புலவர் ஆணவத்தை அடக்கினார் வள்ளலார் !
பன்மொழிப் புலவர் ஆணவத்தை அடக்கினார் !
வள்ளலார் காலத்தில் தமிழ் நாட்டில் பினாகபாணி முதலியார் என்பவர் ஒருவர் இருந்தார்.அவர் ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர்.
வள்ளலார் பற்றியும், தருமச்சாலையை பற்றியும் அதில் இருப்பவர்கள் பற்றியும் அவருக்கு தரக்குறைவான எண்ணம். தன் பாண்டித்தியத்தை பறை சாற்றவும் வள்ளல்பெருமான் மொழியறிவை சோதிக்கவும் சந்தேகம் கேட்பது போல் வடலூர் வந்தார்.
வள்ளலார் பள்ளிக்குச் சென்று படிக்காதவர்.தமிழ்மொழித் தவிர வேற்று மொழி எதுவும் தெரியாது என நினைத்து பலமொழிகளில் பேசி வள்ளலாரை மட்டம் தட்டலாம் என நினைத்து வந்தார். அவர் எதற்காக வந்துள்ளார் என்பது வள்ளலாருக்குத் தெரியும்.
அவர் வரும்போது வள்ளலார் அன்பர்களுக்குப் போதித்துக் கொண்டு இருந்தார்.வந்தவர் அமர்வதற்கு இடம் உண்டோ என வியம்பினார்.நிறைய இடம் இருக்கு அமருங்கள் என்றார்கள்.
என் சந்தேகங்களை தெளிவிக்க வேண்டும் என்று வள்ளலாரிடம் முதலியார் கேட்டார்.
வள்ளலார் அருகில் அமர்ந்திருந்த வேலாயுதம் அய்யாவின் ஐந்து வயது மகன் திருநாகேஸ்வரன் கையை வள்ளலார் பிடித்தார். அவர் அருளால் அவனுக்கு எல்லா மொழிகளிலும் பாண்டித்தியம் உண்டாயிற்று.
இங்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்துள்ளார்.அவர் எந்த மொழியில் கேட்டாலும் பதில் சொல்லி அவர்சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கவும் என்று வள்ளலார் அச்சிறுவனிடம் சொன்னார்.
அச்சிறுவனிடம் உங்கள் சந்தேகம் பற்றிக் கேட்டால் அவன் உங்களுக்கு விடை அளிப்பான் என்று வள்ளலார் கூற பினாகபாணி, வள்ளலாரின் கைப்பட்டதிற்கே இவ்வளவு சிறப்பா என்று உண்மை உணர்ந்து .மன்னிப்பு கேட்டார்.
நான் பலமொழி கற்றுள்ள ஆணவத்தினால் உங்கள் அருமை பெருமை தெரியாமல் சோதிக்க வந்தேன் என்னை மன்னித்து விடுங்கள்.இனிமேல் எந்த தவறும் செய்யமாட்டேன் என்று கீழே விழுந்து மீண்டும் மன்னிப்பு கேட்டார்.ஆண்டவர் மன்னிப்பார் போய்வாருங்கள் என்றார் வள்ளலார்..
இது வள்ளலார் பெற்ற அருள் அனுபவம்..அருள் பெறின் ஒரு சிறு துரும்பும் ஐந்தொழில் புரியும் என்பார் வள்ளலார்.
இதுபோல் பல சோதனைகளை அருளால் வென்றவர்.
வள்ளலார்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு