புதன், 21 ஆகஸ்ட், 2019

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

சனி, 30 ஜூலை, 2016


ஜீவ காருண்யத்தின் வல்லபம் !

ஜீவ காருண்யத்தின் வல்லபம் !
உலக வரலாற்றில் ஜீவகாருண்யம் தான் கடவுள் வழிபாடு என்று சொன்னவர் வள்ளலார்.
ஜீவ காருண்யம் என்றால் என்றால் என்ன ? 
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு பசி.கொலை.தாகம்.பிணி.இச்சை.எளிமை.
பயம் என்பவைகளால் வரும் அபாயங்களை மனிதர்கள் நிவர்த்தி செய்வதே ஜீவகாருண்யம்.
ஜீவகாருண்யத்திற்கு முக்கியமான லட்சியம் எது என்னில் ?
ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும் இயற்கை விளக்கமாகிய அருள்  அறிவுக்றிவாய் விளங்குவதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும்.அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாய் அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாய் இருக்கின்றன என்றும் அந்த தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும்.ஆன்மவிளக்கம் மறைபடுவதால் அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தோன்றாமல்.மரணம் வந்து விடும்.

அந்த ஆன்மாக்களும் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்ற கருணையில் செய்வதே ஜீவகாருண்யம்.
ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துகளும் அஜாக்கிரதையாலும் ஊழ் வினையாலும் சத்தியமாக வராது ?
ஜீவர்களுக்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில் புருஷனை மனைவி தடுத்தாலும்.பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,தந்தையைப் பிள்ளைத் தடுத்தாலும் ,சிஷ்யரை  ஆசாரியர் தடுத்தாலும்,---அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,--குடிகளை அரசன் தடுத்தாலும்,;--அந்த தடைகளால் சிறிதும் தடைபடாமல் அவரவர்  செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லாது வேறிடத்தில் போகாது என்பதை ,உண்மையாக நம்பி,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்த வேண்டும் என்றும் அறிய வேண்டும்.
உள்ளபடி பசியால வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரங் கொடுக்க நினைத்த போது,நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியரகளை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரம் கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறமும், கீழும் மேலும்,நடுவும் பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற ,''கடவுள் விளக்கத்தையும்'' ,''திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும்'' பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்கள்.
ஆதலால் அந்தப் புண்ணியர்கள் ''கடவுளைக் கண்டவர்கள்'' என்றும்,கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும்,அறிய வேண்டும்.

பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறியவேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசி என்கின்ற அபாயத்தில் நின்றும் நீங்கச செய்கின்ற உத்தமர்கள் எந்த ஜாதியாராயினும் ,எந்தச் சமயத்தாராயினும் எந்தச் செய்கையை உடையவர்களாயினும்,... தேவர்,.முனிவர்..சித்தர் ..யோகியர்..முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்பு உடையவாகள் என்று சர்வ சக்தியை உடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.;---
ஜீவ காருண்யத்தின் வல்லபம் யாது ? என்று அறிய வேண்டில் !
உயிர்களுக்கு இன்பம் உண்டு பண்ணுவதே அதன் பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.
ஜீவ காருண்யத்தின் சொரூப ரூப சுபாவம் வியாபகம் ''அருளைப் பெரும் வழியாகும் "' அதற்கு மேல் மோட்ச வீட்டின் திறவு கோல் ,ஜீவ காருண்யத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதற்கு மேல் இறைவன் மீது அசைக்க முடியாத அன்பு வேண்டும்.அந்த தெய்வம் சமய மதங்களில் சொல்லும் தெய்வங்கள் அல்ல என்பதை உண்மை அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த உண்மையான தெய்வம் வள்ளலார் காட்டிய ,அறிமுகப் படுத்திய  ''அருட்பெருஞ் ஜோதி '' ஆண்ட்வராகும்.
அந்த தெய்வம்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் .அந்த தெய்வத்தை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...அந்த தெய்வம் வெளியில் உள்ள ஆலயங்களிலோ.சர்சுகளிலோ.மசூதிகளிலோ வேறு எங்கும் இல்லை.

ஒவ்வோரு ஜீவ ஆன்மாக்களிலும்  சிரநடு சிற்றம்பலம் என்னும் சிற்சபையில் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டும் இயக்கிக் கொண்டும். விளங்குகின்ற தெய்வம் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 
கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது 
மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் 
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில் 
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின் 
செரித்திடு ''சிற்சபை'' நடத்தைத் தெரிந்து துதித்திடுமின் 
சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !
மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகின்றார் .ஒரே கடவுள் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,அவர் சிற்சபை என்னும் ஆன்மாவில் ஒளியாக விளங்கிக் கொண்டு உள்ளார் அவரைத் தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கின்றார் ..
சுத்த சன்மார்க்கிகளும் ஆன்மநேய உடன் பிறப்புக்களும் உண்மையைப் புரிந்து அறிந்து தெரிந்து கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தால்  எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும் ..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! 

காலையிலே நின்தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்..ஞாலமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து !

ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் இன்பத்தைக் கொடுத்து சாகா வரத்தையும் தந்தார் என்று தன் அனுபவத்தை வள்ளலார் வெளிப்படுத்துகின்றார்...
மேலும் ஒருபாடல் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே வொருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எல்லாம் தருமச்
சாலையிலே  ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத் தலையமர்த்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி  அணிந்தாடும்
மா நடத்தென் அரசே என் மாலை அணிந்தருளே !

என்னும் பாடலில் இம்மை இன்பவாழ்வு .மறுமை இன்பவாழ்வு.பேரின்பவாழ்வு என்னும் மூவகையான வாழ்க்கை முறைகளையும்..தருமச்சாலை வழியாக வந்த்தால் ஒரே நாளில் ஒரே பகலில் தந்து விட்டாய் என்றும்...நான் பாடும் அருள் பாமாலைகளை சிறந்த  மாலைகளாக ஏற்றுக் கொண்டாய் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார் வள்ளலார்..

நாமும் வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யம் என்னும் தருமச்சாலை வழியாக சென்று சத்விசாரம் செய்து இறைஅருளைப் பெற்று மரணத்தை வெல்வோம்.

இதுவே ஜீவகாருண்யத்தின் வல்லபமாகும்.

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு