பால் சைவமா அசைவமா !?
*என் அறிவுக்கு கிடைத்த விளக்கம்*
பால் சைவமா ?
அசைவமா ?
சைவம் அசைவம் என்பதை விட தாவர உணவா? மாமிச உணவா ? என்பதே சன்மார்க்க கேள்வியாகும்.
இறைவனால் படைக்கப்படும் உயிர்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய் உடம்பில் இயற்பையால் மாற்றம் செய்து கொடுக்கப்படக் கூடிய உணவு தாய்ப்பால்தான்.இது எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவானதாகும்.
ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் தாய்ப்பால் குடிக்காது கொடுக்கவும் கூடாது. திட உணவு உட்கொள்ள ஆரம்பித்தால் திரவ உணவான பால் நின்றுவிடும்.
எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவான உணவு தாவர உணவாகும்..
பழக்கத்தின் காரணமாக.காட்டில் வாழும் துஷ்ட மிருகங்களும்.அறிவுபெற்ற மனிதர்களும் மாமிச உணவு உண்டு பழகி விட்டார்கள்.
பல மதங்களும் மாமிச உணவு உட்கொள்ள அனுமதித்து உள்ளன.ஆனால் நம் இந்திய நாட்டில் மட்டுமே சைவம் அசைவம் என பிரித்தார்கள். *இறைவனை தொழுவதற்கு மாமிசம் உண்ணக்கூடாது என்றும் அதை தீட்டு என்றே ஒதிக்கி வைத்தார்கள்* .
இன்று சைவ சமயமும்.
வைணவ சமயமும்.பின்பற்றும் மனிதர்களில் ஒருசிலர் பழக்கத்தின் காரணமாக மாமிசம் உண்கிறார்கள்.
வள்ளலார் கொள்கையை பின்பற்றும் சன்மார்க்கிகள் எங்கு வாழ்ந்தாலும் மாமிசத்தை உண்ணமாட்டார்கள் என்பது உறுதியானதாகும்.
திருவள்ளுவர் வள்ளலார் போன்ற ஞானிகள் மட்டுமே மாமிசம் உண்பவர்களை கடுமையாக சாடுகிறார்கள்.
ஒரு உயிரை உணவுக்காக கொன்று உண்பதும். இறந்த உடம்பை உண்பதும் ஆன்மாவின் அறிவை மழுங்கச் செய்யும் உணவு என்பதால் மாமிச உணவை உட்கொள்ளக் கூடாது என்று *வள்ளுவர் வள்ளலார்* மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளார்கள்.
ஏன் என்றால் ? *உயர்ந்த அறிவுபெற்ற மனிதன் மாமிசத்தால் இறைவனிடம் அருளைப் பெறும் வாய்ப்பை இழந்து விடுவார்கள்*.
நம் சிந்திக்க வேண்டும்.
பால் வெண்ணிறமானது. தூய்மையாக்கப்பட்டது. இரத்தம் கலவை இல்லாதது..
இரத்த கலவை உள்ள எந்த உயிர் இனங்களையும் கொன்றோ அல்லது இறந்து போன மாமிசத்தை உண்ணுவதோ கூடாது என்பதாகும்.
அருள் பெறும்வரை உடம்பையும் உயிரையும் நீட்டிக்க தாவர உணவு தேவைப்படுகிறது.
அருள் பெறுவதற்கு எந்த உணவுமே தடைதான். என்பதை சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பால் சைவமா அசைவமா என்பதைவிட ஏகதேசம் பால் தேவைதான்.தொடர்ந்து பால் அருந்தக் கூடாது என்கிறார் வள்ளலார்.
நாம் இறை உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் எதுதேவை எது தேவை இல்லை என்பதை நம் அறிவே நமக்கு விளக்கி காட்டும்
நன்றியுடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
6 கருத்துகள்:
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜயா தங்கள்
கருத்திற்கு நன்றி 🙏
பசும்பால் பயன்படுத்தலாம் என்பதை அகவல் 709 மூலம் அறியலாம். அருள்அடையும்போது உணவு தேவை குறைந்து போகும் அல்லதுஅற்றுப்போகும்.
*709". "பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே*
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
I also agree with your statement Iyaa. Nandri
"நாம் இறை உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் எதுதேவை எது தேவை இல்லை என்பதை நம் அறிவே நமக்கு விளக்கி காட்டும்"
பால் அசைவம் என்பதை ஏற்கிறேன்,ஆனால் அதனை சைவம் என்பதனை முழுமையாக மறுக்கிறேன்..
உயிர் என்பது நடமாடும், நடமாடாத, அல்லது இரத்தம் இரத்தமில்லாத ஒன்றை பிரித்துக் குறிப்பிடவில்லை! கொன்றால் எதுவுமே உயிர்தான்.ஒரு உயிரை கொன்று, அதனை சாப்பிட்டுத்தான் நாம் உயிர் வாழ்கிறோம்.தாவரமாக இருந்தாலும் அதுவும் உயிர்தான்.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு