செவ்வாய், 26 மே, 2020

மரணம் இல்லாப் பெருவாழ்வுவ!

மரணம் இல்லாப் பெருவாழ்வு !

ஒளி உடம்பு பெறும் கலை !

சாகாத்தலை.!
வேகாக்கால்!
போகாப்புனல்!
என்பதாகும்.இந்த மூன்று கலைகளையும் கற்று தெளிந்து தேர்வு பெற்றால் மரணத்தை வென்று விடலாம்.

மரணம் இல்லாப்                             
பெருவாழ்வில் வாழும் சாகாக் கலையைக் கற்று மரணத்தை வென்றவர்.உலகிற்கு கற்றுத் தந்தவர் வள்ளலார்.!

மரணம் இல்லா பெருவாழ்வு என்பது பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட மனித உடம்பை மரணம் அடையாமல். ஒளி ஒலி அணுக்களாக மாற்றம் செய்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

அதாவது  பரப்பிரகாசம்  பரநாதமாக. காற்று அறியா தீபம் போல் .இந்த அசுத்த பூத காரிய கிடையாது .சுத்த.பிரணவ.ஞான தேகமாக
வேதியல் மாற்றம் போல் உரு மாற்றம் அடைய செய்விப்பதே சாகாக் கலை.சாகாக்கல்வியாகும்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதை அறியாத ஆன்மீக சிந்தனையாளர்கள். வள்ளலார் வாழ்க்கை முறையை அறியாதவர்கள். திருஅருட்பாவை முழுதும் படிக்காதவர்கள்.வள்ளலார் மீது தவறான் கருத்துக்களை அக்காலத்தில் அள்ளி எறிந்தார்கள்.

அவற்றிற்கு துணையாக வள்ளலார் உடன் இருந்தவர்களும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளார்கள்.காரணம் சாதி சமய மதங்களின் மேல் பற்று உள்ளவர்கள்.வள்ளலாரிடம் எதாவது சித்துகளை கற்றுக் கொள்ளலாம் என சுயநல சிந்தனையுடன் இருந்தார்கள்.

எனவேதான் வள்ளலார் சொன்னார்.இதுவரையில் என்னுடனே இருந்தும் பழகியும் நான் சொல்வதை ஒருவரும் புரிந்து கொள்வாரில்லை .சுத்த சன்மார்க்கம் என்றால் ஒருவரும் தெரிந்து கொள்வாரில்லை. மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் அறிந்து கொள்வாரில்லை என்று உள்ளும் புரமும் வேதனை அடைகிறார்.

உண்மைக் கடவுள!

எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! தான்
எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை அறிவால் தெரிந்து கொண்டால் மட்டுமே உண்மை தானே விளங்கும்.!

மனிதப் பிறப்பு எடுத்த நாம் எங்கு இருந்து வந்தோம்.மீண்டும் எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியாமல் சாதி.சமய.மதக் கொள்கைகளை கடைபிடித்து .இவ்வுலகில் வாழ்ந்து மரணம் அடைந்து முன் பின் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இந்த உடம்பை விட்டு பிரிந்து விடுகின்றோம். .

நம் உடம்பு கீழே செல்ல வேண்டுமா ? அல்லது மேலே செல்ல வேண்டுமா என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நம் உடம்பு கீழே சென்றால் அதற்கு மரணம் என்று பெயர் .உடம்பு அழியாமல் அருளால் ஓளிதேகமாக மாற்றி மேலே சென்றால் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர்.. .மேலே மட்டும் செல்வதில்லை.எங்கு வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் ஊடுருவி செல்லும் அருள் ஆற்றல் பெற்ற ஒளித் தேகத்திற்கு மட்டுமே உண்டு...

அந்த ஒளிதேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தடுக்க முடியாது.

பஞ்ச பூதங்கள் எல்லாவற்றையும் தாங்குகிறது என்று சொல்லுகிறார்கள் அது உண்மைதான் ஆனாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் எல்லாவற்றையும்.தாங்கி கொண்டும் இயக்கிக் கொண்டும் உள்ளவர்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஏகதேச அருள் ஆற்றலால். பஞ்சபூத உடம்பை தாங்கிக் கொண்டும் இயக்கிக் கொண்டும்  உள்ளது ஆன்மா என்னும் சிறிய உள் ஒளியாகும்.ஆன்மா இல்லையேல் உயிரும் உடம்பும் இயங்காது.

அதேபோல் எல்லா உயிர்களையும் ஆன்மாக்களையும்  தாங்கிக் கொண்டும் இயக்கிக்கொண்டும் உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் தனிப்பெருங்கருணை என்ற பேரொளியாகும் என்னும் உண்மையை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் மேல்நோக்கி வளரும் குணம் உடையது !

உயிர் உள்ள பொருள் அனைத்தும் மேல் நோக்கித்தான் வளருகின்றது..

உயிருக்கும் ஆன்மாவிற்கும் எடை(கணம்) வெயிட் இல்லை புவி ஈர்ப்புத் தன்மை கிடையாது

பஞ்ச பூத உடம்பிற்கு எடை அதாவது கணம் உண்டு புவிஈர்ப்பு தன்மை உண்டு

எடை இல்லாத உடம்பு மண்ணிற்குள் போகாது. எனவே தான் கணம் உள்ள பஞ்ச பூத அணுக்களான.ஆணவம்.கன்மம்.மாயை.மாமாயை.பெருமாயை என்னும் மலங்களால் பின்னப்பட்ட. மல உடம்பை மலம் இல்லாத  அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.அதுவே மரணம் இல்லாத பெருவாழ்வாகும்.

பூத உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிவதுதான் மரணம் என்பதாகும்.உடம்பு மண்ணுக்குள் கலந்துவிடும். ஆன்மாவும் உயிரும் அதன் நல்வினை.தீவினைக்குத் தக்கவாறு வேறு உடம்பு எடுத்துக் கொள்ளும்.

எடை கணம் (வெயிட்) உள்ள உடம்பை எடை கணம் வெயிட்  இல்லாமல் ஆக்கும் வழியை சொல்லித் தருவதுதான் சாகாக்கலை என்பதாகும்.

பஞ்ச பூத கருவிகளை தாங்கி வாழும் ஆன்மா கருவிகள் இல்லாமல் ஓளி தேகம் பெற்று வாழும் வகையைக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கு சாகாகல்வி என்று பெயர் வைத்தார் வள்ளலார்.

பஞ்ச பூத கருவிகள் இல்லாமல் ஆன்மா அருள் ஒளி தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னிடம் சேர்த்துக் கொள்வார்.

எடை உள்ள உடம்பை, எடை இல்லாத (ஆகாயம் போல்) உடம்பாக மாற்றிக் கொள்வது எப்படி ?

அருள் ஒளிக்கு எடை  இல்லை ,அதுபோல் உடம்பையும் அருள் ஒளியாக மாற்றிக் கொண்டால் கணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லும் ஆற்றல் அருள் ஒளிபெற்ற  ஆன்மாவிற்கு உண்டு... *அதற்கு ஆன்மதேகம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்*.

இதைத்தான்
ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம் நல்கிய நாயகனே என்கிறார் வள்ளலார்..ஒளி உடம்பிற்கு ஜீவ சமாதியோ மரணமோ மறுபிறப்போ.முக்தியோ கிடையாது.

ஒளி என்பது சாதாரண .அக்கினி.சூரியன்.சந்திரன்.
நட்சத்திரங்கள் போன்ற வெளிச்சம்  அல்ல .அது ஆற்றல் மிகுந்த அருள் ஞான ஒளி என்பதாகும்.

அது சூடும் தரும் ஒளி அல்ல அது சுடாத ஆற்றல் என்னும் அருள் சித்தி பெற்ற சக்தி என்னும் ஒளியாகும்.

கருவிகளைக் கொண்டு எரியும் ஒளி அல்ல .எந்தக் கருவிகளும் இல்லாமல் எரியும் ஒளி அதாவது காற்று அறியா தீபம் என்பார் வள்ளலார்.நிழல் அறியா தேகமாகும்.

அருளைப் பெற்றால் மட்டுமே உடம்பை ஒளியாக மாற்ற முடியும்.

அதற்கு இரண்டே வழிதான் வள்ளலார் சொல்லி உள்ளார்.

ஒன்று இயற்கையான உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யம்.

ஒன்று இயறகை  உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளும் சத்விசாரம்.

உயிர்கள் இடத்தில் இரக்கமும் .கடவுள் இடத்தில் அன்பும் செலுத்தினால் மட்டுமே தனிப்பெருங்கருணை என்னும் அருள் பெற்றுக் கொள்ளமுடியும்.

இரக்கமும் அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும்.செயற்கையாக இருக்கக் கூடாது.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்பார் வள்ளலார்...

மேலும் ....

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம். என்பார் வள்ளலார்

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ! என்பார்.

அறிவு என்பது எங்கு உள்ளது. ஆன்ம சிற்சபையில் உள்ளது.

அறிவு வெளிப்பட்டால் தான் அருள் அறிவு வெளிப்படும்

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்றும்.

அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்றும்

அருள் வடிவே ஒளி வடிவம் என்றும்

அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை

அருளைப் பெருவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உறவு வேண்டும். அந்த உறவிற்கு அன்பு.தயவு.கருணை.நேர்மை.உண்மை.ஒழுக்கம் வேண்டும்.

வள்ளலார் வேண்டுதல் பாடல்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை நினது அருட் புகழை இயம்பி யிடல் வேண்டும்.

செப்பாத மேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும் .
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

என்றும் அடுத்த பாடல் !

அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்

மருளாய உலகம் எல்லாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்.

இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பம் அடைதல் வேண்டும்

பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே !

என்னும் பாடல்களின் வாயிலாக  வள்ளலாரின் உண்மையான  வேண்டுதலை கேட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மோட்சவீட்டின் கதவைத் திறந்து அதாவது அருள் கதவைத் திறந்து அருளை வாரி வாரி வழங்குகிறார்.

அசுத்த ஜீவ தேகமானது .அருள் வல்லபத்தால் .சுத்த தேகம்.பிரணவ தேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியை.அருள் பூரணத்தை  பெறுதலே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.

வள்ளலார் பாடல். !

கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எல்லாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுது உண்டு அருள்ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஒங்கினவே
இத்தனையும் பொது நடஞ்செய் இறைவன் அருட்செயலே !

மேலும்.

காற்றாலே புவியாலே ககனமதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளிந்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகில்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

மேலே கண்ட பாடலின்படி எந்த சக்தியாலும் தன் உடம்பை அழிக்கமுடியாத அருள் தேகத்தைப் பெற்றவர் வள்ளலார்.

அருட்பெரும்ஜொதி ஆண்டவரின்
தனிப்பெரும்கருணையால்.மரணத்தை வென்று  மரணம் இல்லாப் பெருவாழ்வில்  வள்ளலார் வாழ்ந்து கொண்டு உள்ளார்

மனித தேகம் பெற்றவர்கள் அனைவரும் அறிந்து.புரிந்து.தெரிந்து கொண்டு வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வென்று ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு  வாழ்வாங்கு வாழலாம்.

தன்னுயிரைக் காப்பாற்ற பிற உயிர்களை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும்.

தான் வாழ பிற உயிர்களை வாழ வைக்க வேண்டும்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றெனை.!

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி!

ஞானசரியை முதல் பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலே கண்ட ஒருபாடலே போதுமானதாகும்.

சாதி சமய மதம் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு