ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

சுத்த சன்மார்க்கத்தார் கடமைகள்.

 🙏🔥

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி 

தனிப்பெருங்கருணை 

அருட்பெருஞ்ஜோதி 


         *🏵️🔥சுத்தசன்மார்க்க சங்கத்தார்களின் இறப்புக்குப்பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளாக நமது வள்ளல் பெருமான் வகுத்தவைகள் 🔥🏵️*

🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻 

       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உயிர் உறவுகளாகிய சகோதரிகள் அனைவருக்கும் பணிவான வந்தனம்;

  

 *மேலே உள்ள தலைப்பிற்குரிய நெறிமுறைகள் அனைத்திற்கும் ஒரேவரியில் பதில்சொல்ல வேண்டுமானால் "தயவு தயவு தயவு " இதுதான் காரணமாகும்;* 


எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் *பொதுவான வேதமாகிய அறிவுநூலின் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்றவர்களே நமது சுத்த சன்மார்க்க  சங்கத்தார்கள்;* 🌻


அதாவது,

தாச மார்க்கம், 

சற்புத்திர மார்க்கம் ,

சகமார்க்கம் ,

சன்மார்க்கம் என்ற நான்கில் நான்காவதாகிய சன்மார்க்கத்தை கடைபிடிக்கின்றவர்களே நமது சுத்த சன்மார்க்க சங்கத்தவர்கள் என்பதாகும் *முதலில் இந்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.👏* 

*************************

 *ஜீவ நியாயப்படி மேற்கண்ட மார்க்கங்களின் தன்மையாவது என்னெனில்....* 

 

*1-தாச மார்க்கம் ( அடிமையாக பாவித்தல்).* 

 *2-சற்புத்திர மார்க்கம் ( பிள்ளையாகப் பாவித்தல்).* 

 *3-சக மார்க்கம் (தோழனாக பாவித்தல் ),* 

 *4-சன்மார்க்கம் ( தன்னைப்போன்றே பாவித்தல்).* என்பனவாகும்;

 *ஆதாரம்; திருவருட்பா உரைநடை பக்கம் 403*🌻 

**************************

 *மேற்கண்ட இந்த சன்மார்க்கமும் 3-வகைப்படும் அவை ;* 

*1-சமய சன்மார்க்கம்,* 

*2-மத சன்மார்க்கம்,* 

*3-சமரச சுத்த சன்மார்க்கம் என்பனவாகும்;* 


*சத்துவ குணமுடையது சமய சன்மார்க்கம் ,* 

*சத்துவகுணம் என்பது  என்னவெனில்,* 


*1-கொல்லாமை,* 

*2-பொறுமை,* 

*3-சாந்தம்,* 

*4-அடக்கம்,* 

*5-இந்திரிய நிக்கிரகம் ,* 

*6-ஆன்மாவின் இயற்கை குணமாகிய ஜீவகாருண்யம் என்ற இந்த ஆறு குணமும் அமையப் பெற்றதுதான் சத்துவகுணமாகும்;* 


 *மேற்கண்ட சத்துவகுணத்தின் வாச்சியானுபவம் பெறுதலே சமய சன்மார்க்கமாகும்;* 🌻


 *மதசன்மார்க்கம் என்பது சமய சன்மார்க்கத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதலாகும்;* 🌻

      

அதாவது,

 *சத்துவகுண அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது சமய சன்மார்க்கம்,* 

 

*குணமற்று நிர்குண லட்சியம் செய்வது மதசன்மார்க்கமாகும் ;* 🌻

 *ஆதாரம் திருவருட்பா உரைநடை பக்கம் ; 403* 🌻

*************************  

இந்த சத்துவகுண, நிற்குணலட்சியம் செய்வதற்கு மார்க்கம் நான்காக உள்ளது, அவைதான் மேற்சொன்ன ,

தாச,சற்புத்திர,சக,சன்மார்க்கங்களாகும்;

 *இவை மதசன்மார்க்கத்தின் முடிபு;* 


 *இந்த மதசன்மார்க்கத்தின் அதீதம்தான் சமரச சுத்தசன்மார்க்கத்தின் ஆரம்பமாகும்;* 🌻


*மேற்கண்ட சமயமத சன்மார்க்கத்தில் கண்ட குணம், நிர்க்குணம்,வாச்சியார்த்தம்,லட்சியார்த்தமாகிய அனுபவங்கள் கடந்தது சுத்தசன்மார்க்கத்தின் அனுபவமாகும்;* 🔥🌼

 


 *சுத்தசன்மார்க்க சங்கத்தில் இருப்பவர்களுக்கு அடிப்படையே சன்மார்க்கம் என்ற நான்காவது மார்க்கத்தின் தன்மையான* 


*தன்னைப்போன்றே பிறரைப் பார்க்கும் தன்மையுடைய மிகுந்த தயாகுணம் நிறைந்தவர்கள் என்பதாகும்* 


*அதாவது சத்துவகுணமே முழுவதும் நிறைந்து  கருணையே வடிவாய் ஆன்மநேய உணர்வோடு கடவுளால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும்  தன்னுயிர்போல் காணும் உயிர்இரக்கம் கொண்டவர்கள் என்பதாகும்;* 🌻


 *நமது சுத்தசன்மார்க்க லட்சியம் என்பது* ஆன்மலாபமாகிய கடவுளுடைய பூரண அருளைப்பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும்

எத்துணையும் தடைபடாத பேரின்பசித்திப் பெருவாழ்வைப்பெற்று மரணமிலாமல் இவ்வுலகில் அருள்வாழ்க்கை வாழக்கூடியதாகும்;

     

 *அப்படி என்றால்,* 

 *இந்த சுத்தசன்மார்க்க சங்கத்தில் அங்கதினர்களாக இருப்பவர்களாகிய நாம்.....,* 


மனிதநேயம் கடந்து 

ஆன்மநேயம் உடையவர்களாகவும், 

சத்துவ குணங்கள் முழுவதும்

நிறைந்தவர்களாகவும் ,


பிற உயிர்களின் துன்பங்களை தனது துன்பங்களாக கருதுபவர்களாகவும்,


அணுவளவும் சினம்,காமம் அடையாதவர்களாகவும், 


மற்றவர்கள் அறியாமையில் தமக்கு தீங்கு செய்தாலும்  பழிவாங்கும் எண்ணம்கொள்ளாமல் அவர்களை சகித்துக்கொள்ளும் தன்மையுடைய

தயவையே பிரதானமாகக் கொண்டவர்களாகவும்,


எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே உண்மைக் கடவுள் என்றும் , அந்த உண்மைக் கடவுள்மீது எக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் மாறாத அன்பு கொண்டவர்களாகவும்,


சுத்தசன்மார்க்க நெறியினின்றுப் பிறழாமல் வாழ்பவர்களாகவும்,


 *நமது பெருமானின் ஒவ்வொரு வார்த்தைகளையும் அருள்நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகளாகக் கொண்டு.,* 


சமய மத சடங்குகள் மற்றும் அவற்றின்  ஆச்சாரங்களை முழுவதும் கைவிட்டவர்களாகவும்,

  

 *நமக்கு நமது வாழ்நாளில் நடக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தும் நமது ஆண்டவரின் திருவருளாலேயே நடக்கின்றது என்று கனிவுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையவர்களாகவும்,* 


சன்மார்க்கத்தையும் சன்மார்க்கத்தில் பயணிக்கும் நம்மையும்  நமது அருள்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானே வழி நடத்துகின்றார்கள் என்று பெருமான்மீது  முழுநம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருந்து..,

         

 *நம்மை நமது ஆண்டவர் இப்பிறவியில் இல்லாவிடினும் இனி வரும்பிறவியில் பேரின்ப பெருவாழ்வில் நம்மை வாழவைப்பார்கள் என்ற முழுநம்பிக்கையில்* 

 *சன்மார்க்கக் கொள்கையிலிருந்து மாறாமல் நின்று..* 


 *நம்மால் நமது நெறிக்கு ஒரு கேடு வந்திடாமல் சன்மார்க்க ஒழுக்கத்தின்படி தூய்மையுடன் வாழ்ந்திடல் வேண்டும்;🌻* 


 *அப்படி சுத்தசன்மார்க்க லட்சியத்தோடு வாழ்கின்ற சன்மார்க்க சங்கத்தார்கள் , தமது பக்குவ குறைவால்  இந்த உடலை இழக்க நேரிடும்போது...,* 


 *இறந்தாரை எழுப்புகின்ற மார்க்கமாகிய நமது சன்மார்க்கத்தை முன்னின்று நடத்துகின்ற நமது பெருமான்* இறந்த நமது கணவன் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் முதலிய யாராக இருந்தாலும் அவர்களை பெருமான் விரைந்து எழுப்புவித்து இப்பரந்த உலகில் எங்கோ ஓர் இடத்தில் பிறப்புவித்து மீண்டும் சன்மார்க்கத்திலேயே தொடரச்செய்வார்கள் என்ற முழுநம்பிக்கையுடனும்... 


 *மற்றும் சன்மார்க்க சங்கத்தில் இருந்து இறந்தவர்கள் பற்பலரும்  சதாசர்வகாலமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தமது சித்தத்தில் வைத்து  வாழ்ந்துவந்த சித்தசாமிகள் என்பதனால்* அவர்களை மீண்டும் திண்மையுடன் நமது பெருமான் எழுப்புவித்து அருள்வார்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடனும்,


தயவே குணமாக கொண்டநாம் இறந்தவர்கள் உடல் நெளிய இரக்கமின்றி விறகிலிட்டு நெருப்பினால் எரித்து  சாம்பலாக்குவது நமது தயாகுணம் அல்ல.. , 

அப்படி எரிப்பது நமது சத்துவகுணத்திற்கும் உகந்தது அல்ல..,


 *இதனால் தயாவிருத்தியை லட்சியமாகக்கொண்டு கருணை நன்முயற்சியில் வாழ்ந்துவந்த நாம்..* *இதுவரை சேர்த்துவைத்த தயவு என்ற நற்குணம்  பாழ்பட்டு போகும் என்பதாலும் ,* 

  

குணம்புதைக்க அடக்கம் கொண்ட உயிர்களின் தேகத்தை

பிறர் சொல்லக்கேட்டு எரித்திடவேண்டும் என்று நினைப்பதுவும் நமது தயாகுணம் அல்ல என்பதை உணர்ந்து.. 


இறந்தவர்களை தீயிலிட்டு எரிக்காமல் பஞ்சபூதத்தில் ஆன இந்த தேகம் மண்தன்மை கொண்டதால் , அம்மண்ணிலேயே புதைத்திடல் வேண்டும்;


மற்றும் சுத்தசன்மார்க்கத்திற்கு தடைகளாக இருக்கின்ற சமய மதத்தில் கடைபிடிக்கின்ற சடங்கு , ஆச்சார வகைகளை நமது பெருமான் கூறியபடி முழுமையாக தவிர்த்திடல் வேண்டும்;

   

 *அந்த வகையில் கணவன் இழந்தால் இறந்தவருடைய மனைவிக்கு தாலிவாங்குதல் என்ற கொடுஞ்சடங்கை செய்தல்கூடாது,* 

  

 *இதற்கும் காரணம் தயவேயாகும்;* சுத்தசன்மார்க்கத்தில் வாழ்கின்ற நமக்கு எல்லாச்செயல்களும் நமது ஆண்டவருடைய திருவருவாளலேயே நடக்கின்றது என்ற முழுநம்பிக்கையுடன் வாழ்ந்துவரும்போது.. ,


முன்வினையாலோ அல்லது நம்மை பக்குவிக்கும் பொருட்டு திருவருள் செயலாலோ நம்முடன் வாழ்ந்த நமது கணவன் இறக்க நேரிட்டது என்ற பக்குவத்திலும், 


மற்றும் நமது 

பெருமான் சத்திய வார்த்தையின்படி நமது கணவரை ஆண்டவர் விரைந்து எங்கோ ஓர் இடத்தில் சுத்தசன்மார்க்க விருத்திக்காக எழுப்புவித்தருள்வார்கள் என்ற முழுநம்பிக்கையிலும், 


 *தமது கோலத்தை அலங்கோலமாக்கி ஆண்டவர்மீது நம்பிக்கை இழந்தது போன்ற அவநம்பிக்கைக்குரிய செயல்களை ஒருகாலமும் செய்தல்கூடாது;* 🌻

  

மேலும், 

கணவனை இழந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அப்பெண்ணுக்கு சுற்றி இருக்கின்ற உற்றார் பெற்றார்கள் சிறிதும் தயவே இல்லாமல் வெந்தபுன்னில் வேலைப் பாய்ச்சுவது போன்று , 

இரக்கமற்று நமது தயாகுணத்தை இழந்து.. 


கணவனை இழந்து நிர்க்கதியாக பரிதவித்து நிற்கும் அப்பெண்ணிற்கு மேலும் தாட்சண்யம் இல்லாமல் ஆச்சாரம் என்ற பெயரில் துயரச்சம்பவங்களை ஏற்படுத்தி *சமுதாயத்தில் அப்பெண்ணை கணவனை இழந்த பெண் என்று அலங்கோலத்தால் பிரித்துக்காட்டி  துயரப்படுத்துதல் தயவற்றகாரியம்* என்றும்...


இதில் நமது ஆண்டவருக்கு சிறிதும்சம்மதம் அல்ல என்பதையும் அறிந்து, *அந்தப்பெண்ணிற்கு தயவுடன் தன்னம்பிக்கையைக் கொடுத்து அத்துயரத்தில் இருந்து நீங்க ஆறுதல்கூறுதல் வேண்டுமே தவிர...* 


 *தாலிவாங்குதல்  போன்ற இரக்கமற்ற செயல்களை, சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில்* கண்மூடித்தனமாக செய்கின்ற கொடுஞ்செயல்கள் தயவைப் பிரதானமாகக்  கொண்ட நமது சன்மார்க்கத்திற்கு உகந்தது அல்ல;🌻


 *அடுத்து இறந்தவர்களுக்காக செய்கின்ற கருமகாரியங்களும் செய்தல்கூடாது ,* 

ஏன் என்றால் சுத்தசன்மார்க்கத்தில் சமய மதச்சடங்குகள் என்பது கூடவே கூடாது ,

அவை நமது நெறியின் கொள்கைகளை பின்பற்றவிடாது மேலும் நமது தயவை விருத்தி செய்வதற்கு தடையை உண்டுசெய்யும் என்பது நமது பெருமானது வாக்கு;

   

சுத்தசன்மார்க்கத்திலிருந்து இறந்தவர்களையெல்லாம் நமது பெருமான் எழுப்புவித்து உலகம்முழுவதும் சுத்த சன்மார்க்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் எழுப்பிக்கொண்டுள்ளார்கள் ; (பெருமானது சத்திய வார்த்தை இதில் ஐயம் கூடாது )


 *அப்படி இருக்கும்போது மீண்டும் உயிர்பெற்று எழுந்து வருபவர்களுக்கு கருமகாரியம் செய்வது நமது சன்மார்க்கத்தில் பெருமான்மீது இருக்கும் நம்பிக்கையை இழந்ததாகிவிடும்;* 🌻


அதற்கு உபகாரமாக இறந்தவர்கள் இல்லத்தில் *தமக்கு ஏற்ற தினத்தில் நமது உற்றார் உறவினர் மற்றும் வறியவர்களை அழைத்து அவர்களுக்கு அன்னம்பாலித்தல் வேண்டும்;* 


ஆகலில் சுத்தசன்மார்க்கத்து சங்கத்தார்கள் *தமது வாழ்வில் நடக்கின்ற அனைத்து இன்பதுன்பங்களும் நமது ஆண்டவருடைய கருணையால் ஏதோ ஒரு நன்மைக்காகவே நடக்கின்றுது* என்ற திடமான நம்பிக்கையுடன் சன்மார்க்க நெறிகளை கடைபிடித்து சமய மதச்சடங்குளை பின்பற்றாமல்,

     

 *சன்மார்க்கத்தில் கணவனை இழந்துநிற்கும் பெண்களின் கோலத்தை அலங்கோலப்படுத்திடாமல் ,*  


தனது கணவனை இழந்தும் மேலும் தனது குழந்தைகளின் எதிர்கால வாழ்கையையே கேள்விக்குறியாக்கி தவித்து கொண்டிருக்கும்  அவர்களை தனிமைப்படுத்தும் வண்ணம் , தயவற்ற இரக்கமற்ற சடங்குகளைச் செய்து அலங்கோலப்படுத்தி அவமதிக்காமல் , 


அவர்களுக்கு நமது ஆண்டவர் துணைநிற்பார் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்து , அவர்களை பழைய கோலத்திலேயே வாழ்வித்திடல் வேண்டும்..


 *சன்மார்க்கம் என்றாலே தயவு , தயவு என்றாலே சன்மார்க்கமாகும்;* 

  

 *அந்த தயவு இல்லாமல் எதுசெய்தாலும் , அது சுத்தசன்மார்க்கச் செயல் ஆகாது;* 

 

 *அதனால்தான் நமது பெருமான் தயவுடையவர்களே சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்று அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் சொல்லுகின்றார்கள்;* 

 *மேற்கண்ட தயவற்ற, சிறிதும் இரக்கமற்ற செயல்களைச் செய்தால் அவர்கள் சன்மார்க்கத்தில் இருந்தாலும் நமது பெருமான் கூற்றுப்படி சன்மார்க்கம்  சாராதவர்களேயாகும்;* 🔥🌼🌻👏

    

....தயவான நன்றிகள்👏

.....வள்ளல் மலரடிப் போற்றி போற்றி👏

.......எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க👏

.......பெருமான் துணையில்👏

.........வள்ளல் அடிமை👏

...........வடலூர் இரமேஷ்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு