வெள்ளி, 22 மே, 2020

சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள் !

*சுத்த சன்மார்க்க ஒழுங்கங்கள்* !

 சன்மார்க்க பெருநெறி
  ஒழுக்கங்ள்

மனித தேகம் நான்கு பிரிவுகளாக பின்னப்பட்டுள்ளன.

1.அகம்.2. அகப்புறம். 3.புறம்.4. புறப்புறம் என்பவைகளாகும்.

1.அகம் என்பது ஆன்மா இயங்கும்
இடம்.

2.அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இயங்கும் இடம்.

3.புறம் என்பது கரணங்களான மனம்.புத்தி.சித்தம்.
அகங்காரம்.உள்ளம் போன்ற கருவிகளின் இயக்கம் உள்ள இடங்களாகும் .

4. புறப்புறம் என்பது இந்திரியங்களான கண்.காது.வாய்.மூக்கு.உடம்பு போன்ற கருவிகளின் இயக்கம் உள்ள இடங்களாகும் .

இந்த நான்கு பகுதிகளை தவறான வழியில் செலுத்தாமல். நேர் வழியில் செலுத்த வேண்டும் என்பதே வள்ளல்பெருமான் சொல்லிய ஒழுக்கங்கள் நான்கு என்பவைகளாகும் .

அவை :--
*இந்திரிய ஒழுக்கம்* .
*கரண ஒழுக்கம்*.
*ஜீவ ஒழுக்கம்*.
*ஆன்ம ஒழுக்கம்*  என்பவைகளாகும்.

மனித தரத்தில் இந்திரிய ஒழுக்கம். கரண ஒழுக்கம் ஆகிய இரண்டையும் முழுமையாக கடைபிடித்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பார்வை நம்மீது தொடர்ந்து. ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் இரண்டையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *போனஸாக* வழங்கி விடுவார்.

மேலும் பூத உடம்பையும்  உயிரையும்.ஆன்மாவையும் *அருள் ஒளியால் வேதித்து* ஒளி உடம்பாக மாற்றம் செய்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விடுவார்.

நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் !
 *1*இந்திரியஒழுக்கங்ள்*

1 கொடிய சொல் செவி புகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்
2. அசுத்த பரிச மில்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல்
3. குருரமாகப் பாரா திருத்தல்
4. உருசி விரும்பா திருத்தல்
5. சுகந்தம் விரும்பா திருத்தல்
6.இன் சொல்லாடல்
7. பொய் சொல்லாதி ருத்தல்
8.ஜீவ இம்சை நேரிடும் காலத்தில் எவ்வித தந்திரத்திளாவது தடை செய்தல் .
9.பெரியோர்கள் எழுந்தளி யிருக்கும் இடங்களுகுச் செல்லுதல்
10. ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாச ஸ்தலங்களிலும் திவ்ய திருப் பதிகங்களிலும் சஞ்சரித்தல்
11. நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலலாதி செய்தல்
12. மித ஆகாரம் செய்தல்
13. மித போகம் செய்தல்
14. மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கி ரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்தல்
15. மந்ததரம் சுக்கிலத்தை அக்கிரம அதிக் கிரமத்தில் விடாது நிற்றல்
16.தீவிரம் :எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்
17.இடைவிடாது கோசத்தை கவசத்தால் மறைத்தல்
18. இதுபோல் உச்சி, மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்
19.சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்
20. அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியனவாகும்.

 *2.கரனஒழுக்கம்*
1. மனதை சிற்சபை (ஆன்ம ஒளி இருக்கும் இடம்) இடத்தே நிறுத்தல்,  முதலில் புருவமத்தியில் நிற்கச் செய்தல்
2. துர்விஷயத்தைப் பற்றாது இருக்கச் செய்தல்
3. பிறர் குற்றம் விசாரியாது இருத்தல்
4. பிறர் மீது கோபியாதிருத்தல்
5.தன்னை மதியாதி
 ருத்தல்
6. இராக்காதி நீக்கி  இயற்கைச் சத்துவ மயமாதல்
7. தனது தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் முதலியன.

 *3* . *ஜீவ ஒழுக்கம்*
ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர் களிடத்திலும் ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி எல்லவரும்   தம்மவர்களாய்ச் சமத்தில் கொள்ளுவது .

 *4* *ஆன்ம ஒழுக்கம்*
1. யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும்,
அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறக் கண்டு எவ்விடத்திலும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் .

மேலே கண்ட ஒழுக்கத்திற்கு பெயர் சமரச சுத்த சன்மார்க்க சங்க பெருநெறி ஒழுக்கமாகும்.

மேலே கண்ட ஒழுக்கங்களை கடைபிடிக்காமல் செய்யும் செய்கைகள் அனைத்தும் மரணத்தை தழுவும் செயல்களாகும்..

*வள்ளல்பெருமான் கடைபிடித்து மரணத்தை வென்ற. ஒழுக்கங்களைத்தான் மக்களுக்குத் தெரிவித்து உள்ளார்*.

மேலே கண்ட ஒழுக்கத்தை பின் பற்றாமல். நெற்றி நிறைய விபூதி அடித்துக் கொண்டு வழிபடுதல்.
ஜீவ காருண்யம் செய்தல்.
திருஅருட்பா படித்தல்.
பாராயணம் செய்தல்.
மனப்பாடம் செய்தல்.
மேடைகளில் பாடுதல்.
மேடைகளில் அடுக்கு அடுக்கான வசனங்களில் பேசுவது.

மேலும் திருஅருட்பாவிற்கு அவரவர்களுக்கு தெரிந்த விளக்கத்தை சொல்லி மக்களை குழப்புதல். அவற்றை புத்தகமாக வெளியிடுதல்
போன்ற செயல்களினால்  எந்த பயனும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

மேலும் வாட்ஸ்அப்.பேஸ்புக்கில் குரூப் அமைத்துக்கொண்டு சத்விசாரம் என்ற பெயரில் வாக்குவாதம்.விதண்டாவாதம்.சண்டை சச்சரவுகள் செய்து கொள்ளுதல்  போன்ற செயல்கள் அன்றாடம் நடந்து கொண்டுதான் உள்ளது என்பது அனைவரும் அறிந்த்தே.

என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

எனவே நாம் கடைபிடிக்க வேண்டியது ஒழுக்கம் ஒழுக்கம் ஒழுக்கம் மட்டுமே.

வள்ளலார் சொல்லி உள்ள .சாகாக்கல்வி கற்று.மரணம் இல்லாப் பெருவாழ்வு  வாழ்வதற்கு அடிப்படையானது சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் என்பதை அறிந்து.தெரிந்து. புரிந்து கடைபிடித்து மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

*வள்ளலார் பாடல்* !

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும்அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழிலதாகும் இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந்து உலகம்எல்லாம்

மா காதலுற எலாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாம்
மன்னும் இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபு என்று உரைத்தகுருவே

தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த
சிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.!

மேலே கண்ட பாடலின் சிறுவிளக்கம்.

இந்திரிய ஒழுக்கம் ..சாகாக்கல்வி கற்பதாகும்.

கரண ஒழுக்கம் ..ஒரேக்கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதாகும்

ஜீவ ஒழுக்கம் ..மலம் ஐந்தையும் வெல்லும் வல்லபமாகும்.

ஆன்ம ஒழுக்கம் ..ஐந்தொழில் வல்லபத்தை அடைந்து. பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று வாழ்வதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

1 கருத்துகள்:

21 செப்டம்பர், 2023 அன்று 7:29 AM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

அதி உத்தமம்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு