஆன்மாக்கள் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை பெறவொட்டாமல் பொய்யான ஆன்மீக கொள்கைகளை மக்கள் மனதில் விதைத்து தடுத்துவிட்டார்கள் துன்மார்க்க பாவிகள்* அவர்கள் மனம் கன்மனமோ வன்மனமோ அறியேன் என்கிறார் வள்ளலார் 


*இந்த கொடுமையான வேதனையான நடைமுறையில் வழக்கத்தில் மக்கள் படும் அவத்தையான  துன்பம்  துயரம் அச்சம் பயம் மரணத்தில் இருந்து இனிமேல் தவிர்த்து கொள்ளலாம் என்னோடு சேர்ந்துவிடுங்கள் என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும்  சன்மார்க்கமாகும் என்கிறார்*


*ஆன்மாக்களின் உண்மை*!


*ஆன்மீகத்தின் அடிப்படை உண்மையானது ஆன்மாக்கள் ஆன்ம தேகத்தோடு இங்கு வந்து பஞ்சபூத தேகம் எடுத்து பலகோடி பிறவிகளைத் தாண்டி உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ளது* 


*இத்தேகத்தில் உடம்பை அழிக்காமல் உயிரைப் பிரிக்காமல் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று அருள்தேகமாக மாற்றி என்றும் எக்காலத்தும் அழியாமல் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதே பேரின்பசித்தி பெருவாழ்வு என்பதாகும்.* *இதுவே ஆன்மாக்கள் அடையும் அற்புதமான அருள் வாழ்க்கை முறையாகும்.*


*இந்த உண்மைத் தெரியாமல் கற்றவரும் கல்லாதாரும் மற்றும் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் என்று சொல்லப்படுபவர்களும்.வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் தெரிந்தவர்களும்  அவரவர்களுக்கு தெரிந்த ஆன்மீக மார்க்கங்களின் கருத்துகளை கொள்கைகளை எழுத்து வடிவிலும்  சிற்பங்கள் வடிவிலும் வண்ணங்களாகவும் வடிவங்களாகவும்  ஆலயங்களை மசூதிகளை சர்சுக்களை பிரமிடுகளை படைத்து மக்களுக்கு ஆன்மீகத்தின் குறுக்கு வழிகளைக் காட்டியுள்ளார்கள்* அதில் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் மக்கள் மாண்டு கொண்டே உள்ளார்கள்


*உண்மைக்கு புறம்பான தவறான வழிகளைக் காட்டியுள்ளதால் நேர்வழி தெரியாமல் எல்லோரும் பிறந்து பிறந்து இறந்து இறந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்*

*ஆகையால் முன் உள்ள ஆன்மீக வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரும் ஒன்றுகிடக்க ஒன்றை உளறிக்கொண்டே உள்ளார்கள் என்கிறார் வள்ளலார்*


*உணமையை  மறைத்தவன்* 


*வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற வள்ளலார் இறுதியாக சன்மார்க்க கொடி ஏற்றி மக்களுக்கு ஒரு பெரிய நீண்ட மகாஉபதேசம் செய்கிறார் அதில் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக  தெரிவிக்கிறார். அதில் சில பகுதிகள்*


*இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.*


  ஆன்மாக்களின் உண்மையும் கடவுளின்  உண்மையும் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள் என்கிறார்.  


*சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்*


*சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்*


*அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு*


என்பதை வெளிப்படையாக துணிச்சலோடு சொல்லுகிறார்.


எனவே நாம் இதுவரையில் இருந்தது போல் இனியும். வீண்காலம் கழிக்காமல் சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு